பொருள் விரிவாக்கம்

இலங்கையில் முதல் தடவையாக கையில் கொண்டு செல்லக்கூடிய ஈ.சீ.ஜீ கருவியான Avidhrt Sense தற்போது டயலொக்கில்

2019 ஜனவரி 5        கொழும்பு

 

news-1

டயலொக் ஆசிஆட்டா பீஎல்சி சேவை மற்றும் உற்பத்தி உருவாக்கல் தலைவர் சத்துர பீரிஸ் தலைவர்- மருத்துவர் சம்பத் வித்தானவசம்- விசேட மருத்துவ நிபுணர் (இருதயம்)- கொழும்பு தேசிய மருத்துவமனை டயலொக் ஆசிஆட்டா பீஎல்சி குழுமத்தின் பிரதம நிர்வாக அதிகாரி - கலாநிதி ரைனர் டொயிஸ்ட்மன் களனி பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர்- பேராசிரியர் வசந்தி சுபசிங்ஹ My Health Solutions தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர விஜேரத்ன ஆகியோரை படத்தில் காணலாம்.

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களான டயலொக் ஆசிஆட்டா பீஎல்சீ நிறுவனம் mydoctor.lk மற்றும் Avidhrt உடன் இணைந்து இலங்கையில் முதல் தடவையாக எளிதில் தூக்கி செல்லக்கூடியதும் மாற்றுக்கிடையானதுமான ஈ.சீ.ஜீ கருவியான Avidhrt Sence கருவியை இலங்கை வாழ் மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. நோயாளிகள் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ளோரும் பூரணமாக தமது உடல் நலத்தை கணிப்பதற்கான வழிமுறையை வழங்குகின்ற ஒரேயொரு வணிக தயாரிப்பே இந்த Avindhrt Sence கருவியாகும்.

இருதய கோளாறு arrhythmia (விசேடமாக atrial fibrillation) அல்லது இருதயம் தொடர்பான வேறு நோய்களை கொண்டுள்ள நோயாளிகள் தமது இதய துடிப்பை கணிப்பதற்கும்ää ஹைபோக்சியா உட்பட குருதியில் ஒட்சிசன் அளவை கணிப்பதற்கு மற்றும் உடல் மற்றும் வெளிப்புற வெப்பநிலையை கணிப்பதற்கும் இந்த Avindhrt Sence ஐ பயன்படுத்த முடியும். இருதயம் இயல்பு நிலையை அடைதல் மற்றும் முன்னேற்றங்களை கண்காணிப்பதற்கும் பொதுவாக உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் உடையோரும் Avindhrt Sence ஐ பயன்படுத்த முடியும்.

அண்மையில் இருதய சத்திர சிகிச்சைக்கு உள்ளானோர் இதய ஸ்டென்ட் பொருத்துகைக்கு உள்ளானோர் arrhythmia சத்திர சிகிச்சைக்கு உள்ளானோர் அல்லது பக்கவாதத்திற்கு (embolic stroke) உள்ளானோர் ஆகியோருக்கான ஈ.சீ.ஜீ அளவினை தொடர்ச்சியாக கணித்துக்கொள்வதற்கு இந்த கருவி முக்கிய பங்கினை வகிக்கும். அதுமட்டுமன்றி Avidhrt தீர்விற்கு கைப்பேசி ஊடான APP தொழிநுட்ப (Apple APP Store மற்றும் google play store) வசதியும் வழங்கப்படுவதுடன் இதனூடே அவரவரது ஈ.சீ.ஜீ கணிப்பு தரவுகளை முகாமைப்படுத்துவதற்கும் சேமித்து வைப்பதற்கும் கணிப்புகளை அவதானிப்பதற்கும் மற்றும் விசேட சேவைகள் அல்லது உடனடி ஆலோசனைகளை பெறுவதற்கும் இலங்கையின் முன்னணி டிஜிட்டல் உடல் நல ஆலோசனை வழங்குநர்களான Mydoctor.lk சேவையினரிடம் உடல் நல சேவை வலையமைப்பிற்கு விண்ணப்பிப்பதன் மூலம் உரிய தகவல் பரிமாறல்களை பெற்றுக்கொள்வதற்கான வசதியும் வழங்கப்படும்.

Avidhrt பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் ரொபர்ட் பிராங்க் இது தொடர்பாக கருத்துத்தெரிவிக்கையில் "இந்த விடயத்தில் டயலாக் ஆசிஆட்டாவுடன் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளமையையிட்டு Avidhrt மகிழ்ச்சி அடைகின்றது" என குறிப்பிட்டுள்ளதுடன் "ஐக்கிய அமெரிக்கா இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சேவை நிலையங்களை நிறுவியுள்ள Avidhrt நிறுவனமானது இருதய கோளாறுகள் தொடர்பான நவீன சேவைகளை வழங்குகின்ற ஒரு நிறுவனமாகும். Avidhrt இன் முதலாவது வணிக தயாரிப்பான cloud கருவியானது கணிப்பீட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட எளிதில் கொண்டு செல்லக்கூடிய நியாய விலையிலான ஒரு தயாரிப்பாகும். தீயணைப்புப்படை வீரர்களுக்கு இருதய கோளாறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களை தவிர்ப்பதற்கு தொலைபேசி வழியே தீர்வுகளை வழங்கியமைக்காக அமெரிக்காவின் தேசிய விஞ்ஞான அறக்கட்டளை விருதை Avidhrt வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. OIT (Internet of Things), Big Data Cloud Computing மற்றும் செயற்கை மூளை போன்ற வளர்ச்சி கண்டுவருகின்ற நவீன தொழிநுட்ப வழிமுறைகளை பயன்படுத்துவதில் டயலொக் நிறுவனம் காட்டி வருகின்ற ஆர்வமும் Avidhrt தயாரித்துள்ள புதிய நிர்மாணிப்பு முறைகளுடன் ஒத்துப்போவதாக அமைந்துள்ளது." எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டயலொக் ஆசிஆட்டாவின் குழும பிரதம நிறைவேற்று செயற்பாட்டு அதிகாரி கலாநிதி ரெய்னர் டொயிஸ்ட்மன் தெரிவிக்கையில் "எதிர்காலம் இன்றே' என்ற டயலொக்கின் சுலோகத்திற்கு அமைய இலங்கையின் பிரஜைகளுக்கு எதிர்கால தலைமுறையின் தொழிநுட்ப மற்றும் தீர்வு முறைகளை பெற்றுக்கொடுப்பதில் முன்னிலை வகிக்க தம்மால் முடிந்துள்ளது." என குறிப்பிட்டுள்ளார். "விசேடமாக MyDoctor.lk மற்றும் yeheli.lk போன்ற முன்னணி டிஜிட்டல் சுகாதார மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான தளத்தில் முதலீடு செய்வதில் டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக Avidhrt ஆனது டிஜிட்டல் சுகாதார சேவையின் மற்றுமொரு புதிய அங்கமாக அமைந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்ட டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்தினூடாக நியாய விலையில் இச்சேவையை வழங்குவதற்கு கிடைத்துள்ளமையையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்." எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

My Health Solution தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில் "டயலொக் மற்றும் Avidhrt ஆகியவற்றுடன் இணைவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளமையையிட்டு இந்த செயற்திட்டத்தின் மருத்துவ சேவை வழங்குநர்களான My Health Solution தனியார் நிறுவனம் மகிழ்ச்சி அடைகின்றது. மக்கள் தொடர்புகளை உறுதிப்படுத்தியும் நடைமுறைப்படுத்தியும் வருவதுடன் நாம் டிஜிட்டல் முறையின் ஊடாக இலங்கை வாடிக்கையாளர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கிவருகின்றோம். இந்த புரட்சிகரமான சாதனத்தின் ஊடாக Avidhrt ஐ பயன்படுத்துகின்ற எவரும் தனது இருதயத்தின் ஈ.சீ.ஜீ அளவை பரீட்சித்துப்பார்க்கும் வாய்ப்பு கிட்டுவது மட்டுமன்றி ஒரு 'கீ பட்டனை' அழுத்துவதன் மூலம் தகுதிவாய்ந்த மருத்துவரின் விசேட ஆலோசனைகளை பெறமுடியும் என்பதையும் நாம் உறுதிப்படுத்துகின்றோம் " என குறிப்பிட்டுள்ளார்.

Avidhrt Sense சாதனம் கட்டமைப்பு மற்றும் அதன் வழிமுறைகள் ஆகியன ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிமை அனுமதியைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.