பொருள் விரிவாக்கம்

தொழில் முனைவோர் ஆர்வளர்களுக்கான SLINTEC Startup Engine துவக்கத்திற்கு டயலொக் அனுசரணைவழங்குகின்றது.

2019 பெப்ரவரி 7         கொழும்பு

 

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Sri Lanka Institute of Nano Technology (SLINTEC) Startup Engine ஆரம்பத்தை அறிமுகப்படுத்துகின்றது. இலங்கையின் முதலாவது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப காப்புறுதியும் வேலைத்திட்டமும் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது 2019 பெப்ரவரி மாதம் 7ம் திகதி Policy Studies நிலையத்தில் திறந்துவைக்கப்பட்டது.

SLINTEC இன் Startup Engine இரண்டு வகையான நீண்டகால திட்டமாகும். துரிதப்படுத்தல் மற்றும் இங்யூபேட்டர் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன் முதலாக பொருட்கள், துணிகள், வேளாண்மை, ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் ஆகியவற்றில் விஞ்ஞான அடிப்படையிலான வர்த்தகத்தை தொடங்குவதற்கு முயற்சிக்கும் தொழில்முனைவோருக்கு உதவுவதற்கு engine aims முனைகின்றது. இங்யூபேட்டரானது SLINTEC மூலம் மேம்படுத்தக்கூடிய புதிய ஆலோசனைகளை வரவேற்பதுடன் முதிர்ந்த திட்டங்களையும் தொழில் முனைவோர் மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது.

இந்த குறிப்பிட்ட startup engine மற்ற தளங்களில் இருந்து வேறுபடுகின்றது. இது சூழலில் பொதுவாக கிடைக்கக்கூடிய state-of-the-art உபகரணங்கள் மற்றும் ஆய்வக வசதிகளை அணுகுவதன் மூலம் பங்கேற்பாளர்களுக்கு வழங்குகின்றது. மேலும், இது இளைஞர்களுக்கு ஆதரவளித்தல் போன்ற மனநிலையான அறிவியல் மற்றும் பொறியியல் ஆதாரங்களுடன் (SLINTEC) ஹோமாகமையில் அமைந்துள்ளது

இந்த நிகழ்வில் உரையாற்றிய SLINTEC நிறுவனத்தின் தொழில்நுட்ப பரிமாற்ற பரிவு தலைவர் கலாநிதி ரங்கிக டீ சில்வா தனது கருத்தினை பின்வருமாறு பகிர்ந்துக்கொண்டார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தொழில் முனைவோர்களை ஆதரிக்கும் SLINTEC Startup Engine இனை ஆரம்பிப்பதில் நாங்கள் உற்சாகமாக இருக்கின்றோம். மேலும் நாட்டின் தொடக்க சூழலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்ப்போம் எனவும் கூறினார்.

SLINTEC இலங்கையில் (நெநோ தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பூங்கா) நெநோ மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் தூய விஞ்ஞான ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதோடு தொழில் மற்றும் உற்பத்தி அடிப்படையிலான அறிவியல் ஆராய்ச்சியினையும் மேற்கொள்கின்றது.