டயலொக் ஆசிஆட்டா 'Esports' உத்தியோகப்பூர்வ அனுசரணையாளராக SLESA யுடன் ஒருங்கிணைவு
March 10, 2022 Colombo
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் புத்தாக்குனர் பிரிவு அதிகாரி அந்தனி ரொட்ரிகோ அவர்கள் இளைஞர் மற்றும் விளையாட்டு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ. நாமல் ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் இலங்கை விளையாட்டு சங்கத்தின் தலைவர் ரவீன் விஜயதிலக அவர்களிடம் அனுசரணையினை கையளித்தார்.
மேலும் படத்தில் இடமிருந்து வலமாக: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் ஐடியாமார்ட், கேமிங் சேவைகள் பிரிவு தயாரிப்பு முகாமையாளர் அமித் பெரேரா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் ஐடியாமார்ட் பொது முகாமையாளர் விரங்க செனவிரத்ன, இலங்கை விளையாட்டு சங்க செயலாளர் ரமேஷ் லியனகே, இலங்கை ஈஸ்போர்ட்ஸ் சங்க பொருளாளர் விகும் ஜயசேகர
டயலொக் ஆசிஆட்டா மற்றும் இலங்கை ஈஸ்போர்ட்ஸ் சங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான உத்தியோகபூர்வ பங்காளித்துவத்தின் உத்தியோகபூர்வ அறிமுக விழாவில் தற்போதைய தேசிய ஈஸ்போர்ட் அணியைச் சேர்ந்த வீரர்கள்.
இடமிருந்து வலமாக: நதீஷானி 'ஃபாக்ஸி' ஜெயசிங்க, ஷிஹாப் 'ஷிஹாப்' ரிசான், உஷித் 'டோடோமெய்ஸ்டர்' பீரிஸ், இலங்கை ஈஸ்போர்ட்ஸ் சங்கத்தின் தலைவர் ரவீன் விஜயதிலக, விபுதா 'ChromnZ' டி சொய்சா, சஞ்சீவன் 'பென்ஜே' கலையீசன் மற்றும் சஹ்ரா 'நெர்ட்' தாஜுதீன்.
இலங்கையில் அடுத்த தலைமுறை மாற்றத்தையொட்டிய விளையாட்டை மேம்படுத்துவதற்கான பயணத்தின் சமீபத்திய மைல்கல்லாக, இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனமானது 'இலங்கை ஈஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்' (SLESA) சங்கத்துடன் ஒன்றிணைந்து அதன் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இரண்டு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் Esports இன் உத்தியோகப்பூர்வ அனுசரணையாளர்கள் என்ற ரீதியில், PUBG Mobile, Free Fire, Valorant, DOTA 2, Counter-Strike: GO, Pro Evolution Soccer மற்றும் Tekken 7 உள்ளிட்ட SLESA யினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய Esports அணிகளுக்கு டயலொக் அனுசரணை வழங்குகின்றது. டயலொக், வழங்கும் இந்த அனுசரனையின் மூலம் SLESA மேற்கொள்ளும் உள்ளூர் விளையாட்டாளர்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு அது உதவிகரமாக அமைவதுடன் மாவட்ட மட்டத்திலான Esports போட்டித் தொடர்களை நடத்தி நாட்டின் அனைத்து மூலைகளிலும் சிறந்தவொரு Esports கட்டமைப்பினை கொண்டு வரவும் அது உதவும் எனவும் கருதப்படுகின்றது. அத்துடன், வருடாந்தம் ‘டயலொக் -SLESA தேசிய ஈஸ்போர்ட்ஸ் விருதுகள்’ விழாவில் நாட்டின் சிறந்த விளையாட்டாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். இத்துடன், தெற்காசியாவில் 5G பரீட்சார்த்த வலையமைப்பைப் பயன்படுத்திய முதல் மொபைல் நிறுவனம் என்ற பெருமையையும் டயலொக் பெறுவதுடன், குறைந்தளவு தாமதத்துடன் தடையற்ற கேம்பிளேயை (Gameplay) உறுதிசெய்ய அதிவேக 5G இணைப்புடன் கூடிய Esports இயங்குதளங்களையும் டயலொக் எளிதாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இலங்கை ஈஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்” சங்கமானது (SLESA) டயலொக் நிறுவனத்துடன் மேற்கொண்ட முன்னேற்றங்களையும், Esports (ஈஸ்போர்ட்ஸ்) வளர்ச்சிக்கு டயலொக் அனுசரணை வழங்கி ஆதரவளிப்பதில் முக்கிய பங்கினை ஆற்றுவதையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்" என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் Esports இன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் டயலொக் வழங்கும் 5G இணைப்பு வலுவானது இலங்கையை தெற்காசியாவில் Esports கேந்திர மையமாக நிலைநிறுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்க முடியும்."என்றார்.
SLESA இன் தலைவர் ரவீன் விஜயதிலக்க அவர்கள் தெரிவிக்கையில், “கடந்த தசாப்தத்தில் இலங்கையில் ஈஸ்போர்ட்ஸ் (Esports) மிகுந்த வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது, மேலும், நாட்டின் பிராந்திய மட்டத்தில் இளைஞர்கள் Esports போட்டிகளில் முன்னணி பாத்திரத்தை வகிக்க தயாராக உள்ளனர். டயலொக் ஆசிஆட்டா மற்றும் SLESA இன் ஒன்றிணைவில், விளையாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்; அத்துடன் ஆசிய விளையாட்டுகள் மற்றும் 'கொமன்வெல்த்' (பொதுநலவாய) விளையாட்டுகள் உட்பட ஈஸ்போர்ட்ஸை (Esports) உத்தியோகபூர்வ பதக்கங்களை வழங்கும் போட்டியாக ஒருங்கிணைத்துள்ள பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் நமது Esports விளையாட்டாளர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்" என்றார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் புத்தாக்குனர் பிரிவு அதிகாரி அந்தனி ரொட்ரிகோ அவர்கள் தெரிவிக்கையில், “இலங்கையில் ‘Esports இன் உத்தியோகபூர்வ அனுசரணையாளர் என்ற ரீதியில் நாம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றோம். பெருந்தொற்றிற்கு மத்தியில் கூட, Esports ஏராளமான ஈடுபாடு மற்றும் சுறுசுறுப்பான பங்கேற்புடன் பெரும் வளர்ச்சியை காட்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ‘டயலொக் கேமிங்’ விளையாட்டுகளுக்கு ரூபா 16 மில்லியனை டயலொக் வழங்கியுள்ளது. இலங்கையில் ஈஸ்போர்ட்ஸ் (Esports) மேம்பாட்டை நோக்காகக் கொண்டு SLESA உடனான இந்த ஒன்றிணைவின் மூலம், இலங்கையில் பரவிக்கிடக்கின்ற தேசிய மட்டத்திலான சைபர் விளையாட்டு ஆர்வலர்களின் அடுத்த தலைமுறை மத்தியிலும் இப்போட்டிகளை வேரூன்றச்செய்து நாடளாவிய ரீதியில் மேலும் வலுப்படுத்துவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், சிறந்த கேமிங் செயல்திறன் கொண்ட உலகத் தரம் மிக்கவர்களாக அவர்களை மிளிரச்செய்து முன்கொண்டு செல்வதில் டயலொக்கின் 5G-ரெடி நெட்வேர்க் முக்கிய பங்களிப்பை வழங்கும். எனவே, SLESA இன் ஆதரவுடன் அனைத்து ஈகேமிங் விளையாட்டாளர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட மற்றும் உயர்ந்த கேமிங் அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் உரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.
டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், கரைப்பந்து மற்றும் வலைப்பந்து மற்றும் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , ஜூனியர் கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி , பிரீமியர் கால்பந்து, மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பாரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணிஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.