பொருள் விரிவாக்கம்

Dialog Gaming ஆனது Game Hero - 4ம் Season இன் மாபெரும் இறுதிப்போட்டியை நிறைவு செய்தது

09 December 2019         Colombo

 

news-1

(இடமிருந்து வலம்) சசிக குருப்பு (9ம் இடம்), ஜென் வினேத் (5ம் இடம்), சதுரங்க பிரகீத் (4ம் இடம்) K.S.L.D. பண்டார (8ம் இடம்), ஜனி த் சிந்தக (3ம் இடம்), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் ஹமீல் பிஸ்ரி, பசன் நிர்மான (1ம் இடம்), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் உலகளாவிய மற்றும் உள்ளடக்க சேவைகள் சிரேஷ்ட பொது முகாமையாளர் மங்கள ஹெட்டியாராச்சி, அனுரங்க ஆரியதாச (2ம் இடம்), பினுர தர்மசிறி (6ம் இடம்) சம்பத் பண்டார தென்னகோன் (7ம் இடம்) மற்றும் உஷானி தென்னகோன் (10ம் இடம்).

இலங்கையின் முதற்தர வலையமைப்பான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் டயலொக் Gaming ஆல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் kingdom Battles ன் Game Hero போட்டியின் 4ம் Season டயலொக் ஆடிட்டோரியத்தில் 2019 டிசம்பர் 5ஆம் திகதி நடாத்தப்பட்டது, இது மொபைல் தொலைபேசி விளையாட்டு போட்டிதொடரில் இலங்கையில் வேறெங்கும் இல்லாதவாறு மிகப்பெரிய பரிசான 3 மில்லியன் ரூபாவை 30 வெற்றியாளர்களுக்கு வழங்கியது.

Dialog Gaming, Dialog Gaming Game Hero app ஐ அறிமுகப்படுத்தியது. இது விளையாட்டாளர்களுக்கு கடந்த Titles இனை மீண்டும் மீண்டும் விளையாடுவதற்கும் வெற்றியாளராக இருப்பதற்குமான வாய்ப்பினை வழங்குகின்றது. சீசன் 5இல் Knight clash என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Dialog Gaming Game Hero app இனை Google Play Store இல் டவுன்லோட் செய்து இலவசமாக பயன்படுத்தவும் முடியும். போட்டியாளர்கள் அவர்கள் விளையாடும் Titles க்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.