Terms and Conditions
2024 சுவர்ணசக்தி வெகுமதி மற்றும் Loyalty திட்டம் குறித்து சில்லறை விற்பனையாளர்களுக்கான பொது விதிகள் மற்றும் நிபந்தனைகள்
- இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு ரூபாய் (1) ரூபாய் மதிப்பில் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.
- ஒரு சில்லறை விற்பனையாளர் தங்கள் புள்ளிகளைப் பிரயோகிப்பதற்கு அல்லது போனஸ் புள்ளிகளைப் பெறுவதற்குத் தகுதிபெற வேண்டுமெனில், ஒரு சில்லறை விற்பனையாளர் மாதத்திற்கு குறைந்தபட்சம் 100 புள்ளிகளைச் சேகரித்திருக்க வேண்டும்.
- Retail Hub App திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட மொத்த புள்ளிகளை சில்லறை விற்பனையாளர் சரிபார்க்க முடியும்.
- சில்லறை விற்பனையாளர் பெற விரும்பும் பரிசுகளை WOW ஆப் மூலம் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
- புள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 அன்று காலாவதியாகும்.
- சில்லறை விற்பனையாளர்கள் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை மீதமுள்ள அனைத்து புள்ளிகளையும் 31 டிசம்பர் 2024க்குள் கண்டிப்பாக பிரயோகிக்க வேண்டும்.
- விற்பனையாளர்கள் பின்வரும் முறைகளில் புள்ளிகளை பிரயோகிக்கலாம்:
a. Cart மதிப்பிற்கேற்ப அனைத்து புள்ளிகளையும் பிரயோகித்தல்
b. cart மதிப்பை விட உங்களிடம் குறைவான புள்ளிகள் இருந்தால், அனைத்து புள்ளிகளையும் பிரயோகித்து, மீதமுள்ள தொகையை பணமாக செலுத்தவும்.
குறிப்பு: இருக்கும் points ஐ விட cart மதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் Points ஐ பகுதியாக பிரயோகிக்க முடியாது.
- நிகழ்ச்சியானது டயலொக்கின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நடத்தப்படும் மற்றும் டயலொக் தனது சொந்த விருப்பத்தின் பேரில் எந்த நேரத்திலும் திட்டதிலிருந்து பின்வாங்குவதற்கான முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளது.
- எந்த நேரத்திலும், முன் அறிவிப்புடன் அல்லது இல்லாமல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், புள்ளி அமைப்பு அல்லது திட்டத்தின் வேறு எந்த அம்சத்தையும் மாற்றுவதற்கான உரிமையை டயலொக் கொண்டுள்ளது.
- கணக்கை செயலிழக்கச் செய்தால் அல்லது டயலொக் உடனான விற்பனையாளரின் உறவை நிறுத்தினால், திரட்டப்பட்ட புள்ளிகள் அனைத்தும் இழக்கப்படும்.
- எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டால், டயலொக்கைக் கோருவதற்கு அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விற்பனையாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏதேனும் இடைநிறுத்தம் ஏற்பட்டால், புள்ளிகளை மீட்டெடுப்பது டயலொக்கின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும்.
- டயலொக் அமைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு டயலொக் விற்பனையாளரும் சுவர்ணசக்தி திட்டத்திற்குத் தகுதியுடையவர்.