Dialog Pay வர்த்தக அமைப்பில் இணைந்தது Abans!
7th August 2026 Colombo
இடமிருந்து வலமாக: லிம் லி சான் (குழும முதன்மை செயல்பாட்டு அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); சச்சினி டி சில்வா (வணிக அதிகாரி, Dialog Finance PLC); சமித் பெர்னாண்டோ (முதுநிலை பிராண்ட் மேலாளர், Abans PLC); நந்தூன் விக்கிரமசிங்க (நிதித் தலைவர், Abans PLC)
இலங்கையின் #1 தொடர்புச் சேவை வழங்கியான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Abans நிறுவனத்துடன் இணைந்துள்ளதை அறிவித்துள்ளது. இதனூடாக, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து Abans விற்பனையகங்களிலும் Dialog Pay மூலம் பாதுகாப்பான LankaQR செலுப்பனவுகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும். 400 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்ட இலங்கையின் முன்னணி சில்லறை வர்த்தக பிராண்டுகளில் ஒன்றான Abans உடனான இக்கூட்டுப்பங்காண்மை, டிஜிட்டல் செலுப்பனவு வசதியை மேலும் விரிவுபடுத்துவதுடன் தகுதியான LankaQR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவையும் வாடிக்கையாளர்களுக்குப் பரிசாக வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் இப்போது நுகர்வோர் இலத்திரனியல் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் சாதனங்கள், IT பொருட்கள், தளபாடங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் இதர வாழ்க்கைமுறைச் சாதனங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான தயாரிப்புகளை நாடளாவிய ரீதியிலுள்ள Abans விற்பனையகங்களில் Dialog Pay மூலம் கொள்முதல் செய்ய முடியும். அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அதிக மதிப்புள்ள பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, இலகுவான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட செலுப்பனவு முறையை இக்கூட்டுப்பங்காண்மை வழங்குகிறது.
இக்கூட்டுப்பங்காண்மை குறித்து Abans PLC இன் நிதித் தலைவர் திரு. நந்தூன் விக்கிரமசிங்க கருத்து தெரிவிக்கையில், "Abans இல், எமது வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதி, தெரிவு மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதன் மூலம் அவர்களின் கொள்முதல் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்த நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். Dialog Pay உடனான எங்களது பங்காண்மை, எமது சில்லறை விற்பனை வலையமைப்பு முழுவதும் மற்றொரு நம்பகமான டிஜிட்டல் செலுப்பனவு விருப்பத்தை அறிமுகப்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான தயாரிப்புகளை வாங்குவதை மேலும் எளிதாக்குகிறது. இரு நம்பகமான பிராண்டுகளை ஒன்றிணைப்பதன் மூலம், இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், டிஜிட்டல் செலுப்பனவுகளின் பயன்பாட்டை விரைவுபடுத்தவும் நாங்கள் உதவுகிறோம்." என்றார்.
Dialog Pay App மற்றும் MyDialog App மூலமாகப் பயன்படுத்தக்கூடிய Dialog Pay, தொடர்பாடல், டிஜிட்டல் செலுப்பனவுகள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே தளத்தில் கொண்டு வருகிறது. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் செலுப்பனவுகளை எளிமையானதாகவும், அணுகக்கூடியதாகவும் மற்றும் அதிக பலனளிக்கக் கூடியதாகவும் மாற்றுவதற்கான Dialog இன் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் eZ Cash கணக்கைப் பயன்படுத்தியோ அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதோ மூலமாக Dialog Pay ஐ எளிதாகச் செயல்படுத்தலாம். இதன் மூலம் பாதுகாப்பான LankaQR செலுப்பனவுகளை மேற்கொள்ளவும், பணப் பரிமாற்றம் செய்யவும், டிஜிட்டல் பணப்பையை (Digital wallet) அணுகவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளை (Fixed deposits) தொடங்கவும், அத்துடன் Dialog Finance மூலம் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.
நாடளாவிய ரீதியில் 100,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதியான QR செலுப்பனவுகளுக்கு இலவச Dialog டேட்டாவை வழங்கி ஊக்குவிக்கிறது. இது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் செலுப்பனவுப் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், இலங்கை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, பணப் புழக்கம் குறைந்த (cash-light) பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கும் உறுதுணையாக அமைகிறது. மேலதிக விபரங்களுக்கு https://dialog.lk/dialog-pay என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.