Body

டயலொக் நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் சேவை மற்றும் தொலைத்தொடர்பு பிராண்டாக அங்கீகரிப்பு

2026 ஜூலை 03         கொழும்பு

 

இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, LMD Brands Annual வெளியீட்டில் சேவை மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளில் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் பிராண்டாக (Most Loved Brand) மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் முதன்மை கார்ப்பரேட் பிராண்டுகளின் வரிசையிலும் இடம்பிடித்துள்ளது. இவ்விரு பிரிவுகளிலும் டயலொக் நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளமையானது, தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கை மக்களின் வாழ்க்கையையும் வணிகங்களையும் மேம்படுத்துவதோடு, வாடிக்கையாளர்கள், சமூகங்கள் மற்றும் தேசத்திற்கு மதிப்புமிக்க சேவைகளை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

Media Services நிறுவனத்திற்காக PepperCube Consultants அமைப்பினால் சுயாதீனமாக நடத்தப்பட்ட LMD Brands Annual ஆய்வின் மூலமே இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் பல்வேறு பிராந்தியங்களையும் சமூகப் பின்னணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நுகர்வோர் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம்; நம்பிக்கை, விசுவாசம் மற்றும் பிராண்ட் மீதான ஈர்ப்பு (Brand affinity) ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாகப் பதிந்த பிராண்டுகள் கண்டறியப்பட்டன.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், "சேவை மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய இரு துறைகளிலும் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் பிராண்டாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது, இலங்கை மக்கள் டயலொக் மீது தொடர்ந்து வைத்துள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த மிகச் சிறந்த சான்றாகும். எங்களது டிஜிட்டல் இணைப்பு, சேவைகள் மற்றும் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் அதேவேளையில், வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் புரிந்து அதற்கேற்பச் சேவையாற்றுவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் காட்டுகிறது. நாம் தொடர்ந்து புத்தாக்கங்களை மேற்கொண்டு வளர்ச்சியடையும் அதேவேளையில், சமூக மேம்பாட்டிற்கும் இலங்கையின் டிஜிட்டல் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஆதரவளிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்." என்றார்.

விரிவுபடுத்தப்பட்ட 5G இணைப்பு, AI மூலம் இயங்கும் டிஜிட்டல் அனுபவங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான பரந்த அணுகல் உள்ளிட்ட இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை ஆதரிக்கும் புத்தாக்கங்கள், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயல்பாடுகள் மற்றும் முதலீடுகளில் டயலொக் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனத்தை இந்த அங்கீகாரம் மேலும் பிரதிபலிக்கிறது.

இணைப்புச் சேவைகளுக்கு அப்பால், டயலொக் நிறுவனம் சமூகங்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், 1 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுக்கு AI தொழில்நுட்பம் சார்ந்த விவசாய ஆலோசனைகளை வழங்கும் Govi Mithuru திட்டம் மற்றும் 450,000 க்கும் மேற்பட்ட வறிய மாணவர்களுக்குக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்க வழிவகுத்த 'சிஷ்யாதாரா' (Shishyadhara) போன்ற திட்டங்களைக் குறிப்பிடலாம். மேலும், ஆற்றல் மேம்படுத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் வலையமைப்பு உள்கட்டமைப்புகளை (Solar-powered network infrastructure) விரிவுபடுத்துவதன் மூலம் 'நெற் சீரோ 2050' (Net Zero 2050) இலக்கை நோக்கியும் நிறுவனம் தொடர்ந்து பயணித்து வருகின்றது.

இலங்கை நுகர்வோர் மத்தியில் இந்த பிராண்ட் கொண்டுள்ள உயர் நிலையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், SLIM-KANTAR People’s Awards 2026 விருது விழாவில் டயலொக் நிறுவனம் ஐந்தாவது முறையாக 'ஆண்டின் சிறந்த சேவை பிராண்ட்' (Service Brand of the Year) விருதையும், தொடர்ந்து 15ஆவது ஆண்டாக 'ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு பிராண்ட்' (Telecommunication Brand of the Year) விருதையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.