பொருள் விரிவாக்கம்

Dialog Sri Lanka Cricket Awards 2025 இல் இலங்கைக் கிரிக்கெட்டின் சிறப்பான சாதனைகளைக் கொண்டாடிய டயலொக்!

7th August 2026         Colombo

 

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் (ஆண்கள் & பெண்கள்) வெற்றியாளர்கள்: பதும் நிஸ்ஸங்க & சமரி அதபத்து வழங்கியவர்கள்: கௌரவ சுனில் குமார கமகே (விளையாட்டுத்துறை அமைச்சர்), திரு. சுபுன் வீரசிங்க (குழும CEO - டயலொக் ஆசிஆட்டா), மற்றும் திரு. எரான் விக்ரமரத்ன (தலைவர் - Transformation Committee, SLC)

இலங்கையின் #1 தொடர்புச் சேவை வழங்கியும், விளையாட்டுத் துறையின் தீவிர ஆதரவாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி , Sri Lanka Cricket இன் நீண்டகாலப் பங்காளர் என்ற வகையில், கொழும்பு City of Dreams இல் நடைபெற்ற Dialog Sri Lanka Cricket Awards 2025 நிகழ்வின் பிரதான அனுசரையாளராக (Title Partner) நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடியது.

தொடர்ச்சியாக 13 ஆவது ஆண்டாக Sri Lanka Cricket அணியின் உத்தியோகபூர்வ அனுசரையாளராகப் பெருமையுடன் பணியாற்றி வரும் டயலொக், 2028 வரை தொடரும் 3 ஆண்டுகாலப் பங்காண்மையின் கீழ் Dialog Sri Lanka Cricket Awards இன் பிரதான அனுசரையாளராக இணைந்து இலங்கைக் கிரிக்கெட்டிற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இக்கூட்டுப்பங்காண்மைகள், திறமைகளைக் கெளரவிக்கும் அதே வேளையில் இலங்கைக் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஆதரவளிக்கும் டயலொக்கின் தொடர்ச்சியான முதலீட்டைப் பிரதிபலிக்கின்றன.

தனது "Powering the Champions of Tomorrow" திட்டத்தின் மூலம் அடுத்த தலைமுறை விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர்களை டயலொக் கௌரவித்தது. ஆண்களுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் (Emerging Men's Cricketer of the Year) விருதை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, கமில் மிஷாரவிற்கு வழங்கி கௌரவித்தார். அதேநேரம், பெண்களுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை (Emerging Women's Cricketer of the Year) விருதை இமேஷா துலானி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழுமச் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் ஹர்ஷ சமரநாயக்கவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

அன்றைய மாலையின் மிகயுயர்ந்த தனிநபர் கௌரவங்களாக, ஆண்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக பதும் நிஸ்ஸங்கவும், பெண்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக சமரி அதபத்துவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கை கிரிக்கெட்டில் இருவரது விதிவிலக்கான ஆட்டத்திறனும் அங்கீகரிக்கப்பட்டது.

11 வருடங்களாக டயலொக்கின் பெருமைமிக்க பிராண்ட் பிரதிநிதியாகவும் (Brand Ambassador), இலங்கையின் புகழ்பெற்ற விளையாட்டு ஆளுமைகளில் ஒருவராகவும் விளங்கும் சமரி அதபத்து, சிறந்த ODI பந்துவீச்சாளர், சிறந்த T20I சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் சிறந்த T20I பேட்டர் ஆகிய மேலும் மூன்று விருதுகளைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம் தனது உலகத்தரம் வாய்ந்த திறமையை மீண்டும் நிரூபித்தார். சிறந்த T20I பேட்டருக்கான அவரது விருதை, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் ஊடகம் மற்றும் உள்ளடக்க வணிகத் தலைவரும் துணைத் தலைவருமான புதுது அலுத்கெதற வழங்கினார். இது நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையின் சாதனைகளைக் கொண்டாடுவதில் டயலொக்கின் பெருமையையும், விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் அதன் தொடர்ச்சியான முதலீட்டையும் காட்டுகிறது.

Sri Lanka Cricket உடனான நீண்டகாலப் பங்காண்மையின் மூலம், டயலொக் அனைத்து மட்டங்களிலும் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அடித்தள மட்டத்திலான வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் திறமைகளை உருவாக்குவது முதல் நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவது வரை டயலொக் தொடர்ந்து ஆதரவளிக்கிறது. Dialog Sri Lanka Cricket Awards நிகழ்வானது, திறமைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில் இலங்கை விளையாட்டு வீரர்களின் எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் இப் பொதுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இலங்கையின் தேசிய கிரிக்கெட், கைப்பந்தாட்டம் (Volleyball) மற்றும் ஈ-ஸ்போர்ட்ஸ் (Esports) அணிகளின் பெருமைமிக்க அனுசரையாளராகத் திகழும் டயலொக், தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா (National Para Games) மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு வழங்கி வரும் ஆதரவின் ஊடாக, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கும் Sri Lanka Golf Open தொடருக்கும் தொடர்ச்சியாக வலுச்சேர்த்து வருகிறது. அத்துடன், "Powering the Champions of Tomorrow" எனும் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி தங்கக் கோப்பை கைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்தாட்டத் தொடர்கள் மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டிகள் என்பவற்றுக்குத் தனது அனுசரணையை வழங்கி வருகிறது. மேலும், இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்புப் பங்காளராக இணைந்து, Los Angeles 2028 ஒலிம்பிக் போட்டிகளை நோக்கிய இலங்கையின் வரலாற்றுப் பயணத்திற்கும் டயலொக் கரம்கோர்த்துச் சக்தியளிக்கிறது.

ஆண்டின் வளர்ந்து வரும் சிறந்த ஆண் வீரர்: கமில் மிஷார வழங்கியவர்கள்: திரு. சுபுன் வீரசிங்க (குழும CEO - டயலொக் ஆசிஆட்டா) மற்றும் திரு. சிந்தக எதிரிமான (தலைவர் - National Cricket Operations)

ஆண்டின் வளர்ந்து வரும் சிறந்த பெண் வீராங்கனை: இமேஷா துலானி வழங்கியவர்கள்: திரு. ஹர்ஷ சமரநாயக்க (குழுமச் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி) மற்றும் திரு. சன்டிம மாபடுன (தலைவர் - International Cricket)

ஆண்டின் சிறந்த T20 பெண் பேட்டர்: சமரி அதபத்து வழங்கியவர்கள்: திரு. புதுது அலுத்கேதற (ஊடகம் மற்றும் உள்ளடக்க வணிகத் தலைவர் / துணைத் தலைவர் - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), திரு. ருவன் கல்பகே, மற்றும் திரு. ரஸல் ஆர்னல்ட்