பொருள் விரிவாக்கம்

ICC Women’s T20 World Cup 2026 பெருமையைத் தேடிப் பயணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இணைந்து நிற்கிறது

2026 ஜூன் 04         கொழும்பு

 

இலங்கையின் முதற்தர இணைப்பு வழங்குநரும், நாட்டின் விளையாட்டுத் துறையின் தீவிர ஊக்குவிப்பாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி , ICC Women’s T20 World Cup 2026 தொடரில் பங்கேற்பதற்காக புதன்கிழமை இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்ட இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. ICC Women’s T20 World Cup 2026 தொடருக்கான இலங்கை மகளிர் தேசிய அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர் (Sponsor) என்ற வகையில், உலக அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அணியின் பயணத்திற்குப் பின்னால் பெருமையுடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி துணை நிற்கிறது.

அணித்தலைவி (Captain) சமரி அத்தபத்து தலைமையிலான தேசிய அணி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைப் பயிற்றுவிப்பாளர் (Head Coach) ஜேமி சிடன்ஸின் (Jamie Siddons) கீழ், புதிய நம்பிக்கையுடனும் லட்சியத்துடனும் இந்த உலகளாவிய பெருந்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் நடைபெறவுள்ள இந்தத் தொடர், மகளிர் டி20 உலகக் கிண்ண வரலாற்றிலேயே மிக அதிகமான அணிகள் பங்கேற்கும் தொடராக அமையவுள்ளதுடன், இதில் 12 அணிகள் உலகக் கிண்ணப் பட்டத்திற்காகப் போட்டியிடவுள்ளன.

ஜூன் 12 அன்று எட்ஜ்பாஸ்டனில் (Edgbaston) நடைபெறும் தொடரின் ஆரம்பப் போட்டியில், நடாத்துனர்களான (Hosts) இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை தனது முதற் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடக்கப் போட்டிக்கு முன்னதாக, அணி தனது பயிற்சிப் போட்டிகளில் (Warm-up fixtures) ஜூன் 6 அன்று பாகிஸ்தானுடனும், ஜூன் 9 அன்று நெதர்லாந்துடனும் டெர்பியில் (Derby) மோதவுள்ளது. பலம் வாய்ந்த Group 2 இல் இங்கிலாந்து, நடப்புச் சாம்பியனான (Defending champions) நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ள இலங்கைக்கு, நாக்-அவுட் (Knockout) சுற்றுகளுக்கான பாதை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். எவ்வாறாயினும், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கும் எதிரான சமீபத்திய தொடர் வெற்றிகளால் (Series victories) உத்வேகம் பெற்றுள்ள நிலையிலேயே இலங்கை அணி இங்கிலாந்திற்குச் சென்றுள்ளது.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையின் பங்கேற்பானது, நாட்டில் மகளிர் கிரிக்கெட்டின் தொடர்ச்சியான வளர்ச்சியில் மற்றுமொரு முக்கிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இலங்கையில் ICC தொடர்களின் பிரத்தியேக ஒளிபரப்பு உரிமையைக் (Exclusive broadcast rights) கொண்டுள்ள டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, விளையாட்டின் வளர்ச்சியை ஆதரிப்பதிலும் இலங்கை வீரர்களை உலக அரங்கில் போட்டியிடச் செய்வதிலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

அணியின் புறப்பாடு குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழுமத் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவபெரும கருத்துத் தெரிவிக்கையில், "உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றை எதிர்கொள்ளப் புறப்படும் இலங்கை மகளிர் அணியுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். கடந்த சில வருடங்களாக இந்த அணி காட்டிய அர்ப்பணிப்பு, மனஉறுதி மற்றும் முன்னேற்றம் ஆகியவை நாட்டிற்கே ஒரு ஊக்கமாக அமைந்துள்ளன. ICC Women’s T20 World Cup 2026 தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமரி அத்தபத்து, பயிற்றுவிப்பாளர் ஜேமி சிடன்ஸ் மற்றும் முழு அணிக்கும் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.

உலகக் கிண்ணத் தொடரில் அறிமுகமானது முதல், இலங்கை மகளிர் அணி சர்வதேச கிரிக்கெட்டில் நிலையான முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்கு இதுவரை அணி தகுதி பெறவில்லை என்றாலும், தற்போதைய அணியினர் கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேடையில் வரலாற்றைப் படைக்கவும், தங்களது திறமையை வெளிப்படுத்தவும் உறுதியோடு களமிறங்குகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைத்துப் போட்டிகளையும் டயலொக் தொலைக்காட்சி (Dialog Television - அலைவரிசை எண்கள் 68, 120 மற்றும் 63) ஊடாக நேரலையாகப் (Live) பார்வையிடலாம், அல்லது Dialog Play மொபைல் App மற்றும் ThePapare.com ஊடாகவும் நேரடி ஒளிபரப்பைக் (Stream) காணலாம்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தேசிய கிரிக்கெட், வொலிபோல் மற்றும் ஈஸ்போர்ட்ஸ் (Esports) அணிகளின் பெருமைக்குரிய அனுசரணையாளராகத் திகழ்கிறது. மேலும், இலங்கை கோல்ப் ஓபன் (Sri Lanka Golf Open) மற்றும் தேசிய பாரா விளையாட்டுகள் (National Para Games) மற்றும் உலக பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்குச் (World Paralympic Games) செல்லும் இலங்கை அணியை ஊக்குவிப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத் துறையின் முதன்மை அனுசரணையாளராகவும் விளங்குகிறது. அத்துடன், நாளைய சாம்பியன்களை உருவாக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பிற்கு இணங்க, ஜனாதிபதி தங்கக் கிண்ண வொலிபோல், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் நெட்போல் தொடர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டிகளுக்கும் இந்நிறுவனம் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.