பொருள் விரிவாக்கம்

நம் நாட்டு மகளிருக்கு உத்வேகம் அளித்துவரும் ‘தோழி’யின் வலைத்தளம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகிறது

2023 டிசம்பர் 27         கொழும்பு

 

 Official Website to Support Inclusive Online Journeys

புகைப்படம் இடமிருந்து வலமாக: லசந்த தேவப்பெரும - குழும பிரதம தொழிற்பாட்டு அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அஷானி சேனாரத்ன - பொது முகாமையாளர், குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சாண்டரா டீ சொய்ஸா - குழும பிரதம வாடிக்கையாளர் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ரேகா விஜேயசூரிய - துணைத்தலைவர், மனிதவள மாற்றம் - குழும கூட்டுத்தாபன அபிவிருத்தி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அசங்க பிரியதர்ஷன - இடர் மற்றும் இணக்கப்பாடு குழுமத்தலைவர் மற்றும் பேண்தகைமை தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி

இலங்கையில் முதன்முறையாக ஒரு வலைத்தளம் மும்மொழியிலும் ஆலோசனை சேவையை வழங்குகிறது என்றால் அது டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் தோழி தான். புதுப்பொலிவுடன் கூடிய இதன் வலைத்தளத்தின் வெளியீடு அண்மையில் இடம்பெற்றது. ஒரு தனிப்பட்ட சிக்கல் வந்தால் யாரிடம் போய் ஆலோசனை கேட்பது என்ற சிக்கல் எல்லோருக்கும் பொதுவானதே. இவ்வாறு பெண்களுக்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் நிபுணர்களுடன் கலந்துபேசி தீர்வை பெற Thozhi.lk வாய்ப்பளிக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் உதவி பெறுபவர் தான் யாரென்று குறித்த நிபுணருக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

பாலின பாகுபாட்டு வன்முறை, அலுவலகத்தில் ஒடுக்குமுறை, தலைமைத்துவ பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் பெரிதாக இல்லாமை, மனநலம் குறித்து பேசவோ ஆலோசனை பெறவோ போதிய வாய்ப்பு வசதிகள் இன்மை முதலிய முக்கியமான சமூக பிரச்சினைகளை தீர்த்து வைக்க தேவையான ஆதரவை வழங்குவதற்காகவே இத்தோழி கருவுற்றாள். உதவி கேட்டு வரும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட விதத்தில் ஆலோசனைகள் வழங்குவதே தோழியின் நோக்கம். அதுமட்டுமின்றி சேவையை பெறுபவர்கள் நிபுணருடன் கலந்துரையாடி சேவையை பெற்றாலும், தாம் யார் என்று எவருக்கும் வெளிப்படுத்த வேண்டியதில்லை. இந்த சேவைக்கு நிறுவனத்துடன் Women in Need, Without Borders Sri Lanka, Doc 990 மற்றும் ஹிதவதி: LK Domain Registry இனால் நிதியளிக்கப்படும் திட்டம் ஆகியன கைகோர்த்துள்ளன.

இதுநாள் வரை 500,000 இற்கும் மேற்பட்டோர் இந்த இலவச தளத்தால் பயனடைந்துள்ளனர். இதில் பெண்கள் பொதுவாக வெளியில் பேச அஞ்சும் விடயங்களான துஷ்பிரயோகம், பாலியல் சுகாதாரம், கருத்தடை, உறவுமுறை சிக்கல்கள் மற்றும் குடும்ப வன்முறை முதலியன தொடர்பாக தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் பேசி தீர்வு காண முடியும். இதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் அவர்களது தொலைபேசி இலக்கம் மூலம் தம்மை பதிவு செய்து ஒரு Profile ஐ உருவாக்கி பின்னர் அதன் வழியாக கேள்விகளை சமர்ப்பிக்கலாம். கேள்வி கேட்பவர் யாரென்பது நிபுணருக்கு தெரியாது. கேள்விகள் கேட்கப்பட்டு 48 மணிநேரத்திற்குள் குறித்த விடயத்துக்கு உரிய நிபுணரால் பதிலளிக்கப்படும்.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் இடர் மற்றும் இணக்கப்பாடு குழும தலைவர் மற்றும் பேண்தகைமை தலைவர் அசங்க பிரியதர்ஷன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “ பெண்களின் சுயமேம்பாட்டுக்கான ஒரு கலங்கரை விளக்கம்போல் தோழி திகழ்ந்து வருகிறது. அவர்கள் பொது வெளியில் பேசுவதற்கு அஞ்சும்/கூச்சப்படும் விடயங்களை பயமின்றி பேச இது இடமளிக்கிறது. பெண்கள் தம் வாழ்வில் சாதனைகள் பல புரிந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்ப்போராக்குதற்கு தோழி அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. மேலும் இந்த மறுவெளியீடு மூலம் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கொண்ட அனைத்தும் அறிந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் எமது குறிக்கோளை நோக்கியதொரு முக்கியமான படியாக அமையும்” என்றார்.

2017ல் GSMA ஆதரவளிக்க Dialog முன்னெடுத்த ஒரு ஆய்வு முன்னெடுப்பிலிருந்து கருவுற்றவளே இந்த தோழி. இத்திட்டம் ஐக்கிய நாடுகளின் பேண்தகைமை அபிவிருத்தி இலக்கு 5: பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் அனைத்து மகளிர் மற்றும் பெண்களுக்கு சுயமேம்பாட்டை அளித்தல் என்பதற்கு அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தலைப்புகள் குறித்து விழிப்புணர்வை பரப்புவதிலும் அவை குறித்த சிக்கல்களை தீர்ப்பதிலும் உள்ள இடைவெளியை போக்குவதை கண்ணாகக் கொண்டு செயலாற்றப்படுகிறது. இணையத்தின் துணை கொண்டு கலாச்சாரம் என்ற பெயரில் முடக்கப்படும் பெண்களை அவர்களின் சொந்தக்காலில் நிற்குமளவுக்கு மேம்படுத்தும் ஒரு தளமாக தோழி தொழிற்படுகிறது. அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கொண்ட அனைத்தும் அறிந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் எமது குறிக்கோளை நோக்கியதொரு முக்கியமான படியாக இந்த மறுவெளியீடு அமையும்.

தோழி குறித்த மேலதிக தகவல்களை https://yeheli.lk/ ஊடாக பார்வையிடுங்கள்.