பொருள் விரிவாக்கம்

டயலொக், LMD இன் Brands Annual இனால் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் சேவை மற்றும் தொலைத்தொடர்பு வர்த்தகநாமம் என மகுடம் சூட்டப்பட்டது

2024 ஜூன் 03         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, LMD இன் Brands Annual ஆய்வில் மிகவும் விரும்பப்படும் சேவை வர்த்தகநாமமாகவும், மிகவும் விரும்பப்படும் தொலைத்தொடர்பு வர்த்தகநாமமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக சந்தையில் முன்னணி வகித்து வருவதை இது சான்றுபகர்கிறது.

இந்த மதிப்புமிகு அங்கீகாரம், திடமான வலையமைப்பின் தரம் மற்றும் வியத்தகு வாடிக்கையாளர் மதிப்பை வழங்குவதில் நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பு, டிஜிட்டல் உள்ளிணைக்கை மேம்பாடு மற்றும் தொலைத்தொடர்பு துறையில் தொழில்நுட்ப புத்தாக்கத்துக்கான அயராத முயற்சிகளை பறைசாற்றுகிறது. "இலங்கையர்களையும் நிறுவனங்களையும் சக்திவாய்ந்தவையாகவும் செழிப்புடனும் மாற்றுவது" என்ற நோக்கத்துடன் செயற்படும் இந்நிறுவனமானது, தான் சேவையாற்றும் சமூகங்களை மேம்படுத்தவும், உள்ளிணைக்கை தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டின் முழுமையான திறனை வெளிக்கொணரவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது. இலங்கையை ஓர் டிஜிட்டல் தேசமாக உருமாற்றும் பயணத்தை முன்னெடுத்து வருகிறது.

"எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்திலும் புதுமையுடனும் சேவையளிப்பதில் நாம் காட்டும் மாறாத அர்ப்பணிப்பை வலியுறுத்தும் இந்த அங்கீகாரத்தால் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகின்றோம்," என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும அவர்கள் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர் "இந்த சாதனை, எங்களின் மதிப்புக்குரிய வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையையும் நேசத்தையும் பிரதிபலிக்கின்றது. மேலும் எங்களை டிஜிட்டல் வலுவூட்டல் மற்றும் சேவை முன்னணியில் தொடர்ந்தும் முன்னேற ஊக்குவிக்கின்றது" என்றார்.

டயலொக், இலங்கையர்களின் உண்மையான டிஜிட்டல் துணையாய் இலங்கையை ஓர் டிஜிட்டல் தேசமாக உருமாற்றும் பணியில் டிஜிட்டல் மேம்பாடுகளை முன்னோடியாய் நின்று வழங்குவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.