பொருள் விரிவாக்கம்

Dialog PLAY App மூலம் 2026 FIFA World Cup இன் ஒவ்வொரு கணத்தையும் FREE ஆகக் கண்டு மகிழுங்கள்!

எந்தவித subscription fee-உம் இன்றி அனைத்து 104 matchesகளையும் live ஆக stream செய்திடுங்கள்.

2026 ஜூன் 12         கொழும்பு

 

கால்பந்து உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க தொடரான 2026 FIFA World Cup போட்டிகள், 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுப் பங்களிப்பில் நடைபெறுகின்றன. வரலாற்றிலேயே முதன்முறையாக மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த FIFA World Cup தொடரில், 48 தேசிய அணிகள் பங்கேற்று 104 போட்டிகளில் விளையாடவுள்ளதால், இந்த ஆண்டுக்கான தொடர் முன்னெப்போதையும் விட அதிக உற்சாகம், விறுவிறுப்பு மற்றும் மறக்க முடியாத கணங்களை அள்ளித்தரவுள்ளது.

இலங்கையிலுள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் ஒரு கணத்தைக் கூட தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், எந்தவித subscription fee-உம் இன்றி, தங்களது மொபைல் போன்களிலேயே Dialog PLAY App மூலம் FIFA World Cup 2026 இன் அனைத்துப் போட்டிகளையும் live ஆகப் பார்க்கும் பொன்னான வாய்ப்பை Dialog தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியதெல்லாம், Dialog PLAY App ஐ download செய்து, தங்களுக்கு வசதியான நேரத்தில், எந்நேரமும், எங்கிருந்தும் போட்டிகளை stream செய்யத் தொடங்கலாம்.

வீட்டிலிருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், பயணங்களில் இருந்தாலும் அல்லது வெளியில் எங்கே இருந்தாலும், கால்பந்து ரசிகர்கள் தங்களது ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே ஒவ்வொரு கோலையும் (goal) கொண்டாட்டத்தையும் நேரடியாகப் பின்தொடர முடியும். இதன் மூலம் உலகிலேயே மிக அதிகமாகப் பார்க்கப்படும் இந்த விளையாட்டுத் திருவிழாவுடன் எப்போதும் இணைந்திருக்கலாம்.

மேலும், Dialog PLAY App ஆனது மிகவும் வசதியான Catch-Up மற்றும் Rewind அம்சங்களையும் வழங்குகிறது. இது ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தவாறு போட்டிகளைப் பார்க்கும் முழுமையான கட்டுப்பாட்டை வழங்குகிறது. ஏதேனும் ஒரு போட்டியைத் தவறவிட்ட வாடிக்கையாளர்கள், கடந்த போட்டிகளை on demand மூலம் எளிதாகப் பார்வையிட முடியும். அதேபோல், ஒரு live போட்டியைத் தாமதமாகப் பார்க்கத் தொடங்குபவர்கள், அதன் stream ஐ rewind செய்து, ஆரம்பத்திலிருந்தே முக்கிய தருணங்களை மீண்டும் கண்டு ரசிக்கலாம்.

Dialog PLAY App உடன், கால்பந்து ஆர்வலர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே முழுமையான FIFA World Cup coverage ஐ அனுபவிக்க முடியும். இதன் மூலம் இந்தத் தொடர் முழுவதும் நடைபெறும் ஒவ்வொரு சுவாரசியமான கணத்துடனும் தங்களை எப்போதும் இணைத்திருக்க முடியும்.