Dialog Pay வணிகர் அமைப்பில் இணைகிறது DSI
2026 செப்டம்பர் 09 கொழும்பு
இடமிருந்து வலமாக: சச்சினி டி சில்வா, வர்த்தக அதிகாரி, Dialog Finance PLC; பிரதீப் சமரதுங்க, பொது முகாமையாளர், D Samson & Sons Pvt Ltd.
இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி காலணி மற்றும் வாழ்க்கை முறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான DSI உடனான புதிய கூட்டாண்மையின் ஊடாக Dialog Pay சேவையின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது. வாடிக்கையாளர்கள் இப்போது 260 க்கும் மேற்பட்ட DSI விற்பனை நிலையங்களில் Dialog Pay மூலம் பாதுகாப்பான LankaQR கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். இது அவர்களின் கொள்முதல் அனுபவத்திற்கு கூடுதல் வசதியை அளிப்பதுடன், தகுதியுடைய LankaQR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவையும் (data) வழங்குகிறது.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான DSI இன் பரந்த அளவிலான காலணிகள் மற்றும் ஆபரணங்கள் (accessories) அடங்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகளின் தயாரிப்புகளைக் கொள்முதல் செய்ய வாடிக்கையாளர்கள் Dialog Pay ஐப் பயன்படுத்தலாம். மேலும் Puma, U.S. Polo Assn., Von Wellx, Modare மற்றும் Vizzano உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளுக்கான இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனைப் பங்காளராக (authorised retail partner) DSI திகழ்கிறது.
இக்கூட்டாண்மை குறித்து D Samson & Sons Pvt Ltd நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு. பிரதீப் சமரதுங்க கருத்து தெரிவிக்கையில், "தலைமுறை தலைமுறையாக DSI நிறுவனம் இலங்கை நுகர்வோரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தன்னை மேம்படுத்தி வளர்ந்து வருகிறது. Dialog Pay உடனான எங்களது இக்கூட்டாண்மை, வாடிக்கையாளர்களின் சில்லறை விற்பனை அனுபவத்திற்கு டிஜிட்டல் வசதியைச் சேர்ப்பதுடன் செலுப்பனவுகளை மேற்கொள்ள மற்றொரு பயனுள்ள வழியையும் வழங்குகிறது. டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதிலும், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதிலும் டயலொக்குடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறினார்.
Dialog Pay App மற்றும் MyDialog App மூலமாகப் பெறக்கூடிய Dialog Pay, இணைப்புச் சேவை, டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay ஐ எளிதாகச் செயல்படுத்தலாம். இதன் மூலம் பாதுகாப்பான LankaQR கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், பணப் பரிமாற்றம் செய்யவும், டிஜிட்டல் வாலட்டைப் பயன்படுத்தவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளை (fixed deposits) திறக்கவும், Dialog Finance வழங்கும் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். நாடு முழுவதும் 100,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதியுடைய QR கொடுப்பனவுகளுக்கு இலவச Dialog டேட்டாவை வழங்குகிறது. மேலதிக தகவல்களுக்கு https://dialog.lk/dialog-pay என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.