93 க்கும் மேற்பட்ட கிளைகளில் QR கட்டணச் செலுத்தல்களுடன் Dialog Pay கட்டமைப்பில் இணைகிறது Barista
2026 ஜூலை 20 கொழும்பு
இடமிருந்து வலமாக: ரேணுகா பெர்னாண்டோ, குழுமத் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திலுப்ப பத்திரண, தலைமை நிர்வாக அதிகாரி / இயக்குனர், Barista Sri Lanka.
இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாடளாவிய ரீதியில் உள்ள 93 க்கும் மேற்பட்ட Barista கிளைகளில் வாடிக்கையாளர்கள் இனி Dialog Pay ஐப் பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்த முடியும் என்று அறிவித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய Cafe வலையமைப்பான Barista இக்கட்டமைப்பில் இணைந்ததன் மூலம், வாடிக்கையாளர்கள் அதிவேகமான மற்றும் பாதுகாப்பான 'Scan-and-Pay' அனுபவத்தைப் பெற முடிவதோடு, தகுதிபெறும் பரிவர்த்தனைகளுக்கு இலவச டயலொக் டேட்டா சலுகைகளையும் பெற்று மகிழலாம்.
இக்கூட்டாண்மையானது, Barista நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற சிறந்த காபி மற்றும் அதன் புகழ்பெற்ற தனித்துவமான வாடிக்கையாளர் சேவையுடன், தடையற்ற டிஜிட்டல் கட்டண வசதியையும் ஒன்றிணைத்து cafe அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் Dialog Pay App அல்லது MyDialog App ஊடாக LankaQR குறியீட்டை எளிதாக Scan செய்வதன் மூலம், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து Barista கிளைகளிலும் பணம் செலுத்தும் போது (Checkout) அதிவேகமான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தக் கூட்டாண்மை குறித்து Barista Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் இயக்குனருமான திலுப பத்திரண கருத்துத் தெரிவிக்கையில், "Dialog Pay உடன் இணைந்துகொண்டமையானது, எங்களது 93 க்கும் மேற்பட்ட கிளைகளில் Barista வின் டிஜிட்டல் கட்டணக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், அவர்கள் எங்களை நாடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிவேகமான, மிகவும் வசதியான மற்றும் சலுகைகள் நிறைந்த அனுபவங்களை உருவாக்குவதே எங்களது நோக்கமாகும். இந்த ஒத்துழைப்பானது எமது வாடிக்கையாளர்களின் கட்டணத் தெரிவுகளை விரிவுபடுத்துவது மட்டுமன்றி, பாதுகாப்பான QR வழியிலான கட்டண முறைகளை பரவலாகப் பயன்படுத்துவதற்கும், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரப் பயணத்திற்கும் வலுவூட்டுகின்றது" என்றார்.
Dialog Pay App மற்றும் MyDialog App ஊடாக அணுகக்கூடிய Dialog Pay ஆனது, தொலைத்தொடர்பு இணைப்பு, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே கட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறது. இது டிஜிட்டல் கட்டணங்களை எளிமையாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மற்றும் ஒவ்வொரு இலங்கையருக்கும் சலுகைகள் நிறைந்ததாகவும் மாற்ற வேண்டும் என்ற டயலொக்கின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தமது eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தமக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay ஐ மிக வசதியாகச் செயல்படுத்திக்கொள்ள முடியும். அதன் மூலம், பாதுகாப்பான LankaQR கட்டணங்களைச் செலுத்தவும், பணப் பரிமாற்றம் செய்யவும், தங்களது Digital wallet ஐ அணுகவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளைத் திறக்கவும், Dialog Finance மூலமாக வழங்கப்படும் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். நாடு முழுவதிலும் உள்ள 100,000 க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதிபெறும் QR கட்டணச் செலுத்தல்களுக்கு இலவச டயலொக் டேட்டாவைச் சலுகையாக வழங்குகிறது. இது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் கட்டணப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் பணப் புழக்கம் குறைந்த பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் தொடர்ச்சியான பயணத்திற்கு வலுவூட்டுகிறது.