பொருள் விரிவாக்கம்

Dialog Pay விற்பனையாளர் வலையமைப்பில் இணைகிறது Dinemore

2026 அக்டோபர் 02         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: முதித பிரேமரத்ன, துணைத் தலைவர் - டிஜிட்டல் தளங்கள் மற்றும் கூட்டாண்மைகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ஷஹீம் சாதிகீன், பணிப்பாளர், Dinemore.

இலங்கையின் முதன்மைத் தொடர்பாடல் சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Dinemore உணவகப் பிணையத்துடன் மேற்கொண்டுள்ள புதிய பங்களிப்பின் ஊடாகத் தனது Dialog Pay விற்பனையாளர் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி, Dinemore நிறுவனத்தின் 12 உணவகக் கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான LankaQR கொடுப்பனவுகளை மேற்கொள்வதோடு, தகுதியான LankaQR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவையும் பெற முடியும்.

பரபரப்பான வேலைநாட்களில் உட்கொள்ளும் விரைவு உணவுகள் முதல் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து உண்ணும் உணவுகள் வரை, Dinemore உணவகங்களில் வாடிக்கையாளர்கள் Dialog Pay மூலம் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் பணத்தைச் செலுத்தலாம். மேலதிக டிஜிட்டல் கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், இக்கூட்டுண்மையானது வாடிக்கையாளர்களின் அன்றாட உணவு அனுபவத்திற்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கி, சுவையான உணவுகளை மலிவான விலையில் வழங்கும் Dinemore இன் நீண்டகால இலக்கிற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது.

இது குறித்து Dinemore நிறுவனத்தின் பணிப்பாளர் ஷாஹீம் சாதிக்கீன் தெரிவிக்கையில், “பல வருடங்களாக இலங்கை மக்களின் அன்றாட உணவு அனுபவத்தில் Dinemore ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருகிறது. எமது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப எம்மையும் தகவமைத்துக் கொள்வதே எமது வெற்றிக்கான வழியாகும். அந்தப் பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே Dialog Pay உடனான இந்த இணைப்பும் அமைந்திருக்கின்றது. இது எமது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வசதியையும் மேலதிக நன்மைகளையும் வழங்குகின்றது. எமது வாடிக்கையாளர்கள் விரும்பும் சேவை அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் இத்தகைய தீர்வுகளை Dialog உடன் இணைந்து வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்,” எனக் குறிப்பிட்டார்.

Dialog Pay App மற்றும் MyDialog App ஆகியவற்றின் ஊடாகப் பயன்படுத்தக்கூடிய Dialog Pay, தொடர்பாடல் சேவைகள், டிஜிட்டல் செலுப்பனவுகள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே வலையமைப்பில் ஒருங்கிணைக்கின்றது. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் செலுப்பனவுகளை மிகவும் எளிமையானதாகவும், அணுகக்கூடியதாகவும், அதிக நன்மைகளைத் தருவதாகவும் மாற்றுவதற்கான Dialog இன் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கின்றது. வாடிக்கையாளர்கள் தங்களது eZ Cash கணக்கு அல்லது விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay சேவையை எளிதாகச் செயல்படுத்தி, பாதுகாப்பான LankaQR கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், பணப் பரிமாற்றம் செய்யவும், டிஜிட்டல் பணப்பையைப் பயன்படுத்தவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளை உருவாக்கவும், Dialog Finance மூலமாகவழங்கப்படும் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். நாடு முழுவதும் 100,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதியான QR கொடுப்பனவுகளுக்கு இலவச Dialog டேட்டாவை வழங்கி, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட ரொக்கப் பயன்பாட்டுக் குறைவான பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்திற்குப் பங்களிக்கின்றது. மேலதிக தகவல்களுக்கு https://dialog.lk/dialog-pay என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.