பொருள் விரிவாக்கம்

Dialog Innovation Challenge இறுதிப்போட்டிக்கான தனது முதல் ஐந்து இறுதிப்போட்டியாளர்களை அறிவித்தது

2024 ஆகஸ்ட் 02         கொழும்பு

 

Digital Innovation Fund (DIF), Managed By BOV Capital And Powered
                        By Dialog Axiata PLC

மேலுள்ள புகைப்படத்தில், Dialog Innovation Challenge-இன் முதல் ஐந்து இறுதிப்போட்டியாளர்கள்; முதல் நிரை - SeaLanka, BODO, Center-SmartAqua, இரண்டாம் நிரை – FlashGuard, AudiPhix

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, உள்நாட்டு பிரச்சினைகளை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தீர்த்திட அயராத அர்ப்பணிப்பை அளிப்பதோடு இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தை உந்தச்செய்யும் தனது Dialog Innovation Challenge-இன் மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற முதல் ஐந்து இறுதிப்போட்டியாளர்களை அறிவித்தது.

இப்போட்டி SeaLanka-வின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மீன்பிடி வலயத்தை எதிர்வுகூறும் செயலி (app), BODO-வின் விடுதி முன்பதிவு மற்றும் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு, ஒலித்திறன் செயலாக்கக் குறைப்பாட்டுக்கான AudiPhix-இன் செயலி (app), ஒளியுணர் வலிப்பு தடுப்புக்காக வடிவமைக்கப்பட்ட FlashGuard-இன் Smart கண்ணாடிகள், இறால் வளர்ப்போருக்கு Smart Aqua அளிக்கும் IoT தீர்வு உள்ளிட்ட அபரிமிதமான கண்டுபிடிப்புகளை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இவ்விறுதிப் போட்டியாளர்கள் இனி துறைசார்ந்த வல்லுனர்கள் அளிக்கும் கடுமையான வழிகாட்டல் மற்றும் பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்று தமது செயற்றிட்டங்களை மேலும் மெருகேற்றுவர். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஒவ்வொரு இலங்கையர், சமூகங்கள் மற்றும் வணிகங்களின் வாழ்வை குறிப்பிடத்தக்களவில் மேம்படுத்தக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளன.

2023ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பித்த Dialog Innovation Challenge, இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் என்ற நோக்குடன் உருப்பெற்றது. இப்போட்டிக்கு நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் 1200 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். இவை பல்வேறு வளமிக்க யோசனைகளையும் தீர்வுகளையும் முன்வைத்தன. இறுதிப்போட்டியாளர்கள் மதிப்புமிக்க நடுவர் குழாத்தினால் தேர்வு செய்யப்பட்டனர். கண்டுபிடிப்புகள் எப்படி பிரச்சினைகளை தீர்க்கின்றன, அவை பரவலான ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை, அவற்றின் தொழில்நுட்பத்தின் தயார்நிலை ஆகியவற்றை கொண்டு இம்மதிப்பீடு இடம்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கான நடுவர் குழாத்தில் John Keels குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் மற்றும் குழும பிரதம தகவல் அதிகாரியாக உள்ள கலாநிதி ரமேஷ் சண்முகநாதன்; தேசிய சேமிப்பு வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சஷி கண்டம்பி; Nations Trust Bank PLC-யின் தலைவர் ஷெரின் காடர்; டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம டிஜிட்டல் சேவைகள் அதிகாரி மற்றும் டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சியின் தலைவர் ரேணுகா பெர்னாண்டோ; டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம தகவல் அலுவலர் அசேல பெரேரா; டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம தொழில்நுட்ப அதிகாரி ரங்க கரியவசம்; மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தளங்களின் வணிகத் தலைவர் விரங்க செனவிரத்ன ஆகியோர் அடங்குவர்.

போட்டி தொடர்ந்து செல்கையில், இறுதிப்போட்டிக்கு மேலும் 5 கண்டுபிடிப்பாளர்கள் தெரிவாவர். பங்கேற்பாளர்களில் இறுதிப் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க, டயலொக் அதன் கூட்டுறவுக் கூட்டாளிகளுடன் சேர்ந்து, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைப்பான (ICTA), இலங்கை பொறியியலாளர்கள் நிறுவகம் (IESL), இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு (SLIC), தேசிய புதுமை நிறுவனம் (NIA), இலங்கை வர்த்தக மன்றம் (CCC), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM), இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம் (SLASSCOM) மற்றும் இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சங்கம் (DMASL) ஆகியவற்றுடன் இணைந்து பிரத்தியேக பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்யும். அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது நடுவர்கள் தரும் முக்கியமான கருத்துக்களையும் பெற்றுக்கொள்வர். இது அவர்களது கண்டுபிடிப்புகளை மேம்படுத்த உதவும். இலங்கையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்குப்பதோடு புத்தாக்கத்தையும் வளர்க்க வேண்டும் எனும் டயலொக் நிறுவனத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கின்ற வகையில், இறுதிப் போட்டியாளர்களுக்கு 5 மில்லியன் ரூபாய்க்கான பரிசுக்குவியலில் பங்கு, அத்துடன் மேம்பட்ட ஆய்வக மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அணுகும் வாய்ப்பு, முன்னணி தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் ரூ. 500 மில்லியன் DIF (Digital Innovation Fund) முதலீட்டு நிதியின் பங்கிற்கு தம் திட்டத்தை முன்வைக்கும் வாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவர்.

Dialog Innovation Challenge-ஐ தெரண தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் பி. ப. 10:30 மணியளவில் காணலாம். மேலதிக தகவல்களுக்கு, https://ic.dialog.lk/ ஐ பார்வையிடவும்.