டயலொக் தெற்காசியாவின் முதலாவது வெற்றிகரமான mmWave 5G சோதனை முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது
2022 டிசம்பர் 23 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி , 2018 ஆம் ஆண்டின் போது 5G திறன்களை வெளிப்படுத்திய தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் என்ற ரீதியில், தெற்காசியாவில் முதல் முறையாக mmWave 5G இன் வெற்றிகரமான சோதனை (பரீட்சார்த்த ) முன்னெடுப்பையும் தற்போது மேற்கொண்டுள்ளது.
டயலொக் 5G பதிவிறக்க (Download ) வேகமானது 4 Gbps ஐ விட அதிகமான NSA பயன்முறையை அடைந்துள்ள அதேவேளை mmwave ஆனது தற்போதைய தரநிலைகளை விட கணிசமான அளவு அதிக செயல்திறனை அடைந்துள்ளதுடன் குறுகிய தூரங்களில் அதிகரித்த திறனை அது வழங்வகுவதுடன் வேகமான uplinks மற்றும் downlink , பயனர்கள் 5G இன் அனைத்து நன்மைகளையும் பயன்படுத்தவும் உதவுகின்றது. mmWave தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் நிலையான broadband செயல்திறன் நிலைகளை அது மேம்படுத்துவதன் மூலம் குறைந்த தாமத தொழில் பயன்பாடுகளை கொண்ட தொழில்துறைக்குள் அடங்குகின்ற தொழிற்துறை தானியங்கு தன்மை, சுகாதார பாதுகாப்பு, அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகள் மற்றும் மெய்நிகர் யதார்த்தம் உள்ளிட்ட குறைந்த தாமதத் தொழில் பயன்பாடுகளை சிறப்புடன் செயல்படுத்துகின்றது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “5G mmWave மூலம் நுகர்வோர் மத்தியிலும் வணிகத்துறையின் மத்தியிலும் ஆட்டத்தையே மாற்றியமைப்போராக உலகம் முழுவதுமான வேகத்தை நாம் பெறுகிறோம், இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு திறன்களை வெளிப்படுத்தும் தெற்காசியாவில் முதல் தொழிற்படுத்துனராக இருப்பதுடன் 'எதிர்காலம் இன்றே' எனும் நமது வர்த்தக நாம நெறிமுறைக்கேற்ப உண்மையாக இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம், இலங்கையின் ICT பரப்பில் புதியதோர் அத்தியாயத்தை திறந்துள்ளதுடன், mmWave போன்ற சிறந்த முதல் தரத்திலான தொழில்நுட்பங்களால் தொழிற்படுகின்ற, நமது 5G வலையமைப்பு வழங்கும் முடிவற்ற வாய்ப்புகள் மற்றும் புதுமையான பயன்பாடுகளையிட்டு மேலும் எதிர்பார்ப்புகளை நாம் கொண்டுள்ளோம் " என்றார்.
இந்த வெளிப்படுத்தலானது பிராந்தியத்தின் முதல் 5G சோதனை வலையமைப்பின் வரிசைப்படுத்தல் உட்பட தெற்காசியா மற்றும் இலங்கையில் மேற்படி 5G தொழிற்பாடானது முதன்மைமிகு ஒரு மைல்கல்லாக குறிப்பிடப்படுவதுடன், முதலாவது சுயாதீனமான 5G (5G SA) வலையமைப்பு சோதனை நடவடிக்கையாகவும் மற்றும் டிசம்பர் 2018 ஆம் www.dialog.lk/5g ஆண்டில் நிலைப்படுத்தப்பட்ட முதல் தரநிலை அடிப்படையிலான 5G நிலையான வயர்லஸ் மாதிரி பரப்பியாகவும் இது குறிப்பிடப்படுகின்றது.