டயலொக் தேசிய வலைப்பந்தாட்ட செம்பியன்ஷிப் போட்டிகள் -2021
January 19, 2022 Colombo
படத்தில் இடமிருந்து வலம் இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் செயலாளர் குமுதினி கோம்ஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் அதிகாரி அஷானி சேனாரத்ன, இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சனி ஜெயக்கொடி, இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் பொருளாளர் சஞ்சீவனி வனசிங்ஹே
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான தனது வாக்குறுதிக்கமைய தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் 'டயலொக் தேசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் - 2021' போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வலுசேர்க்க மீண்டும் முன்வந்துள்ளது. அதற்கமைய மேற்படி போட்டிகள் ஜனவரி 22 முதல் 23 வரை கண்டி, திகன மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான டயலொக் தேசிய வலைப்பந்து 2021 செம்பியன்ஷிப் போட்டிகளையிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள 34 அணிகள் போட்டியிடவுள்ளன. அதன்படி, ஆரம்ப சுற்று சுற்று லீக் முறையில் நடைபெறவுள்ளதுடன், அதில் வெற்றிபெறும் அணிகளுக்கிடையே 'நொக்அவுட்' முறையில் போட்டிகள் நடைபெறும்.
டயலொக் தேசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் போட்டியானது இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தினால் (NFSL) வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்ற முதன்மையான ஒரு போட்டியாகும், இப்போட்டிகளினூடாக திறமையான போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களை இனங்கண்டு அவர்களை சர்வதேச மட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அவர்களைப் பயிற்றுவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
“தேசிய வலைப்பாந்தாட்ட செம்பியன்ஷிப் என்பது இலங்கையில் வருடாந்தம் நடைபெற்று வருகின்ற உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் முக்கியத்துவமிக்க ஒரு போட்டியாகும், மேலும் கொவிட் 19 காரணமாக நாடும் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இப்போட்டிகளுக்கான ஆதரவை வழங்குகின்றமைக்காக டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கு நான் நன்றி கூறவிரும்புகின்றேன்.” என இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சனி ஜெயக்கொடி தெரிவித்தார். “கடந்த சில வருடங்களாக இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணி சிறப்பாக தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளது, எனவே அத்தகைய தேசிய வீரர்களின் தனித்துவத்தை தக்கவைத்து புதிய திறமைகளை கண்டறிய டயலொக் தேசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் போன்ற போட்டிகள் முக்கியமாக அமைந்துள்ளது எனலாம் என மேலும் தெரிவித்தார்.
பிரதான அனுசரணையாளராகிய, டயலொக் ஆசிஆட்டா மேற்படி போட்டிகளை thepapare.com ஊடாகவும் Dialog VIU mobile app மற்றும் Dialog TV அலைவரிசை இலக்கம் 140 இலும் நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் கரைப்பந்து அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன, ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , கனிஷ்ட கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி லீக், நொக்கவுட் மற்றும் செவன்ஸ் போட்டிகள், பிரீமியர் கால்பந்து, பாடசாலை கிரிக்கெட் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பாரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.