பொருள் விரிவாக்கம்

டயலொக் நெத்சுவய, பார்வைக்குறைபாட்டை ஒழிக்கும் பொருட்டு ‘Vision 2030’ இற்கு தோள்கொடுக்கிறது

2023 டிசம்பர் 5         கொழும்பு

 

 Official Website to Support Inclusive Online Journeys

படத்தில் இடமிருந்து வலமாக: மருத்துவ அதிகாரி கலாநிதி.எச். யு. என். திஸாநாயக்க, பொதுச்சுகாதார அதிகாரி (PHI) கே. கிருஷான், பொதுக்கசுகாதார தாதி எஸ். எச். வை. கஃபூர், பொதுச்சுகாதார சிறப்பு தேர்ச்சி தாதி அதிகாரி என். சுவர்ணலதா (SPGNO), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, Vision 2020 திட்டத்தின் (Vision 2030 இன் உள்நோக்கு) தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி. சம்பா பி. பனகல, இலங்கை கண் மருத்துவர் கல்லூரியின் தலைவர் கலாநிதி. கபில பந்துதிலகே, பொதுச்சுகாதார தாதி கே. எல். எஸ். சில்வா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பேண்தகுநிலை தலைவர் மற்றும் குழுமத்தின் இடர் மற்றும் இணக்கப்பாடு தலைவர் அசங்க பிரியதர்ஷன, மருத்துவ பொறுப்பதிகாரி கலாநிதி. சி. எம். ஜயலத்

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனராக, உலக பார்வை தினத்தன்று மூக்குக்கண்ணாடி தேவைப்படும் பாடசாலை சிறார்களுக்காக தனது அர்ப்பணிப்பை அளிக்க முன்வந்தது. சுகாதார அமைச்சின் V2030 முன்னெடுப்புடனான கூட்டாண்மையுடன் நடாத்தப்பட்ட நிறுவனத்தின் நெத்சுவய திட்டத்தின் ஒரு அங்கமே இது.

2007இல் நெத்சுவய வழியாக நிறுவப்பட்ட தேசிய Vision 2020 திட்டத்திற்கு இடைவிடாது அளித்து வரும் ஆதரவின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் பார்வையின்மை தடுப்புக்கான சர்வதேச முகவரகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சி, மற்றும் உள்நாட்டில் சுகாதார அமைச்சினால் வழிநடத்தப்பட்டது, தேசிய சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக நிலையான தேசிய திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் குணப்படுத்தக்கூடிய பார்வைக்குறைபாட்டை குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கண் மருத்துவர்கள் கல்லூரி, சுகாதார அமைச்சின் சார்பாக, திட்டத்தின் பணிகளைத் தொடரும் பொருட்டு Vision 2030 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

டயலொக்கின் சமீபத்திய உறுதிமொழியானது, பள்ளி மாணவர்களுக்கான கண் மருத்துவமனைகளை தொடர்ந்து நடத்தும் தேசிய பள்ளி மருத்துவ பரிசோதனை திட்டத்தால் அடையாளம் காணப்பட்ட, தேவையுள்ள பள்ளி சிறார்களுக்கு மூக்குக்கண்ணாடிகளை வழங்குவதாகும். இந்த ஆண்டுக்கான உலக பார்வை தின பயனாளிகள், பேண்தகு நிலையான வளர்ச்சி இலக்கு 4 ஐ ஆதரிக்கும் அமைப்பின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதாவது தரமான கல்வி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் இப்போது தங்கள் முழு திறனை அடைவதற்கு இடைஞ்சலாக இருந்தா பெரும் தடையை கடக்கமுடியும். பல ஆண்டுகளாக, டயலொக் சிறப்புத்தேர்ச்சி புலமைப்பரிசில்கள், நெனச தொலைக்காட்சி மற்றும் நெனச Smart பள்ளிகள் உள்ளிட்ட முன்னெடுப்புகளுடன் கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதில் Dialog தொடர்ந்து வழிவகுத்தது. நிறுவனம் இன்றுவரை இந்த முன்னெடுப்புகளுக்கு ரூ.1 பில்லியன் இற்கு மேலதிகமாக முதலிட்டுள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “ஒவ்வொரு குழந்தையும் ஒளிமயமான எதிர்காலத்தை கற்பனை செய்வதற்கான தெளிவைப் பெறுவதை உறுதிசெய்ய, எமது நெத்சுவய திட்டத்தின் மூலம் சுகாதார அமைச்சின் V2030 முன்னெடுப்புடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையர்களின் வாழ்வை வலுவூட்டுவதும் வளப்படுத்துவதும் என்ற எமது தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த இந்த முன்னெடுப்பு, சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே இல்லாத அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையை பறைசாற்றுகிறது” என்றார்.

2016 ஆம் ஆண்டு முதல், Dialog பல கண் முகாம்களை நடத்தி, 27,363 நோயாளிகளை பரிசோதித்து, 19,823 தனிப்பயனாக்கப்பட்ட கண்ணாடிகளை தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் விநியோகித்துள்ளது.