வடக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கமாறு வாடிக்கையாளர்களைஅழைக்கின்றது.
பாதுகாப்பு அமைச்சு உதவி இயக்குனர் (ஆயுதப்படை நலன்புரி) பத்தும் ஹெவகே, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார, கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் R.A. நுகேர மற்றும் கிளிநொச்சி துணை காவல் கண்காணிப்பாளர் மஹிந்த தயாராத்ன.
இலங்கை இராணுவம் 68வது பிரிவு பொது அதிகாரி கமாண்டிங் பிரிகேடியர் அருண ஆரியசிங்ஹே, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்/GA ரூபவதி கேதீஷ்வரன், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார, வலைய கல்வி இயக்குனர் உமாநிதி புவனராஜ், புதுக்குருப்பு பிரதேச செயலாளர் ஆ. பிரதீபன், கிளிநொச்சி துணை காவல் கண்காணிப்பாளர் மஹிந்த தயாரத்ன.
இலங்கை இராணுவம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்தவ அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவார திட்டத்தினை தொடர்ந்து இம்முறையும் வட மாகாணத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரணங்களை மேம்படுத்த அவர்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தவதற்கு இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி முன்வந்துள்ளது. இம்முறையும் வாடிக்கையாளர்கள் SMS, Star Points அல்லது eZ Cash ஊடாக நன்கொடையினை வழங்க முடியும். டயலொக் நிறுவனம் வாடிக்கையாளர்கள் வழங்கும் தொகையினை மும்மடங்காக வழங்கவுள்ளது.
இலங்கை இராணுவம் காதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்தவ அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து நிவாரண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. டயலொக் ஆசிஆட்டா இலங்கை இராணுவம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையில் பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தில் இந்த ஒப்பந்தமானது டிசம்பர் 31ம் திகதி கையொப்பமிடப்பட்டது. பகிர்ந்தளிக்கப்படும் நிதி நடவடிக்கைகளை PricewaterhouseCoopers இனால் கணக்காய்வு செய்யப்படும்
வாடிக்கையாளர்கள் SMS மூலம் நன்கொடை வழங்க DON என டைப் செய்து 7700 க்கு SMS செய்யுங்கள். ஒவ்வொரு ரூ.50 நன்கொடையுடனும் டயலொக் நிறுவனம் ரூ.100ஐ இணைந்து ரூ.150 வாக வெள்ள நிவாரணத்திற்கு வழங்கும். வாடிக்கையாளர்கள் மேலும் Star Points இனை நன்கொடையாக வழங்க #141*5*7# செய்து அல்லது eZ cash ஊடாக நன்கொடை வழங்க eZ Cash mobile app இனை பயன்படுத்துங்கள். அல்லது #111*6# டயல் செய்து PIN இலக்கத்தை பதிவு செய்து இலக்கம் 1ஐ பதிவு செய்து DON என குறிப்பிட்டு கணக்கு இலக்கமாக 1234 என்பதை பதிவு செய்து நீங்கள் நன்கொடையாக வழங்க விரும்பும் தொகையினை குறிப்பிட்டு உறுதிப்படுத்துங்கள். எவ்வளவு தொகையினை வேண்டுமானாலும் நீங்கள் நன்கொடையாக வழங்கிட முடியும். Etisalat மற்றும் Hutch வாடிக்கையாளர்களும் eZ Cash ஊடாக நன்கொடை வழங்க முடியும். நீங்கள் வழங்கும் தொகையினை டயலொக் 3 மடங்காக நிவாரணத்திற்கு வழங்கும். மேலும் வெளிநாடுகளில் வாழும் மக்கள் தங்களின் உறவுகளுக்கு உதவி கரம் நீட்ட eZ Cash ஊடாக www.worldremit.com க்கு சென்று நன்கொடை வழங்க விரும்பும் தொகையினை குறிப்பிட்டு உறுதிப்படுத்துங்கள்