பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா ஊடகங்களுடன் இணைந்து பல மாவட்டங்களுக்கு உலர் உணவு பொருட்களை விநியோகிக்கிறது

19 ஏப்ரல் 2020         கொழும்பு

 

news-1

தற்போது நிலவும் சூழ்நிலையில் இலங்கையர்களுக்கு உதவுவதற்கான சமூக நிவாரண முயற்சிகளைத் தொடர்வதற்காகவும் ஒரு சிறந்த நிறுவனமாக அதன் சமூகப் பொறுப்புகளை நிலைநிறுத்துவதற்காகவும் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மனுசத் தெரண, சியத லெகதுகம ITN மனுசத்வயே சத்காரய, மற்றும் வசந்தம் டி.வி. / எஃப்.எம் மனிதநேயப்பணி ஆகியவற்றுடன் இணைந்து இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

டயலொக் உடன் மனுசத் தெரண', 'டயலொக் உடன் சிரச லெகதுகம, டயலொக் உடன் ITN மனுசத்வயே சத்காரய ' மற்றும் 'வசந்தம் டிவி / எஃப்.எம் மனித நேயப்பணி உடன் டயலொக் ' முயற்சிகளில் 13 மாவட்டங்களில் 270 கிராமங்களில் 73,232 க்கும் மேற்பட்ட மக்களுக்கு தினசரி உலர் உணவு பொதிகளை ஏப்ரல் 16 ஆம் தேதி வரை விநியோகித்துள்ளது. நாட்டில் நிலவும் இந்த சூழ்நிலையில் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் மற்றும் மிக அடிப்படையான உணவுத் தேவைகளைக் கூட பெற முடியாத குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொண்டுள்ளது. இந்த தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மொத்தம் ரூ. 50 மில்லியனினை டயலொக் பங்களிப்பு செய்துள்ளது. பொலிஸ் மற்றும் மதத் தலைவர்களின் உதவியுடன், டயலொக், தெரண சியத, ITN மற்றும் வசந்தம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் சேர்க்கப்பட்ட உலர் உணவுகளின் விநியோகம் எளிதாக்கப்படுகிறது.

தற்போது நிலவும் சூழ்நிலையில் 20 மருத்துவமனைகளில் 27 வீடியோ அடிப்படையிலான டெலிமெடிசின் அலகுகளை உருவாக்க டயலொக் உதவியதுடன், முப்படை மற்றும் காவல்துறையினரால் நிர்வகிக்கப்படும் அனைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள மையங்களுக்கும் இலவச WiFi மற்றும் டயலாக் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்கியுள்ளது. வீடியோவிற்கான இலவச முக்கியமான இணைய இணைப்பு தீர்வுகளை வழங்கியது IDH ற்கு video conference வசதிகள் மற்றும் மொபைல் சாதனங்கள், கலுபோவில மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய PPE kits களை நன்கொடையாக அளித் தள்ளது. மற்றும் தொலைதூர தேசிய உளவியல்-சமூக ஆதரவு சேவையை (RNPSSS) நிறுவ தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணைப்பு தீர்வுகள் மற்றும் சாதனங்களை வழங்கியது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான தேசிய முயற்சிகளை ஆதரிப்பதற்காக டயலொக் நடத்தி வரும் பல முயற்சிகளில் இந்த நன்கொடை செயற்றிட்டமும் ஒன்றாகும். மேலும், 15 மில்லியன் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், பாதுகாப்பாக இருப்பதனையும், வீட்டிலேயே இருப்பதனையும், எப்போதும் இணைந்திருப்பதனையும் உறுதிசெய்யும் முயற்சிகளில் e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) ஆகியவற்றுக்கு இலவச அணுகலையும் வழங்குகின்றது