டயலொக் ஆசி ஆட்டா அதிக உள்ளடங்கலுக்கு வழிவகுக்கும் விதமாக DeafTawk ஐ அறிமுகப்படுத்தியுள்ளது
ஏப்ரல் 07, 2023 கொழும்பு
படத்தில் இடமிருந்து வலமாக : ADSign கிரியேஷன்ஸ் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் சேவை ஏக உரிமையாளர் புத்திக தெமடஹெட்டிகே, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் இடர் மற்றும் இணக்கப்பாடு குழு தலைவர் அசங்க பிரியதர்ஷன, DeafTawk இணை நிறுவனர் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி அப்துல் காதீர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஹொங் சூ வொங், சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களின் தலைவர் ஷம்மி டயஸ், GSMA சந்தை ஈடுபாடு பணிப்பாளர் துலிப் திலகரத்ன.
காதுகேளாத மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களை அவர்களின் சமூகங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் வகையில், டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி, நாட்டிலேயே முதன்முறையாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சைகை மொழி விளக்க செயலியான (App) ‘DeafTawk’ இன் மும்மொழி பதிப்பை இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
டயலொக் நிறுவன வளாகத்தில், செவித்திறன் குறைபாடுள்ள நபர்கள் மற்றும் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் போது இந்த செயலி (App) அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதில் டயலொக் மேற்கொண்டுள்ள சமீபத்திய முயற்சி இதுவாகும், இது மாற்றுத்திறனாளிகளை டிஜிட்டல் ரீதியில் ஒன்று சேர்ப்பதான GSMA கொள்கைகளுடன் இணைந்ததாக அமைந்துள்ளது. DeafTawk பயன்பாடானது பயனரின் விரல் நுனியில் நிகழ்நேர சைகை மொழி தீர்வை (real-time sign language solution) வழங்குகிறது, மேற்படி App 50 சைகைவழி மொழிபெயர்ப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. மேலும், பயனர்களுக்கு பல்வேறு கட்டண பெக்கேஜ்களை இந்த App வழங்குகின்றது, அதன்படி 10 நிமிடங்களுக்கு ரூ.100 +வரி, 20 நிமிடங்களுக்கு ரூ.200 +வரி, 25 நிமிடங்களுக்கு ரூ.250 +வரி, 50 நிமிடங்களுக்கு ரூ. 500 +வரி மற்றும் 100 நிமிடங்களுக்கு ரூ.1000 +வரி உள்ளிட்ட பெக்கேஜ் தேர்வை இது வழங்குகிறது. டயலொக் வாடிக்கையாளர்கள் எந்த டேட்டா கட்டணமும் இன்றி இந்த App ஐ பயன்படுத்தலாம். மற்றும் பெக்கேஜ்களுக்கு 'பில்லில் சேர்த்தல்' (add to bill) அம்சத்தைப் பயன்படுத்துவதற்கான தெரிவையும் இது கொண்டுள்ளது. இந்த App ஐ Google Play Store அல்லது Apple App Store இல் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். டயலொக் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு டேட்டா கட்டணங்கள் அறவிடப்படும்.
மேற்படி App ஐ அறிமுகப்படுத்துவது குறித்து கருத்துத் தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஹொங் ஸூ வொங் (Hong Zhou Wong), "DeafTawk App இன் உள்ளூர்மயமாக்கப்பட்ட மும்மொழி பதிப்பை இலங்கையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் விரல் நுனியில் நிகழ்நேர சைகை மொழி தீர்வை வழங்குகின்ற இந்த செயலி (App) காதுகேளாத மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்திற்கான மாற்று கருவியாக அமைந்துள்ளது. இலங்கையர்களை வலுவூட்டுவதற்கும் வளப்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு டயலொக் உறுதிபூண்டுள்ளது. DeafTawk App இன் அறிமுகமானது, அனைவருக்கும் சமீபத்திய தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய, மேலும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்"என்றார்.
DeafTawk இன் பிரதம நிறைவேற்று அதிகாரி அலி ஷபீர் (Ali Shabbir) கருத்துத் தெரிவிக்கையில், "DeafTawk இல், உலகம் முழுவதும் உள்ள 466 மில்லியன் காதுகேளாதவர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் இருக்கிறோம், மேலும் டயலொக் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது இலக்கை அடையும் விதமாக தொடர்பாடல் இடைவெளியைக் குறைப்பதற்கும் இலங்கையிலுள்ள காதுகேளாத சமூகத்திற்காக குரல் கொடுப்பதற்கும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அந்தவகையில், இந்த உலகமானது அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பானதாக மாற்றும் நமது முயற்சியில் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்" என்றார்.
சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களின் தலைவரான சம்மி டயஸ் கூறுகையில், “காதுகேளாதவர்கள் பல்வேறு தகவல் தொடர்பு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் பொதுவாக சமூகத்தில் மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் கூட சைகை மொழி மொழிபெயர்ப்பாளரின் உதவி தேவைப்படுகிறது. DeafTawk செயலியின் உதவியுடன் தகவல்தொடர்புகளை மிகவும் எளிதாகவும், திறமையாகவும், விரைவாகவும் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன், மேலும் இந்த அணுகக்கூடிய மற்றும் சாத்தியமான தீர்வுடன் 'உரையாடலில் சேர்வதற்கு' இலங்கையிலுள்ள காது கேளாதோர் சமூகத்திற்கு உதவியதற்காக டயலொக் மற்றும் DeafTawk க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.
https://onelink.to/yxhp82 வழியாக DeafTawk app ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.