பொருள் விரிவாக்கம்

டயலொக் இடமிருந்து கல்வி நிறுவனங்களுக்கான ஆன்லைன் கற்றல் செயற்பாட்டு சிறப்பு பக்கேஜ்கள்

ஜுலை 26, 2021         கொழும்பு

 

news-1

கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் கார்ப்பரேட் சொல்யூஷன்ஸ் பிரிவான டயலொக் எண்டர்பிரைஸ், நாடளாவிய ரீதியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தடையின்றி ஆன்லைன் கற்றலை எளிதாக்குவதற்காக “டயலொக் டீச்சர்ஸ் பேக்கேஜ்”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் கோவிட் -19 இன் மூன்றாவது அலையின் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக Zoom, Microsoft Teams போன்ற டிஜிட்டல் தளங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுவதால், மாணவர்கள் தங்கள் கற்றல் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு சமமான அணுகல் இருப்பதை டயலொக் உறுதி செய்கிறது. ‘Dialog Teachers Package’ இப்போது ஆன்லைன் கற்பித்தல் நோக்கங்களுக்காக இந்த வீடியோ கான்பரன்சிங் தளங்களுக்கு இடம்பெயர்ந்த எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் அதன் அசல் விலையான ரூ. 900 இல் இருந்து 30% விலைக்கழிவில் ரூ. 600 (+வரி) க்கு வழங்குகின்றது. மேலும் விரிவுறையாளர்கள் தங்களது அனைத்து ஆன்லைன் கற்பித்தல் தேவைகளுக்கும் வரையறையற்ற டேட்டாவுடன் தொடர்வதற்கு கல்வி நிறுவனங்களுக்கு Work and Learn Lite பக்கேஜ்களை ரூ.540 க்கு டயலொக் வழங்குகின்றது. மேலும், டயலொக்கின் Work and Learn Lite பக்கேஜ் ரூ. 220 மட்டுமே. ரூ. 900 (+வரி) Dialog Home Broadband Starter பக்கேஜ் மாணவர்களுக்கு வழங்கப்படுவதால் மேலும் தடையின்றி கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுகின்றது. மாணவர்கள் தங்களின் ஒன்லைன் கற்றல் செயற்பாடுகளுக்கு மொத்தம் 50 GB வரை பெற்றுக்கொள்ள முடியும் (Starter பக்கேஜ் - 20GB + Work & Learn Lite 220 பக்கேஜ் - 30 GB)

கோவிட் -19 தொற்றுநோய் உள்ளூர் மற்றும் உலகளாவிய கல்வி முறையில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், அதிக மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வியுடன் இலங்கை புதிய டிஜிட்டல் சகாப்தத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளையும் மற்றும் மாணவர்களின் கல்வியினையும் தொடர அதிகாரம் அளிக்கும் அதே வேளையில், வழங்கப்பட்ட டேட்டா ஒதுக்கீட்டை கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வலைத்தள வடிகட்டலுடன் அதன் புரோட்பாண்ட் இணைப்புகள் செயற்படுவதை உறுதி செய்கின்றது. இலங்கையரின் வாழ்க்கை முறையினையும், நிறுவனங்களையும் மேம்படுத்துதல் மற்றும் வளப்படுத்துதல் என்ற அதன் பார்வைக்கு ஏற்ப, ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் கற்றல் பயணத்தைத் தொடர்வதற்கு ஆன்லைன் தளங்களுக்கு இடம்பெயர்வதால், வழிமுறையாக கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த டேட்டா செலவுகளை கணிசமாகக் குறைக்க டயலொக்கின் Teachers பக்கேஜ் உதவும்.

மேற்குறிப்பிடப்பட்ட பக்கேஜ்கள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு https://dlg.lk/3dmVJDg க்கு செல்லுங்கள்