பொருள் விரிவாக்கம்

இந்த கிரிக்கெட் காலப்பகுதியில் டயலொக் டெலிவிஷன் இடமிருந்து பிரத்தியேக சலுகைகள் மற்றும்கொடுப்பனவுகள்

2019 ஜூன் 3         கொழும்பு

 

news-1

 

இந்த உலக கிண்ண காலப்பகுதியில், இலங்கையின் முன்னணி Pay TV சேவை வழங்குனரான டயலொக் டெலிவிஷன் அனைத்து கிரிக்கெட் இரசிகர்களுக்கும் பிரத்தியேக சலுகைகளை அறிமுகம் செய்கின்றது. டயலொக் டெலிவி~ன் சமீபத்திய கொடுப்பனவாக, தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு ICC உலக கிண்ணம் 2019 கிரிக்கெட் போட்டிகளை விசேட விலைக்கழிவில் பார்ப்பதற்கான வாய்ப்பினை வழங்குவதுடன் அற்புத பரிசுகளையும் வழங்குகின்றது.

இப்போது கிரிக்கெட் இரசிகர்கள் 6 விளையாட்டு அலைவரிசைகளை உள்ளடக்கிய, 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் ‘World Cup Cricket Pass;” எனும் பக்கேஜினை ரூபாய் 149/= க்கு (வரிகள் அறவிடப்படும்) செயற்படுத்திக்கொள்ள முடியும். ON (இடைவெளி) அவர்களின் டயலொக் டெலிவிஷன் கணக்கு இலக்கம் (இடைவெளி) 2019 என டைப் செய்து டயலொக் மொபைலில் இருந்தெனில் 679க்கும் வேறு வலையமைப்புக்களில் இருந்தெனில் 0770679679 க்கும் SMS செய்து செயற்படுத்திக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் இந்த கொடுப்பனவினை MyDialog App ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். (Google Play Store மற்றும் Apple App Store இல் காணப்படுகின்றது.) தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் universal studios க்கு சென்று வருவதற்கான வாய்ப்பினையும் பெற்றுக்கொள்வார்கள்.

டயலொக் டெலிவிஷன், புதிய வாடிக்கையாளர்களுக்கும் விசேட கொடுப்பனவுகளை வழங்குகின்றது. புதிய வாடிக்கையாளர்கள் அனைவரும் அனைத்து விளையாட்டு அலைவரிசைகளையும் (16 அலைவரிசைகள்) 60 நாட்களுக்கு இலவசமாக பெற்றுக்கொள்வார்கள். மேலும், இந்த காலப்பகுதியில் ரூபாய் 3,990/- பெறுமதியான பிற்கொடுப்பனவு இணைப்பினை ரூபாய் 1000/- Cash Back சலுகையுடன் ரூபாய் 2,990/- க்கு பெற்றுக்கொள்ள முடியும். ரூபாய் 9,990/- பெறுமதியான Per Day TV இணைப்பினை ரூபாய் 5,990/- க்கு பெற்றுக்கொள்ள கூடியதுடன் 40 க்கும் அதிகளவான உள்நாட்டு மற்றும் சர்வதேச அலைவரிசைகளை தினசரி ரூபாய் 8 என்ற விசேட கட்டணத்திற்கும் பார்வையிடவும் முடியும். இந்த கொடுப்பனவினை எந்தவொரு டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், ஜுன் மாதம் 1ம் திகதி முதல் ஜுலை மாதம் 10ம் திகதி வரை MyDialog App உடாக ரூபாய் 500 அல்லது அதற்கும் அதிகமாக பில் கட்டணங்களை செலுத்தும் அனைத்து டயலொக் டெலிவி~ன் வாடிக்கையாளர்களும் Sri Lanka Cricket replica t-shirts இனை வெல்லும் வாய்ப்பினை பெற்றுக்கொள்வார்கள்.