Ultra-Fast Home WiFi யுகத்திற்கு வழியமைக்கும் Dialog Air Fibre
2026 ஜூலை 02 கொழும்பு
Dialog Air Fibre வணிகரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு வாடிக்கையாளர். படத்தில் (இடமிருந்து): லஹிரு அஞ்சன, உதவித் தயாரிப்பு மேலாளர் (5G) நிலையான வணிகப் பிரிவு, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; பசிந்து பண்டாரநாயக்க, தயாரிப்பு மேம்பாட்டு மேலாளர், நிலையான வணிகப் பிரிவு, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; தரிந்த்ர குணரத்ன, வணிகத் தலைவர், நிலையான பிராட்பேண்ட் மற்றும் சர்வதேச பிரிவு, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ஷெரானி சில்வா, வர்த்தகநாமத் தலைவர், இல்லப் பிரிவு, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; மற்றும் உபேக்ஷி பெரேரா, உதவி வர்த்தகநாம மேலாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆகியோருடன் காணப்படுகிறார்.
இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது pre-order காலப்பகுதியில் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, நாட்டின் முதலாவது 5G-powered, ultra-fast wireless broadband சேவையான Dialog Air Fibre ஐ வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட 5G sites-களை உள்ளடக்கி அதிவேகமாக விரிவடைந்து வரும் டயலொக்கின் 5G network மூலம், இந்த Air Fibre சேவை சேவை எவ்வித கேபிள்களும் இன்றி அதிவேக இணைய வசதியை வழங்குகிறது. நவீன டிஜிட்டல் வாழ்க்கை முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இச்சேவை, ஒரே நேரத்தில் பல சாதனங்களில் ஸ்ட்ரீமிங் , கேமிங் , வீடியோ கான்பரன்சிங் மற்றும் Remote work போன்றவற்றை தடையின்றி மேற்கொள்வதை ஆதரிக்கிறது. மேலும், மின்சாரத் தடைகளின் போது 6 மணித்தியாலங்கள் வரை தடையற்ற இணைய இணைப்பை வழங்கும் Built-in battery வசதியையும் இது கொண்டுள்ளது.
Air Fibre சேவை மூன்று கட்டணத் திட்டங்களில் கிடைக்கிறது: 100GB ரூபா 2,795, 200GB ரூபா 3,795 மற்றும் 300GB ரூபா 5,495 (வரிகள் உட்பட). அத்துடன், Dialog Air Fibre வாடிக்கையாளர்கள் Dialog Play ஊடாக 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளை இலவசமாகப் பார்வையிடும் வசதியுடன், பல்வேறு டிஜிட்டல் பொழுதுபோக்குச் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் இணைய இணைப்பும் உள்ளடக்கங்களும் ஒரே தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் நிலைத்த பிராட்பேண்ட் மற்றும் சர்வதேச வணிகத் தலைவர் தரிந்த குணரத்ன கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கை வீடுகளில் அதிவேக Broadband இணையத்தைப் பயன்படுத்தும் முறையை Dialog Air Fibre மறுவரையறை செய்கிறது. எங்களது 5G வலையமைப்பின் ஆற்றலைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் மாறிவரும் இணைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நெகிழ்வான Home Broadband தீர்வை நாங்கள் வழங்குகிறோம்" என்றார்.
ஒவ்வொரு Air Fibre இணைப்பும் முறையான இருப்பிட மதிப்பீடு உள்ளிட்ட முழுமையான இணைப்பைப் பெற்றுக்கொள்ளும் மற்றும் சரிபார்ப்புச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொள்வனவு செய்யப்பட்ட 48 மணித்தியாலங்களுக்குள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி நிறுவித் தரப்படும் (Installation). இந்தச் சரிபார்ப்பின் போது தேவையான சேவைத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத வாடிக்கையாளர்கள், செலுத்திய தொகையை முழுமையாகத் திரும்பப் பெறத் (Full refund) தகுதியுடையவர்களாவர். இது தரமான சேவை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான டயலொக்கின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.
இச்சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுச் செயல்முறைகளை ஆரம்பிக்க, வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள எந்தவொரு டயலொக் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கும் விஜயம் செய்யலாம். மேலதிக விபரங்களுக்கு, dialog.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது 0777 678 678 என்ற இலக்கத்தின் ஊடாக WhatsApp இல் 'DIA' உடன் இணையவும் அல்லது 1777 ஐ அழைக்கவும்.