பொருள் விரிவாக்கம்

தேசிய எரிபொருள் அட்டை(National Fuel Pass)க்காக பெருமதிப்புமிக்க விருதை GSMA M360 APAC 2023 இல் வென்றது டயலொக்

இது மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் கீழ் டயலொக்கினால், MillenniumIT மற்றும் ICTA ஆகிய கூட்டாளர்களுடன் இணைந்து கட்டியெழுப்பட்டது

செப்டெம்பர் 15, 2023         (கொழும்பு)

 

Dialog MAS Enabler Programme

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள் GSMA M360 APAC 2023 இன் ‘Excellence in Digital Inclusion Video Award’ விருதை பெறுகிறார்.

மொபைல் தொழில்நுட்பத்தை பிரயோகித்து நாட்டை டிஜிட்டல் தளத்தில் மேம்படுத்தும் வகையில் திறம்பட செயற்படுத்தப்பட்ட ‘தேசிய எரிபொருள் அட்டை’ (National Fuel Pass) முன்னெடுப்பிற்காக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இற்கு GSMA M360 APAC 2023 விருதுகளில் ‘Excellence in Digital Inclusion Video Award’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இம்முன்னெடுப்பு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் கீழ் MillenniumIT ESP மற்றும் ICTA ஆகிய கூட்டாளர்களுடன் இணைந்து டயலொக்கினால் கட்டியெழுப்பப்பட்டது.

மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த எரிபொருளை வினைத்திறன்மிக்க முறையில் மேலாண்மை செய்து விநியோகிப்பதற்காக 2022 ஆகஸ்ட்டில் தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புத்தாக்கமான அமைப்பு நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு மிகவும் தேவையான ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், தகவலறிந்த கொள்கை முடிவுகளை எளிதாக்கும் தரவு மற்றும் சந்தை பகுப்பாய்வுக்கான மதிப்புமிக்க தளமாகவும் செயற்பட்டது. தேசிய எரிபொருள் அட்டை குறித்த டயலொக்கின் சமர்ப்பிப்பு, ஒரு தேசத்தின் டிஜிட்டல் மாற்றத்தின் முன்னேற்றத்தில் டிஜிட்டல் சேர்க்கைக்கான மொபைல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பிற்காக ‘Excellence in Digital Inclusion Video விருதை’ வென்றது.

"இந்த ஆண்டு நாங்கள் பல அழுத்தமான கதைகளைப் பெற்றுள்ளோம். அவற்றில் 15 வீடியோக்களை பட்டியலிட்டுள்ளோம். டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு “Excellence in Digital Inclusion Video Award” வழங்கப்பட்டது, இது டிஜிட்டலை உள்வாங்குதலை ஊக்குவிப்பதிலும், ஒரு நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதிலும் மொபைல் தொழில்நுட்பங்களின் பங்களிப்பின் அழுத்தமான விவரிப்பு மற்றும் அபரிமிதமான சித்தரிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது" என்று APAC, GSMA இன் தலைவர் ஜூலியன் கோர்மன் கூறினார்.

இந்த முன்னெடுப்பை பற்றி உரையாற்றிய மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கௌரவ. காஞ்சன விஜேசேகர அவர்கள், “தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) முயற்சியானது, நமது நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளை ஸ்திரப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்ட ஒரு அற்புதமான முயற்சியாகும். இந்த புதுமையான அமைப்பானது புதுமை மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பின் சக்திக்கு ஒரு சான்றாக மிளிர்கிறது. GSMA M360 APAC 2023 இல் ‘Excellence in Digital Inclusion Video விருது' மூலம் அங்கீகரிக்கப்பட்டதைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், " GSMA M360 APAC 2023 இல் 'Excellence in Digital Inclusion Video விருதை' பெறுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். தேசிய முன்னேற்றத்திற்காக மொபைல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு தேசிய எரிபொருள் அட்டையால் (National Fuel Pass) எடுத்துக்காட்டப்படுகிறது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், எங்கள் கூட்டாளர்களான MillenniumIT ESP மற்றும் ICTA ஆகியவற்றுடன் இணைந்து அட்டை (Pass) முயற்சியை உருவாக்கி செயற்படுத்தினோம். டிஜிட்டலை உள்வாங்கி செயற்படும் நாடாக இலங்கையை வளர்ப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதில் எமது அர்ப்பணிப்பை இந்த சாதனை பிரதிபலிக்கிறது."

MillenniumIT ESP இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷெவன் குணதிலக்க கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய எரிபொருள் அட்டையை நாடு தழுவிய ரீதியில் அறிமுகப்படுத்துவது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தது, ஆனால் தேசிய நெருக்கடியின் போது எமது ஒத்துழைப்பும் ஆதரவும் ஒரு பெரிய சாதனையாகும். GSMA M360 APAC 2023 இல் தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) மதிப்புமிக்க 'Excellence in Digital Inclusion Video விருதை' வென்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டயலொக் ஆசிஆட்டா மற்றும் ICTAவுடன் கூட்டு சேர்ந்து, இலங்கை சமூகத்தின் வாழ்க்கையை கணிசமான அளவில் மேம்படுத்தி, நேர்மறையான மாற்றத்தின் முன்னணிக்கு தொழில்நுட்பத்தை கொண்டுவரும் வகையில் ஒரு தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவுவதற்கு இது வழிவகுத்தது” என்று அவர் கூறினார்.

தென் கொரியாவில் நடைபெற்ற M360 APAC Digital Nations விருதுகள் 2023, உலகளாவிய ரீதியில் மொபைல் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள நிறுவனங்கள் எவ்வாறு முக்கியமான தகவல்களுக்கான அணுகலை வழங்குதல், டிஜிட்டல் சேர்க்கையை ஊக்குவித்தல், இணைக்கப்படாதவர்களை இணைப்பது மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் தங்கள் முக்கிய பாத்திரங்களை ஆற்றுகின்றன என்பதை வெளிக்காட்டுகின்றது.