எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிரீம் இலங்கையின் எதிர்கால திறமைகளை வளர்ப்பதற்காக ‘டயலொக் ' அனுசரணையில் 'சுப்பர் ஹீரோஸ்’ எனும் போட்டியை நடத்துகின்றது
மே 9, 2022 கொழும்பு
படத்தில் (இடமிருந்து வலமாக): ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணைத் தலைவரும், ஃப்ரோசன் கன்ஃபெக்சனரி பிரிவின் தலைவருமான சதீஷ் ரத்நாயக்க அவர்கள் மற்றும் டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணாயக்கார ஆகியோரை காணலாம்.
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மற்றும் நம்பகமான ஐஸ்கிரீம் வர்த்தக நாமமான எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிரீம், நாட்டின் எதிர்கால சந்ததியினருடன் இணையும் புதிய முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளது. அதனடிப்படையில், ஐஸ்கிரீம் மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பில் முன்னணி வகிப்பது மட்டுமல்லாமல் இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்துடன் இணைந்து பிள்ளைகளை இணைக்கவும், பங்குபற்றுதலுக்கும் மற்றும் அவர்கள் வளரவும் உதவும் புதியதோர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகின்றது.
டயலொக் அனுசரணையில் நடைபெறும் மேற்படி எலிஃபன்ட் ஹவுஸ் 'சுப்பர் ஹீரோஸ்' போட்டியானது நாடளாவிய ரீதியிலான திறமைகாண் போட்டியாகும், இது 'சுப்பர் டெலன்ட்', 'சுப்பர் இன்னோவேட்டர்' மற்றும் ' சுப்பர் ரெஸ்பான்சிபிள்' என மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றது. புதுமையான திறன்கள், சிறந்த திறமைகள் மற்றும் நிலையான வாழ்க்கையை நடத்துதல் என சிறந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் நோக்கில் இப்போட்டிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, மூன்று பிரிவுகளிலும் மூன்று வெற்றியாளர்கள் 4 மாதங்களுள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இப்போட்டியில் பங்கேற்கும் பிள்ளைகளுக்கான வாராந்த பரிசுகள் வெற்றிப் பரிசுகள் தொடர்பான அறிவிப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 4.25 மணிக்கு TV தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். டயலொக் அனுசரணையில் வலுவூட்டப்படும் மேற்படி எலிஃபன்ட் ஹவுஸ் 'சுப்பர் ஹீரோஸ்' போட்டி நிகழ்ச்சியானது இலங்கையின் இளைய தலைமுறையின் திறமைகளை வளர்த்தல், மேம்படுத்தல், உற்சாகமூட்டல் என்பது மட்டுமன்றி வெகுமதிகளுடன் அவர்களின் கல்வித் தேடல்கள் மற்றும் திறமை மேம்பாட்டு வாய்ப்புகளுக்கு உதவுவதற்குமான களமாகவும் அமைகின்றது./p>
போட்டி பிரிவுகளின்படி 'சுப்பர் இன்னோவேட்டர்' பிரிவின் கீழ், தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி, 2021 - 2022 இல் உருவாக்கம் செய்யப்பட்ட புதுமையான சாதனம்/ சிந்தனை ஊடாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட ஒன்றைக் காண்பிப்பதற்கு பிள்ளைகள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். அத்துடன் ‘சுப்பர் டெலன்ட்’ பிரிவின் கீழ் நடனம், நாடகம் மற்றும் பிற படைப்புத் திறமைகள் உள்ளிட்ட தனித்துவமான பொழுதுபோக்கு திறன்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், ‘சுப்பர் டெலன்ட்’ பிரிவின் கீழ் சமூகத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கக்கூடிய தீர்வு/திட்டம்/கண்டுபிடிப்பை வடிவமைத்தவர்கள் அடங்குவர்.
மேலதிக விபரங்களை அறிவதற்கு , https://ehsuperheroes.lk/ க்கு செல்லுங்கள்