பொருள் விரிவாக்கம்

'மனிதநேய ஒன்றிணைவு' மொரட்டுவை, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி மற்றும் மாத்தறை பகுதிகளிலுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கியது

2023 ஜூன் 15         கொழும்பு

 

Manudam Mehewara Continues to Support Vulnerable Families in Moratuwa, Vavuniya, Batticaloa, Kandy & Matara

நாட்டில் நிலவும் சவால்மிகு பொருளாதாரச் சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட 'மனிதநேய ஒன்றிணைவு' எனும் மனிதாபிமான நடவடிக்கை மொரட்டுவை, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி மற்றும் மாத்தறை பகுதிகளிலுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முடிந்துள்ளது.

இன்றுவரை நாடளாவிய ரீதியில் உள்ள 25 மாவட்டங்களிலும் உள்ள 120,000 இற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் மூலமாக உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது. ‘மனிதநேய ஒன்றிணைவு’ என்பது Dialog Axiata PLC, MAS Holdings, Hemas Holdings PLC, சர்வோதய சிரமதான இயக்கம், மற்றும் PwC Sri Lanka, இவர்களுடன் பெருநிறுவன பங்காளர்களான CBL Group, Citibank, Sunshine Holdings PLC, Huawei Technologies Lanka Co., Pvt Ltd, Unilever Sri Lanka, மற்றும் பெருநிறுவன நன்கொடையாளர்களுடன் London Stock Exchange Group மற்றும் Roar Global ஆகிய பல பெருநிறுவனங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் ஒரு மனிதாபிமான முன்னெடுப்பாகும்.

மனிதநேய ஒன்றிணைவு திட்டத்தின் நோக்கம் யாதெனில், வினைத்திறனான பொருளாதார திட்டத்தின் மூலம் நிலைபேறான அனுகூல பரிமாற்ற அமைப்பு ஒன்று நிறுவப்படும் வரை நாடுமுழுவதும் உள்ள நலிவடைந்த குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவதேயாகும். இந்த முன்னெடுப்பின் ஊடாக அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த கூட்டு நோக்கத்திற்கு இலங்கையர்கள் அனைவரையும் நிறுவனங்களையும் கைகோர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுகின்றனர்.

நாடெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்டெடுக்கும் இந்த திட்டத்தில் கைகோர்க்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நிறுவனங்களையும் மனிதநேய ஒன்றிணைவு அழைப்பு விடுக்கின்றது. தனிநபர்கள் பல்வேறு பணம் செலுத்தும் ஊடகங்கள் வழியாக இலங்கையின் முதலாவது நோக்கம் உறுதிப்படுத்தப்பட்ட கூட்டு நிதிநல்கை (crowdfunding) தளமான www.karuna.lk இல் தங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.

மனிதநேய ஒன்றிணைவு பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://dlg.dialog.lk/manudam-mehewara வலைத்தளத்தை அணுகவும்.