பொருள் விரிவாக்கம்

டயலொக் வலுவூட்டும் கரப்பந்தாட்ட வீராங்கனைகள் Central Asian Challenge-இற்குத் தயார்

19th May 2026        

 

Dialog-powered Sri Lanka Women’s Volleyball team ready for Central Asian challenge

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் திரு. மஹிந்த பண்டாரவிடம் காசோலையை வழங்குதல்.
இடமிருந்து வலம்: திரு. ரியாஸ் ஹனிபா – சந்தைப்படுத்தல் செயல்பாட்டுத் தலைவர் (டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), கமாண்டர் மஹேஷ காரியவசம் – உப தலைவர் (இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம்), திரு. லசந்த தெவரப்பெரும – குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி (டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), திரு. மஹிந்த பண்டார – உப தலைவர் (இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம்) மற்றும் மேஜர் ஜெனரல் திலுப பண்டார – உப தலைவர் (இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம்).

நாட்டின் விளையாட்டுத் துறையின் முன்னணி ஊக்குவிப்பாளராகவும், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தேசிய மட்டத்தில் தேசிய விளையாட்டுக்கு ஆதரவளித்து வரும் நிறுவனமுமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தினால் வலுவூட்டப்படும் இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட அணி, 2026 Central Asian Women's Volleyball Tournament தொடரில் பங்கேற்பதற்காக இந்த மே மாதம் 20ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது. இத்தொடரானது பிராந்தியத்தைச் சேர்ந்த 8 நாடுகளின் பங்கேற்புடன் மே 22ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படவுள்ளதுடன், இதில் அஷானி சமோதிகாவின் தலைமையிலான இலங்கை அணி ‘Group B’ இன் கீழ் போட்டியிடவுள்ளது. இப்பிரிவின் ஏனைய அணிகளாக கசகஸ்தான், ஈரான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் போட்டியிடவுள்ளன. தொடரின் ‘Group A’ இன் கீழ் இந்தியா, கிர்கிஸ்தான், மாலைதீவு மற்றும் தொடரை நடத்தும் நேபாளம் ஆகிய நாடுகள் போட்டியிடவுள்ளன.

“இந்தத் தொடரில் நாம் போட்டியிடும் ‘Group B’ ஆனது ‘Group A’ உடன் ஒப்பிடுகையில் மிகவும் சவாலானது. எமது பிரிவில் உள்ள கசகஸ்தான் அணி, அண்மையில் நடைபெற்ற Asian Women's Volleyball Championship தொடரில் சீனாவை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அணியாகும். எனவே, அவர்களே எமது பிரிவில் நமக்கு இருக்கும் பலமான சவாலாவர். பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் எமது வீராங்கனைகள் வெற்றியீட்டுவார்கள் என்ற பலமான நம்பிக்கை எமக்கு உள்ளது. ஈரான் அணியுடனான போட்டியில் வெற்றி பெறுவதற்கு எமது வீராங்கனைகளின் திறமை போதுமானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். எனவே, குறைந்த பட்சம் இவற்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று Semi-finals போட்டிக்கு முன்னேறுவதே எமது எதிர்பார்ப்பாகும்” என இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமில விஜேபால தெரிவித்தார்.

“இந்தத் தொடருக்காக நாங்கள் மிகவும் திறமையானதொரு அணியை களமிறக்குகிறோம். அவர்கள் சுமார் இரண்டு மாத காலமாக வதுபிட்டிவல உட்புற விளையாட்டு அரங்கில் தங்கியிருந்து பயிற்சிகளில் ஈடுபட்டனர். இத்தொடரில் பங்கேற்பதற்காக விளையாட்டு அமைச்சு வழங்கிய ஆதரவிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், நாட்டின் தேசிய விளையாட்டுக்கு பின்னால் எப்போதும் ஒரு தூணாக விளங்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம், இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக எமக்கு வழங்கிய அனுசரணையிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்” என இலங்கை Volleyball Federation இன் உப தலைவர் மஹிந்த பண்டார தெரிவித்தார்.

"இலங்கையின் விளையாட்டுத் துறையை வலுவூட்டுவதற்காக டயலொக் மேற்கொள்ளும் பல வேலைத்திட்டங்களுக்கு மத்தியில், தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்திற்காகவும் எமது அதிகபட்ச பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கி வருகிறோம். திறமைகள் நிறைந்த இந்நாட்டு இளைஞர், யுவதிகளை பாடசாலை மட்டத்திலான மிக உயர்ந்த போட்டித் தளங்களுக்குக் கொண்டு வரவும், திறமையாளர்களுக்கு தேசிய மட்டத்திலான போட்டி வாய்ப்புகளை வழங்கவும் மாத்திரமன்றி, அவர்களை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லவும் டயலொக் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதற்கமைய, இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு டயலொக்கின் பலத்தை வழங்குவதுடன், எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என டயலொக் நிறுவனத்தின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும தெரிவித்தார்.

Central Asian Women's Volleyball Tournament தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில், Spikers ஆக திலுக்சி ஹர்ஷனி, நிமேஷிகா செவ்வந்தி, பிரீத்திகா பிரமோதனி, டிமி மேரி, அரண சஞ்ஜீவனி மற்றும் ஷாலு திலக்ஷனா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். சஞ்ஜீவனி கருணாரத்ன, தில்கி நெத்சரா, செசந்தி ருவண்யா மற்றும் பியுமி பாஷினி ஆகியோர் அணியின் Short Spikers ஆக விளையாடவுள்ளனர். நதுனி நிமம்சலா மற்றும் காவிந்தி அசந்திகா ஆகியோர் Libero வீராங்கனைகளாகவும், அஷானி சமோதிகா மற்றும் தில்கி சாருகா ஆகியோர் Setters ஆகவும் இந்தச் சுற்றுப்பயணத்திற்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணியின் Head Coach ஆக அமில விஜேபாலவும், Assistant Coach ஆக உதய ருக்மாலும், Trainer ஆக உபேந்திர பெரேராவும் செயற்படுகின்றனர். வீராங்கனைகள் பொறுப்பதிகாரியாக ரேணுகா நிர்மலியும், Team Manager ஆக கமாண்டர் மஹேஷ காரியவசம் செயற்படுகின்றனர்.

டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் Esports ஆகிய தேசிய அணிகளின் பெருமைக்குரிய அனுசரணையாளராக விளங்குவதுடன், Sri Lanka Open Golf Championship தொடரின் முதன்மை அனுசரணையாளராகவும் உள்ளது. இலங்கை Netball Federation மற்றும் National Paralympic Committee ஆகியவற்றிற்கான செயற்திறன் மிக்க அனுசரணைகளை வழங்குவதன் மூலம் இந்நாட்டு வீர, வீராங்கனைகள் தேசிய மற்றும் சர்வதேச சாம்பியன்ஷிப் தொடர்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, விளையாட்டில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. மேலும், நாளைய தினத்தின் சாம்பியன்களை வலுவூட்டுவதற்கான தனது அர்ப்பணிப்புக்கு இணங்க, ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டத் தொடர், தேசிய இளையோர் மற்றும் சிரேஷ்ட Netball தொடர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான Rugby விளையாட்டுகளையும் டயலொக் தொடர்ந்து வலுவூட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dialog-powered Sri Lanka Women’s Volleyball team ready for Central Asian challenge