பொருள் விரிவாக்கம்

தேசிய பாராலிம்பிக் குழுவுடனான தற்போதைய கூட்டாண்மையை டயலொக் மேலும் வலுப்படுத்துகிறது

மார்ச் 02, 2022         கொழும்பு

 

Deepal Herath, receiving the sponsorship from Amali Nanayakkara

டயலொக் ஆசிஆட்டாவின் குழும பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணாயக்கார அவர்களிடமிருந்து அனுசரணையை NPC யின் தலைவர் லெப்டினன்ட் கேணல் தீபால் ஹேரத் பெற்றுக் கொள்கின்றார். மேலும் படத்தில் (இடமிருந்து வலம்) NPC இன் பொருளாளர் திலினி வாரியபொல, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் வர்த்தக மற்றும் ஊடகம் பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க, NPC இன் செயலாளர், பிரிகேடியர் பந்துல பண்டார மற்றும் NPC இன் துணைத் தலைவர் பிரியந்த பீரிஸ்

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தேசிய பராலிம்பிக் குழுவுடன் இரண்டு தசாப்த கால பங்காளித்துவத்தை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பதன் மூலம் இலங்கையில் மாற்று திறனாளிகளுக்கான பராவிளையாட்டுகளை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை புதுப்பித்துள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆனது 2002 ஆம் ஆண்டு முதல் தேசிய பராலிம்பிக் குழுவிற்கு அனுசரணை வழங்கி வருகின்றது மேலும் 22 வருடங்களுக்கும் மேலாக இராணுவ பரா விளையாட்டுக்கள்இ தேசிய பாரா விளையாட்டுக்கள் மற்றும் உலக பராலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை பரா தடகள வீரர்களை வலுவூட்டுவதில் தீவிரமாக செயற்படுகின்றது.

இலங்கையின் பராலிம்பிக் வீரர்கள் சர்வதேச அரங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 2020 டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் 67.79 மீட்டர் ஈட்டி எறிதலில் (T46) உலக சாதனையை முறியடித்து தினேஷ் பிரியந்த, கோடைகால பாராலிம்பிக் விளையாட்டில் இலங்கைக்கு முதல் தங்க பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். அவரது அணித் தோழரான இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சமித துலான் கொடித்துவக்கு டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் F64 ஈட்டி எறிதல் போட்டியில் 65.61 மீற்றர் தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் 400M (T46) ஓட்டப் பந்தயத்தில் 49.28 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்ற பிரதீப் சஞ்சயஇ பதக்கம் வென்ற முதல் இலங்கை பராலிம்பியன் ஆவார்.

இலங்கையின் பாராலிம்பியன்கள் சாதனைகளுக்காக நீண்ட தூரம் பயணிக்கின்றார்கள். 2020 டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் எங்களின் சாதனைகள் அதற்குச் சான்றாக உள்ளன” என்று தேசிய பாராலிம்பிக் குழுவின் தலைவர் கேணல் தீபால் ஹேரத் தெரிவித்தார். “எங்கள் பாராலிம்பியன்கள் மீது நம்பிக்கை வைத்துஇ உலக அரங்கில் அவர்கள் சிறந்து விளங்குவதற்க ஆதரவளித்த எங்கள் நீண்ட கால பங்காளரான டயலொக் ஆசிஆட்டாவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.. எதிர்காலத்திலும் டயலொக் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவினை வழங்குவதையிட்டு நாங்கள் பெருமையடைகிறோம்.”

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் கரைப்பந்து அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , ஜூனியர் கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி போட்டிகள், முன்னணி கால்பந்து போட்டிகள், பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள், மற்றும் ஜூனியர் கைப்பந்து மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு - இராணுவ பாரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.