Dialog தனது 4G Broadband ஐ விஸ்தரிப்பதற்காக 3G வலையமைப்பை நிறுத்தவுள்ளது
இலங்கையின் தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான Dialog Axiata PLC, 2023 நவம்பர் 15 ம் திகதி முதல் தனது 3G வலையமைப்பை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இவ்வாண்டின் தொடக்கத்தில் கூறியதை போன்று இந்த முடிவானது வாடிக்கையாளர்களுக்கு அதிசிறந்த மொபைல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு Dialog Axiata மேற்கொள்ளும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளின் ஒரு அங்கமாகும் அதே வேளை, அபரிமிதமான, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிறுவனம் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளின் அங்கமுமாகும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
4G Mobile Broadband வலையமைப்பிற்கு அதிக அலைக்கற்றை கொள்ளளவை அளித்து விஸ்தரிப்பதன் ஊடாக Dialog 4G mobile Broadband/ Data வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்குமுகமாகவே, Dialog அதன் 3G வலையமைப்பை நவம்பர் 15, 2023 அன்று நிறுத்த முடிவு செய்தது.
நீங்கள் 3G SIMஅல்லது 3G சாதனத்தை Data விற்கு பயன்படுத்தினால், 3G வலையமைப்பு 2023 நவம்பர் 15 முதல் நிறுத்தபட்டுள்ளதன் மூலம், பாதிப்பான அனுபவத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் தற்போதைய 3G சாதனத்தில் தொடர்ந்து அழைப்புகள் மற்றும் SMS களைப் பயன்படுத்தலாம்.
உங்கள் சாதனமும் Dialog SIMமும் 4G சேவைக்கு இயைபானவையா என்பதை தெரிந்து கொள்ள ‘4GREADY’ என type செய்து உங்கள் Dialog மொபைலிலிருந்து 678 இற்கு SMS செய்யுங்கள்.
உங்களுக்கு அருகிலுள்ள விற்பனை நிலையம் அல்லது Dialog Experience Centre இற்கு சென்று இலகுவாக 3G SIM ஐ 4G SIM ஆக மேம்படுத்திக்கொள்ள முடியும். உங்கள் SIM ஐ 3G இலிருந்து 4G ஆக மாற்றுவதற்கு எந்த கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
உங்களிடம் eSIM இற்கு இயைபான smartphone இருந்தால் Dialog.lk/eSIM இனூடாக இலவசமாக 4G eSIM இற்கு மேம்படுத்திக்கொள்ள முடியும்.
Dialog பெறுமதிகேற்ற மதிப்புமிக்க பலதரப்பட்ட 4G smartphoneகளை வழங்குகிறது. நீங்கள் விரும்பிய 4G இயைபான smartphoneகளை dialog.lk தளத்தில் தெரிவு செய்வதன் மூலம் அல்லது அருகிலுள்ள Dialog experience Centre இற்கு வருகை தருவதன் மூலம் புத்தம்புதிய 4G smartphone ஐ கொள்வனவு செய்ய முடியும். மேலும் Dialog Lesi Pay ஊடாக நீங்கள் மாதாந்த தவணை செலுத்தும் வசதியையும் பெற்று கொள்ள முடியும்.
மேம்படுதலை தொடர்ந்து உங்கள் இலக்கம் மாறாது அப்படியே இருக்கும். மேலும், நீங்கள் ஏற்கனவே செயற்படுத்திய planகளுக்கும் அனுகூலங்களுக்கும் எவ்விதமான மாற்றமும் நேராது.
தயவு செய்து உங்கள் சாதனம் 4G வலையமைப்புடன் இணைந்துள்ளது என்பதை உறுதி செய்யவும். இதற்கு:
Android
உங்கள் Android மொபைலில் Settings இற்கு சென்று > Connections > Mobile Networks > Network Mode > 4G / LTE ஐ தெரிவு செய்யவும்
iPhone
iPhone> Mobile Data > Mobile Data Options > Voice & Data > 4G / LTE & VoLTE ஐ தெரிவு செய்யவும்