பொருள் விரிவாக்கம்

டயலொக் அனுசரணையில் விளையாட்டையும் பொழுதுபோக்கையும் கொண்டாடும் Sri Lanka Sports Fiesta 2024.

2024 ஆகஸ்ட் 05         கொழும்பு

 

Digital Innovation Fund (DIF), Managed By BOV Capital And Powered
                        By Dialog Axiata PLC

டயலொக் ஆசிஆட்டாவின் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மஹேசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ். எல். நசீர் ஆகியோரிடம் அனுசரணையை கையளிக்கிறார்.
இவர்களுடன் புகைப்படத்தில் (இ): ஏ. எஸ். நாலக்க – பொதுச் செயலாளர், இலங்கை கரப்பந்து சம்மேளனம், போல் நியூமன் – இலங்கை கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர், விஷ்வநாதன் பெருமாள் – இலங்கை ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர், ஹர்ஷ சமரநாயக்க – துணைத்தலைவர், வர்த்தகநாமம் மற்றும் ஊடகம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷேமல் பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் (வ), சுஜீவ கொடலியத்த – பொருளாளர், இலங்கை கிரிக்கெட், ஜஸ்வர் உமர் – தலைவர், இலங்கை காற்பந்து சம்மேளனம்

இலங்கை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து ஒழுங்குபடுத்தும் Sri Lanka Sports Fiesta 2024 கொழும்பில் ஆகஸ்ட் மாதம் 16 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறும். இதற்கு இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு தன்னிகரில்லா ஆதரவை நல்கும் நிறுவனம் என்ற ரீதியில் இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தன் அனுசரணையை வழங்குகிறது. இந்நிகழ்வு இதுவரை காலமும் இலங்கையில் நடந்திரா ஓர் விளையாட்டுத்திருவிழாவாக இருக்கும் என்பதோடு தெற்காசியாவில் இதுபோன்றதொரு நிகழ்வு இதுவே முதல்முறை எனலாம். இத்திருவிழாவில் 600 மெய்வல்லுனர்கள் கிரிக்கெட், ரக்பி, காற்பந்து, கரப்பந்து, வலைப்பந்து, ஹொக்கி மற்றும் கூடைப்பந்து என ஏழு விதமான போட்டிகளில் மோதவுள்ளனர்.

நம்நாட்டு திறமைசாலிகளுக்கு ஓர் களம் அமைப்பதோடு எடுத்த தலைமுறை மெய்வல்லுனர்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Sri Lanka Sports Fiesta 2024, விளையாட்டு வீரர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தவும், உயர் மட்டத்தில் போட்டியிடவும் ஒரு களத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு விளையாட்டும் தனது தனித்துவமான பொழுதுபோக்கைக் கொண்டுள்ளதால், பார்வையாளர்கள் பரபரப்பான போட்டிகளை எதிர்பார்க்கலாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதனை ஒரு வருடாந்த நிகழ்வாக நடாத்தி ஒவ்வொரு வருடமும் மெய்வல்லுனர்களுக்கு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க உத்தேசித்துள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு, அணிகள் வெற்றிக்காக மோதும் போது கடுமையான போட்டிகளும் சுவாரஸ்யமான முடிவுகளும் காத்திருக்கின்றன. ரக்பி விரும்பிகள் சக்திவாய்ந்த டேக்கிள்கள் மற்றும் துரிதமான ஆட்டங்களை எதிர்பார்க்கலாம். இதேவேளை காற்பந்து பிரியர்கள் திறமையான ஆட்டங்கள் மற்றும் மூலோபாய நகர்வுகளை ரசிப்பார்கள். கரப்பந்து மற்றும் வலைப்பந்து போட்டிகள் உச்சகட்ட வேகத்தில், மேல் பறக்கும் ஸ்பைக் மற்றும் விரைவான பாஸ்களுடன் சாமர்த்தியமானவை ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாக்கி மற்றும் கூடைப்பந்தாட்டம், வேகம், திறமை, குழு வேலைகளை வெளிப்படுத்தும் ஆச்சரியகரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவன.

கிரிக்கெட் போட்டிகள் புளூம்ஃபீல்டு மற்றும் தர்ஸ்டன் மைதானங்களில் நடத்தப்படும், ரக்பி மற்றும் கால்பந்து போட்டிகள் ரேஸ்கோஸ் மைதானத்தில் நடைபெறும். கரப்பந்து றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டு வளாகத்தில் நடைபெறும், வலைப்பந்து போட்டிகள் டோரிங்டன் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாக்கி விளையாட்டுகள் astroturf மைதானத்திலும் கூடைப்பந்தாட்ட போட்டிகள் 3x3 மைதானத்திலும் நடைபெறும்.

எனினும், இவ்விழா வெறும் விளையாட்டு நிகழ்ச்சி மட்டுமல்ல; இது இலங்கை கலாசாரம் மற்றும் சமூகத்தை கொண்டாடுகிறது. விளையாட்டு அரங்குகள் துடிதுடிப்பாகக் காணப்படும், அனைத்து வயதினரும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்கலாம். குடும்பங்கள் ஒன்றாக ஒரு நாள் மகிழ்ச்சியாக செலவிட இது ஒரு சிறந்த இடமாக இருக்கும் வகையில் களியாட்ட விளையாட்டுகள் மற்றும் கண்காட்சிகள் காணப்படும். மேலும், இந்நிகழ்வு பல்வேறு இலங்கை உணவுகளை வழங்கும் உணவுக் கடை வீதிகளை கொண்டிருக்கும். இதனால் வருகையாளர்கள் நாட்டின் செழுமையான சமையல் பாரம்பரியத்தை அனுபவிக்க முடியும். காரமான கறிகளிலிருந்து இனிப்பு உணவுகள் வரை, அறுசுவையும் நாவில் நடனமாடும்.

உற்சாகமான சூழலை மேலும் ஊக்குவிக்க, இந்த விளையாட்டு விழா இலங்கையின் பிரபலமான கலைஞர்களை கொண்டு இரவு நேர இசைக்கச்சேரிகளை நடத்தும். இந்த கச்சேரிகள் வருகையாளர்களுக்கு நேரடி இசையை அனுபவித்து இரவு முழுவதும் நடனமாட ஒரு வாய்ப்பை வழங்கும். கலையுலக நட்சத்திரங்களின் வரிசையில் பல்வேறு இசை வகைகள் இடம்பெறும், இது பலதரப்பட்ட இசை ரசனைக்கேற்ப இருக்கும். இந்த கச்சேரிகள், இலங்கையரின் அனைவரையும் ஒருங்கிணைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு தனித்துவமான நிகழ்வின் முக்கிய அம்சமாக இருக்கும்.

முக்கிய அனுசரணையாளராக இருக்கும் டயலொக், இந்த போட்டியை Dialog Television மூலம் ThePapare TV (அலைவரிசை 63), ThePapare TV HD (அலைவரிசை 126), Dialog ViU, மற்றும் ThePapare.com ஆகியவற்றில் நேரலை ஒளிபரப்பை வழங்கவுள்ளது. இதன் மூலம் இலங்கையின் எல்லா இல்லங்களுக்கும் மொபைல் சாதனங்களுக்கும் நிகழ்வை நேரலையாக கொண்டு சேர்க்கவுள்ளது. விளையாட்டு பிரியர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப, Dialog Television -உம் ThePapare-யும் இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ ஒளிபரப்புக் கூட்டாளிகளாகவும், டிஜிட்டல் ஊடகக் கூட்டாளிகளாகவும் செயல்படுகின்றன.

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு, இலங்கை விளையாட்டு வரலாற்றின் முக்கிய அத்தியாயத்தை காணத்தயாராகுங்கள். Sri Lanka Sports Fiesta 2024 உங்களை வரவேற்கிறது. இச்சகாப்தத்தை காணத்தவறாதீர்கள்!