பொருள் விரிவாக்கம்

டயலொக் ஸ்ரீலங்கா பகிரங்க கோல்ஃப் செம்பியன்ஷிப் போட்டிகள் 2023 - மே 30 ஆம் திகதி ஆரம்பம்

சிறப்பு அழைப்புப் போட்டியும் கொழும்பு றோயல் கோல்ஃப் கழக மைதானத்தில் (RCGC) நடைபெறும்.

2023 மே 15         கொழும்பு

 

Innovative IoT Solution to Nurture Local Rubber Plantations

Dialog Enterprise குழுமத்தின் பிரதம அதிகாரி நவின் பீரிஸ் போட்டிக்கான அனுசரணையை இலங்கை கொல்ஃப் தலைவர் மைக்கேல் மாகலவிடம் கையளிப்பதை படத்தில் காணலாம். உடனிருப்பவர்கள் (இ- வ) டயலொக் ஆசிஆட்டா பிராண்ட் மற்றும் மீடியா, சந்தைப்படுத்தல் குழும துணைத் தலைவர் ஹர்ஷ சமரநாயக்க மற்றும்இலங்கை கொல்ஃப் துணைத் தலைவர் ரணில் பீரிஸ்.

இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு வழங்கிவரும் நீண்ட கால அர்ப்பணிப்பின் மற்றுமொரு அங்கமாக , 2023 மே 30 ஆம் திகதி கொழும்பு றோயல் கோல்ஃப் கழக மைதானத்தில் (RCGC) நடைபெறவுள்ள இலங்கை பகிரங்க கோல்ஃப் செம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

1972 ஆம் ஆண்டு முதன்முதலில் விளையாடப்பட்ட இலங்கை பகிரங்க கோல்ஃப் போட்டிகள் முக்கியத்துவம் மிக்க கோல்ஃப் செம்பியன்ஷிப் போட்டிகளாக குறிப்பிடத்தக்கவை, மேலும் அதன் தொடக்கத்தில் இருந்து தமது மகத்தான திறமைகளை இலங்கை கோல்ஃப் வெளிப்படுத்தியுள்ளது, அதன்படி 1990 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை இலங்கை கோல்ஃப் தனதாக்கிய பெருமையை கொண்டுள்ளது.

தற்போது ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் தொழில்சார் கோல்ஃப் சுற்றுப்பயணத்தில் (PGTI) பங்குபற்றி வருகின்றனர். தற்போதைய தரவரிசையில் முன்னணியிலுள்ள சௌஹான் ஓம்-பிரகாஷ் மற்றும் முன்னாள் இலங்கை பகிரங்க கோல்ஃப் வெற்றியாளர் ரஷீத் கான் ஆகியோர் ஆசிய சுற்றுப்பயணத்தில் இலங்கை கோல்ஃப் அணியில் இடம்பெற்றுள்ளமை இலங்கை கோல்ஃப் அணிக்கும் கோல்ஃப் போட்டிக் களத்திற்கும் வலுவான மதிப்பை சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும், ஏழு தடவைகள் ஓபன் (பகிரங்க) செம்பியனான ஆர்.ஏ.அநுர ரோஹன, அதே சாதனையை தன்னுடன் பகிர்ந்து கொண்டுள்ள மறைந்த வீரரான கே. நந்தசேன பெரேராவுடனான சாதனையை இம்முறை முறியடிக்கும் சாத்தியங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மூன்று தடவைகள் செம்பியனான கே.பிரபாகரன் மற்றும், மற்றொரு முன்னாள் செம்பியனான என். தங்கராஜா ஆகியோர் ஆசிய சுற்றுப்பயண சிறந்த கோல்ஃப் வீரர் உதயன் மானேக்கு சிறந்த சவாலாக இருப்பர் என எதிர்பார்க்கலாம், PGTI பங்களாதேஷின் முன்னணி தொழில்சார் போட்டியாளரான ஜமால் ஹுசைன், பாகிஸ்தான், இந்தியா மற்றும் கொரியாவைச் சேர்ந்த சிறந்த கோல்ஃப் வீரர்கள் பலர் போட்டிக் களத்தில் சவால் மிக்க போட்டியாளர்களாக திகழ்வர். ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் வீரர்கள் இலங்கை பகிரங்க கோல்ஃப் போட்டிகள் 2023 ஐ அலங்கரிக்கவுள்ளனர். மேலும், அவுஸ்திரேலியாவில் இருந்து தனிநபர் போட்டியாளர் மற்றும் அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட கோல்ஃப் வீரர் ஆகிய தரத்திலானோரும் இப்போட்டிகளில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது PGTI இன் முதல் 50 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள மிதுன் பெரேரா, இலங்கை பகிரங்க செம்பியன் கிண்ணத்தை இன்னும் வெல்லவில்லை, இருந்தபோதிலும் இம்முறை இந்த சவாலை அவர் வெல்வார் என்பது உறுதி. விஜித பண்டார, பி.ஜி. லலித் குமார், திஸ்ஸ சந்திரதாச ஆகியோர் RCGC இன் அனுபவமிக்க தொழில்சார் நிபுணத்துவமிக்க போட்டியாளர்கள் என்பதுடன், முன்னாள் தேசிய செம்பியனான எம்யூ சானக்க பெரேரா, சாலித புஷ்பிக மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரர் ரேஷான் அல்கம ஆகியோரும் இலங்கை கோல்ஃப் அணியை வலுபடுத்துவர்.

"கொவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, தேர்ந்த மற்றும் புதிய கோல்ஃப் வீரர்கள் தங்கள் தடைகளை அகற்றி களத்தில் இறங்குவதற்கான சந்தர்ப்பம் இது. அத்துடன் நமது வருடாந்த போட்டியில் கொண்டாட்டமும் போட்டியும் நிறைந்த ஒரு நாளில் பெயர்பெற்ற RCGC திடலில் எங்களுடன் இணையலாம்" என இலங்கை கோல்ஃப் தலைவர் மைக்கல் மகல தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் "வெற்றிகரமான போட்டியை நடத்துவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கோல்ஃப் சமூகத்திற்கும் ஒரு அற்புதமான விளையாட்டுத் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு எமக்கு உதவியமைக்காக நமது மதிப்பிற்குரிய பங்குதாரரும் அனுசரணையாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.

“நாட்டின் தேசிய பகிரங்க கோல்ஃப் செம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதில் பேருவகை கொள்கிறோம்” என Dialog Enterprise இன் குழும தலைமை அதிகாரி நவீன் பீரிஸ் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர் “அத்துடன் சிறப்பு ‘Dialog அழைப்பு போட்டித்தொடர்’ ஐ அறிமுகப்படுத்துவதிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது கோல்ஃப் ஆர்வலர்களை ஒன்று சேர்ப்பதற்கு ஒரு தளமாக அமையும்.” என்றார்.

இலங்கை பகிரங்க கோல்ஃப் 2023 போட்டிகளுக்கு முன்னதாக, மேரியட் கொழும்பின் COURTYARD வழங்கும் உயர்தர Pro- Am போட்டியானது, உலகெங்கிலுமான Marriott Hotel சங்கிலித் தொடரின் கோல்ஃப் தூதுவரான ஐரோப்பிய சுற்றுப்பயண கோல்ஃப் வீரர் ஷிவ் கபூர் அவர்களால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஷிவ் கபூர் Pro-Am நிகழ்வில் பங்கேற்பதுடன் , இலங்கை பகிரங்க போட்டிகளில் பங்குபெறும் ஏனைய அனைத்து தொழில்சார் போட்டியாளர்கள் கொழும்பு றோயல் கோல்ஃப் கழகம் மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய கழகங்களின் புதிய கோல்ஃப் வீரர்களுடன் விளையாடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டயலொக் பகிரங்க கோல்ஃப் செம்பியன்ஷிப் 2023 போட்டிகள் இலங்கை கோல்ஃப் வீரர்களுக்கு இலங்கை கோல்ஃப் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் சிறந்தவொரு தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கத்து.

டயலொக் ஸ்ரீலங்கா பகிரங்க கோல்ஃப் செம்பியன்ஷிப் போட்டிகள் மே 30 முதல் ஜூன் 02 வரை நான்கு சுற்றுகளாக நடைபெறும், மேலும் இலங்கை கோல்ஃப் ஏற்பாடு செய்துள்ள இப்போட்டிகளுக்கான “நல்லெண்ண” அனுசரணையாளர்களாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், Marriott Colombo வின் Courtyard, Transcend Drive , OLU, Lanka IOC, GFlock மற்றும் Prima முதலியோர் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட் , கரப்பந்தாட்டம், வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, பிரிமியர் கால்பந்து போட்டிகள் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.