பொருள் விரிவாக்கம்

‘Elephant House SuperHeroes Powered by Dialog’ இறுதிப்போட்டி நிறைவடைந்துள்ளது 

2022 ஆகஸ்ட்  30         கொழும்பு

 

‘Elephant House SuperHeroes Powered by Dialog’ Hosts Grand Finale 

Elephant House SuperHeroes Powered by Dialog இறுதிப்போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது!  

படத்தில் இடமிருந்து வலம்: Super Innovator பிரிவில் 2ஆம் இடத்தை பெற்ற ஜனன சதிஷ்கா, சூப்பர் பொறுப்பு பிரிவின் வெற்றியாளர் நிபுன் சாமுதித, Super Responsible பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற அக்ஷரா செஹேலி, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி லீலாங்க செனவிரத்ன, தொழில்முறை நடன கலைஞர் அசேக விஜேவர்தன, தொழில்முனைவோர் ஆலோசனையாளர் யாசஸ் ஹேவகே, Super Talent பிரிவில் இரண்டாம் இடம்பெற்ற டெனெத் தீக்ஷன, Super Talent பிரிவின் வெற்றியாளர் தனிந்து திலும், Super Innovator பிரிவின் வெற்றியாளர் ஜயது நிந்துவர,

Elephant House SuperHeroes Powered by Dialog' போட்டியானது இலங்கையர்களால் மிகவும் விரும்பப்படும் மற்றும் நம்பகமான ஐஸ்கிரீம் வர்த்தக நாமமான Elephant House Ice Cream மற்றும் இலங்கையின் முன்னணி தொடர்தொடர்பு சேவை வழங்குனர் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் போட்டியை மேம்படுத்தும் விருப்பத்துடன் இலங்கையின் எதிர்கால சந்ததியினரின் திறமைகள் மற்றும் திறன்களை கண்டறியும் நோக்கில் 'Super Talent' 'Super Innovator' மற்றும் 'Super Responsible' ஆகிய மூன்று பிரிவுகளுக்கான வெற்றியாளர்களின் தெரிவு அண்மையில் நிறைவடைந்தது.

நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட இப் போட்டியானது திறமைகள், புத்தாக்க திறன்கள் மற்றும் நிலையான வாழ்விற்கான முயற்சிகளை அடையாளம் காணும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போட்டியின் மூலம் 16 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டதுடன் அவர்களின் எதிர்கால கல்விக் கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்பையும் வழங்குவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, அண்மையில் நிறைவடைந்த Elephant House Super Heroes Powered by Dialog' இறுதி போட்டியில் 'Super Talent' பிரிவில் தனிந்து திலும் அவர்களும் ,'Super Innovator' பிரிவில் ஜெயது நிந்துவர அவர்களும், 'Super Responsible' பிரிவில் நிபுன் சமுதிதா அவர்களும் வெற்றி பெற்றனர். மேலும், இம்மூன்று பிரிவுகளிலும் வெற்றியீட்டியவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து அவர்களின் மூன்றாம் நிலை படிப்புக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும், இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் Tabs, Dialog Home Broadband ரவுட்டர் மற்றும் இலவச டேட்டா பிளான்களும் வழங்கப்பட்டன.