முன் செலுத்துகை நியதிகளும் நிபந்தனைகளும்

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகள் இங்கு கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மூலம் கட்டுப்படுத்தப்படும். இந்த விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து, சிம் கார்ட்டை செயல்நிலைப்படுத்துவதன் மூலம் இயைபுள்ள வாடிக்கையாளர்கள் இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்து, புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதாக கருதப்படும்.

 1. பொருள்கோடல்

  “கணக்கு நிலுவை" எனும் போது டயலொக் கணக்கிலுள்ள தொகை எனப் பொருள்படும்.

  “அழைப்புக் கட்டணம்" எனும் போது பயன்படுத்தும் நேர வரையறையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் டயலொக் சேவைகளை பயன்படுத்துவதற்குரியதாக வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய கட்டணம் எனப் பொருள்படும்.

  “டயலொக் வலையமைப்பு" எனும் போது பொது நடமாடும் தொலைத்தொடர்பு வலையமைப்பு எனப் பொருள்படும்.

  “டயலொக் சேவை" எனும் போது டயலொக் நிறுவனத்தினால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தொலைத்தொடர்புச் சேவை எனப் பொருள்படும்.

  “MSISDN இலக்கம்" எனும் போது ஒன்றிணைக்கப்பட்ட செல்லிட வாடிக்கையாளர் சேவை இலக்கமுறை வலையமைப்பு (செல்லிடத் தொலைபேசி இலக்கம்) எனப் பொருள்படும்.

  “Recharge அட்டை / Reload" எனும் போது முன்செலுத்துகை கார்ட் ஒன்றைக் கொள்வனவு செய்வதன் மூலம் அல்லது டயலொக் நிறுவனத்தினால் காலத்துக்குக் காலம் வழங்கப்படும் வேறு விதத்தில் வாடிக்கையாளரினால் கணக்கு நிலுவையை அதிகரித்துக் கொள்தல் எனப் பொருள்படும்.

  “சிம் கார்ட்" எனும் டயலொக் வலையமைப்பில் நுழைவதற்காக டயலொக் நிறுவனத்தினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் வாடிக்கையாளர் அடையாளக் கூறு எனப் பொருள்படும்.

  “வாடிக்கையாளர்" எனும் போது டயலொக் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எவரேனும் ஓர் ஆள் அல்லது கம்பனியொன்று எனப் பொருள்படும்.

 2. டயலொக் சேவை

  2.1 இது தொடர்பில் எவ்வித காரணம் காட்டாமல் அல்லது எவ்வித பொறுப்புமின்றி அத்தகைய ஏதேனும் காரணமொன்றின் மீது கோரிக்கையொன்றை நிராகரிக்கும்;

  2.2 டயலொக் சேவைகள் சார்பில் ஏதேனும் திருத்தமொன்றைச் செய்வதற்கும் இதனால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் ஏதேனும் நட்டம் அல்லது பாதிப்பு சம்பந்தமாக டயலொக் நிறுவனம் பொறுப்பு சொல்லாமல் இருக்கும்;

  2.3 டயலொக் சேவைகளுக்கு ஏற்புடையதாகும் நியதிகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றும், சேர்க்கும் அல்லது திருத்தும்;

  2.4 எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாடிக்கையாளருக்கு ஒன்றிணைந்த சேவையொன்றை வழங்கும் பொருட்டு அதன் நிர்வாகத்துக்குட்பட்ட ஏதேனும் துணைக் கம்பனிகளுக்கு மற்றும் / அல்லது ஏதேனும் நிர்வாகப் பலமுடைக் கம்பனிகளுடன் மற்றும் / அல்லது ஏதேனும் குற்றப்புலனாய்வுப் பணிகளுக்கு அல்லது குற்றவியல் வழக்கு விசாரணை சம்பந்தமாக ஏதேனும் அரசாங்க அதிகாரபீடமொன்றுக்கு தனது தரவுத் தளத்தை / வாடிக்கையாளர் பற்றிய திட்டவட்டமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும்;

  2.5 எவ்வித அறிவிப்புமின்றி டயலொக் வலையமைப்புடனான வாடிக்கையாளரின் இணைப்பை எச்சந்தர்ப்பத்திலும் துண்டிக்கும் அல்லது இடைநிறுத்தும்; அத்துடன்

  2.6 வாடிக்கையாளரின் டயலொக் கணக்கு துண்டிக்கப்பட்டால் / மூன்று மாத காலப்பகுதிக்குள் செயல்நிலைப்படுத்தப்படாவிட்டால் MSISDN இலக்கத்தை மீளப் பாவிக்கும் / மீள ஒதுக்கும்;

  2.7 சந்தாதாரரின் ஒத்துழைப்பும் அறிவிப்பும் இன்றி உ ரிமை மாற்றத்தினை மேற்கொள்ள முடியும். டயலொக் மற்றும் மூன்றாம் தரப்பினருடைய விரிவாக்கல் செயற்றிட்ட சலுகைகள் சார்ந்த விபரங்கள் நேரத்துக்கு நேரம் அனுப்பி வைக்கப்படும்

  வாடிக்கையாளர் மற்றும் / அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பு நபரினால் ஏற்படும் எந்தவொரு பாதிப்பு, இழப்பு அல்லது தனி நபர் அல்லது சொத்து தொடர்பாய் அவதிப்படும் பாதிப்பு அல்லது இழப்பு நேரடியானதாகவோ, மறைமுகமானதாகவோ, விசேடமானதாகவோ இடைநேர் விளைவான வர்த்தக வருமானமாகவோ வர்த்தக வருமானம் அல்லது இலாப இழப்பாகவோ அல்லது எந்தவொரு வாடிக்கையாளர் அல்லது வாடிக்கைகயாளரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட எந்தவொரு நபரும் அவதிப்படும் எந்தவொரு தன்மையும் டயலொக்கினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது.

 3. வாடிக்கையாளரின் பொறுப்பு

  வாடிக்கையாளர் :

  3.1 டயலொக் சேவையை பயன்படுத்துவதற்குரியதான சகல சட்டங்களுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் அமைவாக செயலாற்றுதல் வேண்டும்;

  3.2 ஏதேனும் பயங்கரவாத, முறைகேடான, நெறியற்ற, அதிகாரம் பெறாத. சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அத்துடன் / அல்லது ஏதேனும் முறையற்ற, சட்ட விரோத அல்லது வசைமொழி நடவடிக்கைகளுக்கு அல்லது ஆபாசமான, அச்சுறுத்தலான அல்லது கோரப்படாத செய்திகளை அனுப்புவதற்காக பயன்படுத்தாதிருத்தல் வேண்டும்;

  3.3 டயலொக் சேவைகளை வழங்குவதற்காக டயலொக் நிறுவனத்துக்குக் காலத்திற்குக் காலம் தேவைப்படும் சகல தகவல்களையும் வழங்குதல் வேண்டும்;

  3.4 ஏதேனும் மோசடியான நடவடிக்கையொன்று, களவு, இழப்பு, அதிகாரம் பெறாத பாவனை அல்லது செல்லிட தொலைபேசி நிலையத்துக்கும் அதன் பாவனைக்கும் உரியதான அத்தகைய ஏதேனும் சட்ட விரோதமான நடவடிக்கையொன்று நிகழ்ந்துள்ளதென அறிந்தவுடன் அது பற்றி டயலொக் நிறுவனத்துக்கு அறிவித்தல் வேண்டும்;

  3.5 முத்திரைத் தீர்வை, சேவைகள் வரி, கட்டணங்கள், டயலொக் சேவைகளை பயன்படுத்தும் பொருட்டு சட்டமுறையாக காலத்துக்குக் காலம் விதிக்கப்படும் வேறு ஏதேனும் செலவுகள் அல்லது கட்டணங்கள் செலுத்துதல் வேண்டும்;

  3.6 டயலொக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள தகவலொன்றுக்குரியதாக ஏற்படும் மாற்றங்கள் பற்றி டயலொக் நிறுவனத்துக்கு எழுத்துமூலம் அறிவித்தல் வேண்டும்; அத்துடன்

  3.7 ஏதேனும் உரிமைக் கோரிக்கைகள், கோரிக்கைகள், வழக்கு அல்லது சார்த்துரை ஆகியவற்றுக்கு எதிராக டயலொக் நிறுவனம் அத்துடன் அதன் உத்தியோகத்தர்கள் / பிரதிநிதிகள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, நட்டோத்தரவாதமளிப்பதற்கும் டயலொக் நிறுவனத்துக்கு ஏற்க வேண்டி நேரிடுகின்ற / விதித்துரைக்கப்படுகின்ற ஏதேனும் சகல செலவுகள் மற்றும் நட்ட ஈடுகளை செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

  3.8 முற்கொடுப்பனவு இணைப்பின் செல்லுபடியாகும் காலம் அதன் ரீசார்ஜ் பெறுமதியினை பொறுத்து தீர்மாணிக்கப்படும். சந்தாதாரர் மீண்டும் ரீசார்ஜ் செய்தால் அதற்கேற்ப செல்லுபடியாகும் காலம் மாறுபடும். அதிகபட்சமாக சந்தாதாரர் இணைப்பினை பெற்றுக்கொண்டதிலிருந்து அதிகபட்டம் 365 நாட்களுக்கு இணைப்பு செல்லுபடியாகும்

  3.9 முற்கொடுப்பனவு இணைப்பானது செல்லுபடியற்று போகும் காலத்தில் சந்தாதாரர் இணைப்பினை ரீசார்ஜ் செய்ய வில்லையாயின் டயலொக் நிறுவனத்தினால் ரீசார்ஜ் செய்வதற்காக குறிப்பிடப்பட்ட தவணை காலப்பகுதியானது வழங்கப்படும். அந்த காலப்பகுதியில் கட்டாயமாக இணைப்பினை ரீசார்ஜ் செய்தல் வேண்டும். இணைப்பு 3 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்து செயற்படுத்தப்படவில்லையாயின் டயலொக் இணைப்பினை துண்டித்து அவ் இலக்கத்தை மீள் சுழற்சி செய்யும்.

 4. சிம் கார்ட்

  சிம் கார்ட் கொள்வனவு செய்யப்பட்டவிடத்து அது வாடிக்கையாளருக்கு உரியதாகும். சிம் கார்ட்டை பாதுகாப்பாக வைத்திருப்பது வாடிக்கையாளரின் பொறுப்பாகுமென்பதோடு, டயலொக் நிறுவனத்துக்கு முன் அறிவித்தலின்றி அத்துடன் உரிய ஆவணங்களில் எழுதிக் கைச்சாத்திடாது சிம் கார்ட்டை மூன்றாம் தரப்பொன்றுக்கு கையளித்தலாகாது. அவ்வாறு செய்வதற்கு தவறுமிடத்து இறுதியாக பதிவுசெய்யப்பட்டுள்ள வாடிக்கையாளர் சிம் கார்ட் பயன்படுவது சம்பந்தமாக பொறுப்பு சொல்வதற்கு ஆட்படுத்தப்படுவார்.

 5. கட்டண முறை

  5.1 Recharge / Reload கார்ட்டுகளை கொள்வனவு செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியன்றுக்கு முன்னர் இந்த கார்ட்டுகளை செயல்நிலைப்படுத்துவதன் மூலம் டயலொக் சேவைகளுக்கான செலுத்துகைகள் செய்யப்படல் வேண்டும்;

  5.2 கட்டண அளவுகள் அல்லது கட்டணங்கள் டயலொக் நிறுவனத்தினால் காலத்துக்குக் காலம் திருத்தப்படலாம் எந்த நேரத்திலும் டயலொக் நிறுவனத்துடன் அழைப்பினை ஏற்படுத்தி நடைமுறையிலுள்ள கட்டண அளவுகள் பற்றி வாடிக்கையாளரான தங்களுக்குத் தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம்; அத்துடன்

  5.3 வாடிக்கையாளருக்கு கணக்கில் போதுமான நிலுவை இல்லாமல் டயலொக் சேவைகளுக்கு நுழைய முடியாது.

 6. நானாவித விடயங்கள்

  6.1 டயலொக் நிறுவனத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளை திருத்தலாம், அதன் பின்னர் டயலொக் சேவைகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் இந்த திருத்தங்களை ஏற்பதாக கருதப்படுதல் வேண்டும்;

  6.2 டயலொக் சேவைகள் சம்பந்தமாக ஏதேனும் பிணக்கொன்று ஏற்பட்டால் சேவை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு டயலொக் நிறுவனத்தினால் எடுக்கப்படும் தீர்மானம் இறுதியானதும் முடிவானதுமாவதோடு, வாடிக்கையாளர் அந்தத் தீர்மானத்துக்கு கட்டுப்படுதலும் வேண்டும்;

  6.3 சட்டத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள அளவுக்கும் இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் வெளிப்படையாக ஏற்பாடு செய்திருக்கின்ற வாறும் தவிர டயலொக் சேவை மற்றும் டயலொக் வலையமைப்பு சம்பந்தமாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல நிபந்தனைகளும் பொறுப்புறுதிகளும் பிரதிநிதித்துவமும் விலக்கப்படும்;

  6.4 சந்தாதாரர் வழங்கிய தகவல்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு, இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் உட்பட ஆனால் அதற்கு மாத்திரம் வரையறுக்கப்படாத, ஏற்புடைய அதிகார சபைகளுடன் பராமரிக்கப்படுகின்ற சந்தாதாரரின் தேசிய அடையாள அட்டை விபரங்கள் மற்றும் ஏனைய தகவல்களை டயலொக் நிறுவனம் அணுகுவதற்கு சந்தாதாரர் இத்தால் ஒப்புக்கொள்கின்றார்.

  6.5 இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகள் இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களின் மூலமும் இலங்கை நீதிமன்றத்தின் பிரத்தியேக நீதிமன்ற அதிகாரத்தின் கீழும் நிருவகிக்கப்படுதல் வேண்டும்; அத்துடன்

  6.6 இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் ஆங்கில மொழிப் பிரதிக்கும் இதன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பிரதிகளுக்கும் இடையில் ஏதும் மாற்றங்கள் இருப்பின் ஆங்கில மொழிப் பிரதியே மேலோங்கி இருத்தல் வேண்டும்.