பொருள் விரிவாக்கம்

eZ Cash இலங்கையின் முதலாவது மைக்ரோஃபைனான்ஸ் கடன்களுக்கு இயக்கப்பட்ட QR கட்டண முறையை அறிமுகப்படுத்துகிறது

08 செப்டெம்பர் 2020         கொழும்பு

 

news-1

இடமிருந்து வலம் - விஷன்ஃபண்ட் லங்கா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மலிந்த சில்வா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மொபைல் பணம் - டிஜிட்டல் சேவைகள் பிரிவு நிபுணர் அருணசிறி குணரத்னே டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மொபைல் பணம் - டிஜிட்டல் சேவைகள் பிரிவு சிரேஷ்ட முகாமையாளர் பத்மநாத் முத்துகுமாரன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழு தலைமை டிஜிட்டல் சேவை அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ, விஷன்ஃபண்ட் லங்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் கனகரட்னம், விஷன்ஃபண்ட் லங்கா நிறுவனத்தின் IT திட்ட முகாமையாளர் ஷாலிங்கா பெர்னாண்டோ, விஷன்ஃபண்ட் லங்கா நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ரிசாந்த் பிரான்சிஸ், விஷன்ஃபண்ட் லங்கா நிறுவனத்தின் மனித வள முகாமையாளர் செவ்வந்தி அபேசிங்க, விஷன்ஃபண்ட் லங்கா நிறுவனத்தின் இடர் மற்றும் இணக்க முகாமையாளர் பிரீவீன் ஜோசப், விஷன்ஃபண்ட் லங்கா நிறுவனத்தின் உள்ளக தணிக்கை முகாமையாளர் லக் ஷான் பெர்னாண்டோ

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின், முதலாவது மற்றும் மிகப்பெரிய மொபைல் பணம் மற்றும் கட்டண சேவையான eZ Cash> வாடிக்கையாளர்கள் நுண் நிதிக் கடன்களை (microfinance loans) நிலையான QR அட்டை மூலம் மிகவும் வசதியாக மீள் செலுத்துவதற்காக, முன்னணி சமூக பொறுப்புள்ள நுண் நிதி நிறுவனமான VisionFund லங்கா, World Vision உடனும் சர்வதேச VisionFund உடனும் கூட்டிணைந்துள்ளது.

இது VisionFund லங்காவின் வாடிக்கையாளர்களை தக்கவைக்க டிஜிட்டல் முறையினை உள்ளடக்கிய தீர்வாகும். இந்த மூலோபாய கூட்டு முயற்சியானது, QR அட்டை கடனினை மீள் செலுத்தும் வசதியைத் தொடங்குவதன் மூலம் நுண்நிதி கடன் திருப்பிச் செலுத்தும் முறையை புரட்சிகரமாக்கியுள்ளது. இந்த பொறிமுறையானது அனைத்து VisionFund லங்கா வாடிக்கையாளர்களும் தங்களது கடன் விபரங்களை விரைவாகவும் வசதியாகவும் அணுகுவதற்காக அந்தந்த QR அட்டைகளை அருகிலுள்ள eZ Cash விற்பனை நிலையத்தில் QR அட்டையினை ஸ்கேன் செய்வதன் மூலம் கடனினை மீள் செலுத்தவதற்கான அதிகாரம் வழங்குகின்றது. இது கிராமப்புறங்களில் வாழும் தனிநபர்களுக்கு நிதி அணுகலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நிதி பரிமாற்றங்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும், முன்னெடுப்பதில் முக்கிய படிக்கல்லாக அமைந்துள்ளது. தற்போது, அருகிலுள்ள VisionFund லங்கா கிளைகளில் வாடிக்கையாளர்கள் இந்த அட்டையினை பெற்றுக்கொள்ள முடியும். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, VisionFund லங்கா நாடளாவிய ரீதியில் உள்ள கிராமப்புறங்களில் 30,000 குடும்பங்களுக்கு சேவையினை வழங்கி வருவதுடன், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு அவசியமான நிதி உதவியினையும் மேம்படுத்துகிறது.

VisionFund லங்காவின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் ஒரு முற்போக்கான சமயத்தில், VisionFund லங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி தினே~; கனகரட்ணம் கருத்து தெரிவிக்கையில், “இந்த பரிமாற்றத்தின் நேரம் மிக குறைவாகும், ஏனெனில் விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிதான நிதி பரிமாற்றங்களை நடத்துவதற்கான தேவை இன்றியமையாதது. இப்போது முன்பை விட கிராமப்புற அமைப்புகளில் வாழும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய இந்த பயணத்தில் நீடித்த சேவையை வழங்குவதற்காக டயலொக் உடன் கூட்டிணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு எளிதில் அணுகக்கூடிய நிதி வசதிகளை வழங்குவதற்கான புதுமையான தீர்வுகளை தொடர்ந்து வழங்கவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழு தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், “எங்கள் பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கொடுப்பனவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு நிலையான, புதுமையான தீர்வுகளை வழங்குவதில் பல ஆண்டுகளாக eZ Cash முன்னிலை வகிக்கின்றது. QR அட்டையினை உள்ளடக்கிய மைக்ரோ-நிதி கடன் மீள் செலுத்தும் தீர்வு ஒரு வசதியான, தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத செயல்முறையை செயல்படுத்துவதற்கான எங்கள் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்” என தெரிவித்தார்.