'மனிதநேய ஒன்றிணைவு' நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட 120,000 குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணங்களை வழங்கியுள்ளது
2023 மார்ச் 17 கொழும்பு
நாட்டில் நிலவும் சவால்மிகு பொருளாதாரச் சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட 'மனிதநேய ஒன்றிணைவு' எனும் மனிதாபிமான நடவடிக்கை மூலம் இதுவரை நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 120,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்துள்ளது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, சர்வோதய சிரதான சங்கம் மற்றும் PwC ஸ்ரீ லங்கா ஆகியன இணைந்து 'மனிதநேய ஒன்றிணைவு' மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்ததுடன் பின்னர் படிப்படியாக CBL Group, Citi Bank, Sunshine Holdings PLC, Huawei Technologies Lanka Company, Unilever Sri Lanka, London Stock Exchange Group மற்றும் Roar Global ஆகிய நிறுவனங்களும் இதில் இணைந்து கொண்டன.
பயனுள்ள பொருளாதார மீட்புத் திட்டத்தின் மூலம் நாட்டில் நிலையான பலன் பரிமாற்ற முறை நிறுவப்படும் வரை 'மனிதநேய ஒன்றிணைவு' திட்டம் அதன் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும். நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான கூட்டு முயற்சியில் பங்களிக்குமாறு 'மனிதநேய ஒன்றிணைவு' ஏனைய அனைத்து மக்களையும் நிறுவனங்களையும் அழைக்கின்றது.
'மனிதநேய ஒன்றிணைவு' நிவாரண திட்டத்திற்கு நீங்கள் எவ்வாறு நன்கொடை அளிக்கலாம் என்பது பற்றிய விபரங்களுக்கு - dialog.lk/corporate க்கு செல்லுங்கள்.