பொருள் விரிவாக்கம்

டயலொக் INFOTEL 2025 இல் 5G மூலம் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு சக்தி அளிக்கிறது

18th November 2025         Colombo

 

டயலொக் INFOTEL 2025 இல் 5G மூலம் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு சக்தி அளிக்கிறது

 

இலங்கையின் #1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, INFOTEL 2025 கண்காட்சியில் நாட்டின் மிக மேம்பட்ட மற்றும் அதிவேக 5G Ready வலையமைப்பைக் காட்சிப்படுத்தியது. மற்றும் அடுத்த தலைமுறை இணைப்புத் திறன் ஆகியவற்றின் வழியாக இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான டயலொக்கின் அர்ப்பணிப்பை இது உறுதிப்படுத்துகிறது. இதன் இலக்கு Smart Cities, சிறந்த அனுபவங்கள் மற்றும் அதிக இணைக்கப்பட்ட சமூகத்தை மேம்படுத்துவதே ஆகும்.

Federation of Information Technology Industry Sri Lanka (FITIS) ஆல் ஒழுங்கமைக்கப்பட்ட INFOTEL 2025 ஆனது, நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகப் பழமையான ICT கண்காட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பொது மற்றும் தனியார் துறைத் தீர்மானிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் கல்வி நிறுவனங்களை ஈர்த்த இந்த நிகழ்வு, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான செயலூக்கமிக்க தளமாக விளங்கியது. டயலொக்கின் 5G அனுபவ மண்டலம் ஒரு முக்கிய ஈர்ப்பு மையமாக இருந்தது. இங்கு Smart City, VR Kayaking, AI Portraits, Gaming Zone, 5G Speed Testing மற்றும் Smart Home அனுபவங்கள் போன்ற அதிநவீன செயல்விளக்கங்கள் இடம்பெற்றன. டயலொக்கின் அதிவேக, குறைந்த தாமதம் (low-latency) மற்றும் அதிக அலைவரிசை (high-bandwidth) கொண்ட 5G வலையமைப்பு ஆனது புத்தாக்கம் மற்றும் இணைப்புத் திறன் மூலம் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை ஒவ்வொரு செயல் விளக்கமும் காட்சிப்படுத்தியது

VR Kayaking அனுபவம், Dialog 5G-க்குரிய படகில் பார்வையாளர்களை உண்மையான சாகசத்தில் மூழ்கடித்தது. இது 5G-யின் Ultra-Low Latency (மிகக் குறைந்த தாமதம்) மூலம் பின்னடைவைக் குறைத்து, துலங்கல் தன்மையை மேம்படுத்தி, யதார்த்தமான அசைவு மற்றும் காட்சிகளுடன் மெய்நிகர் சுற்றுலாவை எவ்வாறு மறுவரையறை செய்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியது. Dialog 5G Smart City கண்காட்சியில், ஒரு சிறிய நகர மாதிரியின் மூலம் AR/VR பயன்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. போக்குவரத்து, விவசாயம், பொதுப் பாதுகாப்பு, கட்டுமானம் மற்றும் உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளில் அடுத்த தலைமுறை இணைப்பு எவ்வாறு புத்தாக்கத்தை இயக்குகிறது என்பதை இது தெளிவாக விளக்கியது. இதற்கிடையில், AI Portrait அனுபவம், 5G ஆல் இயங்கும் மேம்பட்ட AI தொழில்நுட்பத்தின் மூலம் பார்வையாளர்களின் புகைப்படங்களை உடனடியாகக் கலைநயமிக்க ஓவியங்களாக மாற்ற உதவியது. படைப்பாற்றல் மற்றும் மொபைல் பயன்பாடுகளுக்கான அதிவேக, Cloud அடிப்படையிலான படச் செயலாக்கத்தை இந்த வலையமைப்பு எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதையும் இது எடுத்துக்காட்டியது.

INFOTEL 2025 இல் பங்கேற்றதன் மூலம், டயலொக் ஒரு தொழில்நுட்பத் தலைவராகவும் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தின் முக்கிய உந்துசக்தியாகவும் தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. 5G தொழில்நுட்பத்தின் நிஜ உலகத் தாக்கத்தை வெளிப்படுத்துவதன் மூலம், டயலொக் தொடர்ந்து புத்தாக்கம், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் புத்திசாலித்தனமான, மேம்பட்ட இணைப்புள்ள தேசத்தை உருவாக்குவதை முன்னெடுத்துச் செல்கிறது. இதன் மூலம், சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தை ஊக்குவித்து, வாழ்க்கையை வளப்படுத்துகிறது.