பொருள் விரிவாக்கம்

டயலொக், 2026 ஆசிய விளையாட்டுகளுக்காக யாழ்ப்பாணத்தில் பாராலிம்பிக்ஸ் திறமையாளர்களை வலுப்படுத்துகிறது

2025 பிப்ரவரி 03         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

இலங்கையின் #1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2026 ஆசிய விளையாட்டுகளுக்காக சிறந்த திறமையாளர்களை கண்டுபிடித்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு யாழ்ப்பாண பாராலிம்பிக்ஸ் திறன் கண்டறிதல் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தடகள வீரர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்கிறது. இது உலகளாவிய அரங்கில் பாராலிம்பிக் விளையாட்டுகளிலும், பிரதிநிதித்துவத்திலும் தன்னுடைய அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.

ஜனவரி 24 ஆம் திகதி நடைபெற்ற திறன் கண்டறிதல் திட்டம், இலங்கை தேசிய பாராலிம்பிக்ஸ் குழு (NPC) உடனான டயலொக் நிறுவனத்தின் தொடர்ச்சியான கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சி, மாத்தறை மாவட்டத்தில் முன்னதாக நடத்தப்பட்ட திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம், தடகளம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பவர்லிஃட்டிங், படகோட்டுதல் சக்கர நாற்காலி, டென்னிஸ், நீச்சல், வில்வித்தை போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் திறனுள்ள தடகள வீரர்களை அடையாளம் கண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அவசியமான வளங்களையும் ஆதரவையும் வழங்கி, இலங்கையின் பாராலிம்பிக் விளையாட்டாளர்களின் வெற்றியில் முக்கிய பங்காற்றுகிறது.

இது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்த லெப்டினன்ட் கர்னல் தீபால் ஹேரத், "கடந்த 25 ஆண்டுகளாக, டயலொக் ஆசிஆட்டாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், மேலும் இன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் முறையாக பாராலிம்பிக்ஸ் திறன் கண்டறிதல் திட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளோம். இந்த முயற்சி மாவட்டம் முழுவதிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து, அவர்களை பாரா விளையாட்டுகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். பாராலிம்பிக்ஸ் திறன் கண்டறிதல் திட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், போட்டியாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த திறமை மற்றும் திறன்களையும் பாராட்டுகிறேன். இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக டயலொக் ஆசிஆட்டாவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்கிறோம்." என்றார்.

"இலங்கையில் தேசிய விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு டயலொக் நீண்ட காலமாக ஆதரவாளராக உள்ளது, குறிப்பாக அனைத்து துறைகளிலும் திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. பாராலிம்பிக்ஸ் தடகள வீரர்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பு நிலையானது, குறிப்பாக 2026 ஆசிய விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களுக்கு தேவையான வளங்களையும் ஆதரவையும் வழங்கி அவர்களை உலகளவில் பிரகாசிக்க வைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்," என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் துணைத் தலைவர் - பிராண்ட் மற்றும் ஊடகம் ஹர்ஷ சமரநாயக்க கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் வளர்ச்சிக்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து , Esports போன்ற விளையாட்டுகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது. NPC உடனான தனது கூட்டாண்மை மற்றும் ஜனாதிபதியின் தங்கக் கோப்பை கைப்பந்து மற்றும் தேசிய வலைப்பந்து மற்றும் ரக்பி போட்டிகள் போன்ற பிற முயற்சிகள் மூலம், டயலொக் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் பிரகாசிக்கத் தேவையான அங்கீகாரம், பயிற்சி மற்றும் ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்கிறது, அதே நேரத்தில் இது மக்களிடையே பன்முகத்தன்மையும், வகுபாடின்றி சமத்துவத்தையும் ஊக்குவிக்கிறது.