Body

Dialog Pay வர்த்தக அமைப்பில் NOLIMIT இணைகிறது

14th August 2026         Colombo

 

இடமிருந்து வலமாக: சச்சினி டி சில்வா, வணிக அதிகாரி (Business Officer), Dialog Finance PLC; ஷாம் மொஹிதீன், சந்தைப்படுத்தல் முகாமையாளர் (Marketing Manager), NOLIMIT.

இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, NOLIMIT நிறுவனத்துடனான தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன்பாற்பட்டு, வாடிக்கையாளர்கள் தீவு முழுவதுமுள்ள அனைத்து NOLIMIT விற்பனை நிலையங்களிலும் Dialog Pay ஊடாகப் பாதுகாப்பான LankaQR செலுத்துகைகளை மேற்கொள்ள முடியும். 30 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ள இலங்கையின் முன்னணி ஆடை சில்லறை வர்த்தகப் பிராண்டுகளில் ஒன்றான NOLIMIT உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கூட்டாண்மையானது, டிஜிட்டல் கட்டண வசதியை மேலும் விரிவாக்குகிறது. அத்துடன், தகுதியான LankaQR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவையும் வழங்கி வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துகிறது.

வாடிக்கையாளர்கள் இப்போது நாடு முழுவதுமுள்ள NOLIMIT அங்காடிகளில் ஆடை வகைகள், காலணிகள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள், பயணப் பைகள் மற்றும் வாழ்வியல் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்ய Dialog Pay ஐப் பயன்படுத்த முடியும். இக்கூட்டாண்மையானது, வாடிக்கையாளர்கள் தங்களது ஆடை மற்றும் வாழ்வியல் தேவைகளுக்காகக் கொள்முதல் செய்யும்போது, கூடுதல் நெகிழ்வுத்தன்மையுடன் பாதுகாப்பாகவும் வசதியாகவும் கட்டணங்களைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இக்கூட்டாண்மை குறித்து NOLIMIT இன் சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு. ஷாம் மொஹிதீன் கருத்துத் தெரிவிக்கையில்: "இன்றைய வாடிக்கையாளர்கள் தங்களது கொள்முதல் அனுபவம் தொடக்கம் முதல் முடிவு வரை எளிமையானதாகவும், வசதியானதாகவும், தடையற்றதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எங்கள் சில்லறை விற்பனை வலையமைப்பு முழுவதும் நம்பகமான டிஜிட்டல் கட்டண விருப்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், அந்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கான மற்றுமொரு அடியையே Dialog Pay உடனான எங்களது இக்கூட்டாண்மை எடுத்துவைத்துள்ளது. ஒன்றாக இணைந்து, ஆடை மற்றும் வாழ்வியல் கொள்முதல்களை மேலும் வசதியானதாக மாற்றுவதுடன், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் தொடர்ச்சியான பயணத்திற்கும் ஆதரவளிக்கிறோம்," எனக் குறிப்பிட்டார்.

Dialog Pay ஆப் மற்றும் MyDialog ஆப் ஆகியவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் Dialog Pay, தொடர்புச் சேவை, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே சேவை அமைப்பின்கீழ் கொண்டுவருகிறது. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் கட்டணங்களை எளிமையானதாகவும், இலகுவாக அணுகக்கூடியதாகவும், அதிக நன்மைகளைத் தருவதாகவும் மாற்றும் Dialog இன் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay ஐ எளிதாகச் செயல்படுத்த முடியும். இதன் மூலம் பாதுகாப்பான LankaQR கட்டணங்களைச் செலுத்தவும், பணப் பரிமாற்றம் செய்யவும், Digital wallet ஐ அணுகவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளைத் திறக்கவும், Dialog Finance மூலம் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

நாடு முழுவதும் 100,000 க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதியான QR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவை வழங்கிப் பயனர்களை ஊக்கப்படுத்துகிறது. இது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், ரொக்கப் பயன்பாடு குறைந்த, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கும் ஆதரவளிக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு https://dialog.lk/dialog-pay என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.