பொருள் விரிவாக்கம்

இலங்கையில் முதன்முறையாக iPhone பாவனையாளர்களுக்காக 5G சேவையை வழங்குகிறது டயலொக்

செப்டெம்பர் 21, 2023         (கொழும்பு)

 

Dialog Enables 5G for Apple iPhone

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2018ல் முதன்முறையாக தெற்காசிய பிராந்தியத்தில் 5G திறன்களை பரிசோதனை செய்தது. அதேபோல் இப்போதும் இலங்கையில் முதன்முறையாக 5G இணைப்பை Apple iPhone பாவனையாளர்களுக்கென பரிசோதனை வலையமைப்பினூடாக வழங்கவுள்ளதன் மூலம் 5G மைல்கல்லை மீண்டும் எட்டிப்பிடித்துள்ளது.

iPhone 12 அல்லது அதற்கு பின் வந்த iPhone பாவனையாளர்கள் iOS 17ம் பதிப்பை update செய்வதன்மூலம் Dialog 5G இன் மின்னல் வேக இணையத்துடன் இணைந்து 1Gbps வரையிலான வேகத்தில் தரவிறக்கங்களையும் பதிவேற்றுங்களையும் மேற்கொள்ளலாம். நாடு முழுவதும் 70 பகுதிகளில் உள்ள இலங்கையின் மிகப்பெரிய 5G பரிசோதனை வலையமைப்பினூடாக நீங்கள் இச்சேவையை அணுக முடியும். இச்சேவை கொழும்பு உட்பட தெரிவுசெய்யப்பட்ட நகரங்களில் கிடைக்கப்பெறும். அந்நகரங்களின் பட்டியலை www.dialog.lk/5g எனும் இணைப்பின் ஊடாக பார்வையிடலாம்.

இந்த அற்புதமான தருணத்தை கொண்டாடும் வகையில் டயலொக் தனது Apple iPhone வாடிக்கையாளர்களுக்கு 5GB ஐ Dialog இன் 5G பரிசோதனை வலையமைப்பினூடாக Dialog 5G திறன்களை சோதித்தறிந்துகொள்ள இலவசமாக வழங்குகின்றது.

இந்த அறிவிப்பு இலங்கை மற்றும் தெற்காசியாவில் பல்வேறு மைல்கற்களையும் பதிவு செய்துள்ளது. பிராந்தியத்தின் முதல் 5G பரிசோதனை வலையமைப்பு, முதல் தனிப்பட்ட 5G வலையமைப்பு - பரிசோதனை, முதன்முறையாக தரநிர்ணயத்தின் அடிப்படையிலான நிலையான-கம்பியில்லா 5G வெள்ளோட்ட பரிமாற்றம் 2018 டிசம்பரில் நடைபெற்றது. தனது வர்த்தகநாம வாக்குறுதியான 'எதிர்காலம் இன்றே' என்பதற்கு சான்று பகர்கின்றன வகையில் டயலொக் ஆனது தொடர்ந்தும் தொழில்நுட்ப மேம்பாடுகளை நாட்டிலும் பிராந்தியத்திலும் செயற்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்துவருகின்றது.

டயலொக் தனது 5G பரிசோதனை வலையமைப்பை எந்தெந்த பிராதேசங்களுக்கு விஸ்தரிக்கின்றது என்பதை வாடிக்கையாளர்கள் www.dialog.lk/5g தளத்தை பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.