பொருள் விரிவாக்கம்

COVID இன் போது இலங்கையர்களை வலுவூட்ட டயலொக்கின் e-Working, e-Learning மற்றும் e-Health தீர்வுகள்

23 மார்ச் 2020         கொழும்பு

 

உலகளாவிய தொற்று நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இந்த சவாலான காலங்களில் இலங்கையை ஒன்றிணைப்பதில் உறுதியாக உள்ளது. நுகர்வோர், நிறுவனங்கள், வணிக பங்காளிகள் அல்லது அரசாங்கமாக இருந்தாலும், அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் தொலைதொடர்பு உற்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வணிக தொடர்ச்சியை தொடர்ந்து முன்னெடுக்க உதவுவதற்காக டயலொக் முழுமையாக தயார் நிலையில் உள்ளது.

நிலவும் சூழ்நிலையில் ஆன்லைன் வசதிகள் அன்றாட தேவைகளாக மாற்றுவதால், இலங்கையர்கள் தங்கள் சமூக இடைவெளியினை பின்பற்ற உதவ டயலொக் கூடுதல் பிரயத்தனம் கொண்டுள்ளது. இந்த கொந்தளிப்பான காலங்களில் தனது வாடிக்கையாளர்களை இணைப்பதோடு டயலொக், அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களுக்கும் பின்வரும் சிறப்பு சேவைகளுடன் தனது ஆதரவை வழங்குகின்றது.

1390 ஊடாக e-Health - Tele-Medicine மற்றும் தேசிய விழிப்புணர்வு

 

இலங்கையர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு டயலொக்கின் முதன்மை நோக்கமாக உள்ளது. கொரோனா வைரஸினை தடுப்பதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு இணங்க, வேவ்னெட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் MyDoctor (மை ஹெல்த் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்) உடன் இணைந்து டயலொக், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு செல்லவேண்டிய அவசியமின்றி அனைவருக்கும் தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை அணுகுவதற்கு 1390 வழியாக ஒரு இலவச மூன்று மொழிகளிலுமான துரித இலக்கத்தை அறிமுகப்படுத்தியது. எந்தவொரு வலையமைப்பில் இருந்தும் 1390 அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இந்த மூன்று மொழிகளிலுமான மருத்துவ ஆலோசனை சேவையை இலவசமாக அணுக முடியும்.

COVID19 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தெரிவிக்க டயலொக் ஒரு முன் அழைப்பு அறிவிப்பைப் பயன்படுத்தியதுடன், கொரோனா வைரஸ் குறித்த சமீபத்திய முன்னேற்ற தகவல்களையும் ஆலோசனையையும் வாடிக்கையாளர்களுக்குப் பெறுவதற்காக 135 - ஒரு இலவச மூன்று மொழிகளிலுமான IVR சேவையினையும் நிறுவியது. இந்த துரித இலக்கத்திற்கு மேலதிகமாக COVID-19 பற்றிய மேலதிக தகவல்களைக் கொண்ட Android / iOS App களும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

e-Learning - Guru.lk மற்றும் அரசு கல்வி தளங்களுக்கு டேட்டா கட்டணங்கள் இல்லாத இலவச உள்ளடக்கங்கள்.

 

பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதன் காரணமாக கல்வி முறைக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதற்காகவும் பிள்ளைகள் வீட்டிலிருந்து கல்வியினை தொடர்வதற்குமான அதன் முயற்சிகளில், கல்வி அமைச்சகம் மற்றும் ஹெட்ஸ்டார்ட் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து டயலொக் இலவசமாக கல்வி உள்ளடக்கம் மற்றும் பயன்பாடுகளின் தொகுப்பை எந்தவொரு டேட்டா கட்டணமும் இன்றி பிள்ளைகளுக்கு தொடர்ந்து வழங்குகின்றது. டயலொக் அதன் கூட்டாளர்களுடன் சேர்ந்து பின்வரும் கல்வி மற்றும் உள்ளடக்க தளங்களுக்கு இலவச உள்ளடக்கம் மற்றும் ஆன்லைன் அணுகலை விரிவாக்கியுள்ளது:

1. Guru.lk
2. e-thaksalawa
3. Nenasa App – Goole Play Store இல் பெற்றுக்கொள்ளலாம்
4. Dialog ViU App – Google Play store மற்றும் App Store இல் பெற்றுக்கொள்ளலாம்

மேற்கண்ட தளங்களுக்கு மேலதிகமாக, பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து டயலொக் 2020 மார்ச் 23 முதல் மாநில பல்கலைக்கழகங்களின் அனைத்து உத்தியோகபூர்வ மின்-கற்றல் தளங்களுக்கும் டேட்டா கட்டணமின்றி இலவச அணுகலை வழங்க உள்ளது.

Double Data கொடுப்பனவு - தனிப்பட்ட மற்றும் நிறுவன பயன்பாடுகளுக்கான டேட்டா மற்றும் அழைப்பு நேரம்

 

இந்த சவாலான காலங்களில் டயலொக் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் அவர்களை இணைத்து வைப்பதற்கும் வசதியாக, டயலொக் 16 மார்ச் 2020 முதல் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியது.

Home மற்றும் Mobile Broadband க்கு டபுள் டேட்டா

 

Home Broadband மற்றும் Mobile Postpaid Data Pack Extensions க்கு டபுள் டேட்டா

Home மற்றும் Mobile Broadband பிற்கொடுப்பனவு கணக்குகளில் உள்ள அனைத்து டேட்டா நீட்டிப்புகளுக்கும் டயலொக் 100% போனஸை வழங்குகிறது, இது மார்ச் 16, 2020 முதல் அமலுக்கு வந்தது. தற்போது வீடுகளில் உள்ள 600,000 க்கும் மேற்பட்ட Home Broadband பாவனையாளர்கள் மற்றும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பிற்கொடுப்பனவு மொபைல் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் தங்களுடைய வேலைகளை செய்துக்கொள்வதற்காக இந்த சலுகையானது வழங்கப்பட்டுள்ளது. டேட்டா தேவைப்படுபவர்கள் MyDialog App அல்லது www.dialog.lk வழியாக data add-on packs ஐ செயல்படுத்தலாம் மற்றும் அதே கட்டணத்திற்கு இரட்டிப்பு டேட்டாவையும் பெற்றுக்கொள்ளலாம்.

முற்கொடுப்பனவு டேட்டா கார்டுகள் மற்றும் ஆன்லைன் கொள்வனவுகளுக்கு 4G போனஸை 100% ஆக இரட்டிப்பாக்கியது

எங்கள் 13.4 மில்லியன் முற்கொடுப்பனவு மொபைல் பாவனையாளர்களை இணைக்க, டயலொக் தரமான 50% 4G போனஸை 100% 4G ஆக இரட்டிப்பாக்கியுள்ளது, MyDialog / Genie Apps அல்லது www.dialog.lk உள்ளிட்ட 23 ஆன்லைன் தளங்கள் மூலம் அனைத்து இணைய அட்டை கொள்வனவுகளுக்கும் எந்த நேரத்திலும் போனஸ். இது 2020 மார்ச் 23 முதல் அழுல் படுத்தப்பட்டுள்ளது. ரூ .349 / - க்கும் அதிகமான அனைத்து டேட்டா கார்டுகளுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது, எந்தவொரு முறையின் ஊடாகவும் செயற்படுத்திக்கொள்ளலாம் இது 2020 மார்ச் 22, முதல் அமலுக்கு வருகிறது.

தினசரி மற்றும் வாராந்திர முற்கொடுப்பனவு பிளாஸ்டர் பக்கேஜ்களுக்கு டபுள் அழைப்பு நேரம்

 

டயலொக் மொபைல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் 2020 மார்ச் 22 முதல் தினசரி / வாராந்திர குரல் மற்றும் காம்போ பொதிகளில் 100% போனஸ் அழைப்பு நேரம்/ SMS/ டேட்டா போன்றவற்றை பெறலாம். இந்த சிறப்பு பக்கேஜ்களை கொள்வனவு செய்ய, வாடிக்கையாளர்கள் தங்கள் டயலொக் மொபைலில் இருந்து # 678 # ஐ டயல் செய்யலாம்.

இலவச செய்தி விழிப்பூட்டல்களுடன் விடயங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்

 

இந்த சூழ்நிலையில் சமீபத்திய புதுப்பிப்புகள் குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட news alerts க்கு மார்ச் 31 வரை இலவச பதிவு வழங்கப்பட்டுள்ளது. News Alerts சேவையினை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் # 678 # ஐ டயல் செய்யலாம் அல்லது MyDialog App ஐ பயன்படுத்தலாம்.

Home மற்றும் மொபைல் வலையமைப்புகளுக்கு வரையறையற்ற பொழுதுபோக்கு

 

தேவைக்கேற்ப Live TV மற்றும் Video on Demand போன்றவற்றை அணுக டயலொக் ViU Entertainment App ற்கு இலவச அணுகல்

 

அனைத்து மொபைல் மற்றும் Home Broadband வாடிக்கையாளர்களும் டேட்டா கட்டணங்கள் இன்றி இலங்கையின் மிகப்பெரிய வீடியோ மற்றும் Live TV சேகரிப்பு - டயலொக் ViU app ஐ அணுக முடியும். 60 நேரடி அலைவரிசைகள் மற்றும் 1000 க்கும் அதிகளவான உள்ளூர் திரைப்படங்கள், நாடகங்கள், கல்வி உள்ளடக்கம் மற்றும் அசல் தொகுப்புகள் மூலம் அனைவரையும் மகிழ்விக்க, டயலொக் வாடிக்கையாளர்கள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் டயலொக் வலையமைப்பில் டேட்டா கட்டணங்கள் இல்லாமல் இலவச Live TV மற்றும் வீடியோவை அணுகக்கூடிய மற்றொரு ஊடகம் டயலொக் ViU App ஆகும்.

Dialog Television- அனைத்து அலைவரிசைகளுக்குமான அணுகல்

 

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள சமூகக் கட்டுப்பாடுகளை இலங்கையர்கள் கடந்து செல்ல உதவுவதற்காக, டயலொக் தனது அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளையும் Dialog Television வாடிக்கையாளர்களுக்கும் ரூ. 100 / - + வரிகளுக்கு 14 நாட்களுக்கு (அல்லது MyDialog App மூலம் செயல்படுத்தப்படும் போது ரூ .75 + வரி) பொழுதுபோக்கு மற்றும் கல்வி உள்ளடக்கங்களின் வரிசையை அணுகுவதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதிகரிக்கப்பட்ட கடன்

 

டயலொக் அதன் பிற்கொடுப்பனவு மொபைல், Home Broadband, Television மற்றும் எண்டர்பிரைஸ் வாடிக்கையாளர்களுக்கு, வாடிக்கையாளர்களின் கடன் காலத்தை நீட்டிப்பதன் மூலமும், இந்த காலகட்டத்தில் தடையற்ற சேவையை பெற்றுக்கொள்ள கூடுதல் கடன் வழங்குவதன் மூலமும் இணைந்திருக்க உதவுகிறது.

அனைத்து பிற்கொடுப்பனவு மொபைல், Fixed Broadband மற்றும் Television வாடிக்கையாளர்களுக்கு கடன் எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

தற்போதுள்ள கடன் எல்லையிலிருந்து (வரம்பை அடைந்தவுடன்) 50% வரை தானியங்கி கடன் மேம்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பிப்ரவரி மாத பில் பட்டியலை செலுத்தாததால் துண்டிக்கப்படுவது 2020 மார்ச் 27 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மொபைல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அவசர கடன்

 

top up கார்டுகள் அல்லது ரீலோட்களை பெற்றுக்கொள்ள முடியாத அனைத்து டயலொக் மொபைல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அவசர கடன் வசதி வழங்கப்படுகிறது. டயலொக்கிலிருந்து அவசர கடன் பெற வாடிக்கையாளர்கள் # 007 # ஐ டயல் செய்யலாம்.

e-Care - MyDialog App மற்றும் WhatsApp ஊடாக டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்கு உதவி

 

டயலொக் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான உதவிக்கு டயலொக்கின் டிஜிட்டல் தன்னியக்க பாதுகாப்பு தளங்களை (www.dialog.lk அல்லது MyDialog App) பயன்படுத்தும் படி வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். எந்தவொரு டயலொக் இணைப்பையும் வசதியாக ரீலோட் செய்துக்கொள்வதற்கும், உங்கள் குடும்பத்தின் / வணிக டயலொக் சேவைகளை நிர்வகிக்கும் திறனையும் MyDialog பயன்பாடு வழங்குகிறது. டிஜிட்டல் தளங்களுக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்கள் ரீலோட் செய்ய, பில் கொடுப்பனவுகள் மற்றும் eZ Cash top-ups போன்ற பண பரிவர்த்தனைகளுக்கு பிரத்யேக கட்டண இயந்திரங்களை பயன்படுத்தும் படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் WhatsApp இல் மேலதிக நன்மையையும் வழங்குகிறது; டயலொக் வாடிக்கையாளர்கள் 777 678 678 எனும் இலக்கத்தில் எந்த நேரத்திலும், நிறுவனம் வழங்கும் எந்தவொரு சேவைகள் பற்றிய மேலதிக விபரங்களையும் WhatsApp செய்து தெரிந்துக்கொள்ள முடியும்..

நிறுவனங்களுக்கான e-Home Working ஆதரவு

 

தொடர்பு கொள்வதற்கும் சரியான கருவிகள் மற்றும் பிரத்தியேகமான இணைப்புத் தீர்வுகளுடன் பொருத்தமாக இருப்பதற்கும் துணை நிறுவனங்களை ஆதரிப்பதற்காக டயலாக் அர்ப்பணிப்புடன் முழுமையாக தயாராக உள்ளது. 777887887 மற்றும் 117100200 வழியாக எந்த நேரத்திலும் கிடைக்கும் டயலொக்கின் நிறுவன கணக்கு முகாமையாளர்களை தொடர்பு கொள்ள வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் அல்லது இந்த காலங்களில் வணிகங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய business.dialog.lk ஐ பார்வையிடவும்.

Microsoft Office365 Business Essentials: Microsoft Office365 Business Essentials 2GB கூடுதல் மொபைல் டேட்டாவுடன் இணைத்து, நிறுவன வாடிக்கையாளர்களுக்கான டயலொக் அதன் சமீபத்திய பக்கேஜை 50% சிறப்பு தள்ளுபடியில் வழங்குகிறது. Microsoft Office365 Business Essentials ஆன்லைன் அணுகல் தேவைப்படுபவர்களுக்கு, மொபைல் மற்றும் Home Broadband ஒரு சிறப்பு டேட்டா பக்கேஜ்களை டயலொக் அறிமுகப்படுத்தியது, அங்கு 5 GB மொபைல் டேட்டாவுக்கு ரூ.200 / - விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள, அதே நேரத்தில் Home Broadband வரையறையற்ற டேட்டா ரூ. 100 க்கும் வழங்கப்படுகின்றது.

டயலொக் பிஸ் கான்பரன்சிங் தீர்வு: எப்போது வேண்டுமானாலும் எங்கும் பயன்படுத்த பாதுகாப்பான மற்றும் எளிதான ஒரு நெகிழ்வான மற்றும் செலவு குறைந்த Voice Conference தீர்வான ‘பிஸ்கான்ஃபரன்சிங்’ ஐ டயலாக் அறிமுகப்படுத்தியுள்ளது.

நிறுவனங்களுக்கு டபுள் டேட்டா: HBB மற்றும் பிற்கொடுப்பனவு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் 100% டேட்டா போனஸ் அனைத்து நிறுவன பயன்பாட்டிற்கும் பொருந்தும், இதனை MyDialog App வழியாக அல்லது Bizcare தளம் மூலமாக செயற்படுத்திக்கொள்ள முடியும். மாற்றாக, சிறப்பு நிறுவன டேட்டா திட்டங்கள் தேவைப்படுபவர்கள் அந்தந்த கணக்கு முகாமையாளரை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.dialog.lk க்கு செல்லுங்கள்