பொருள் விரிவாக்கம்

மிகச்சிறந்த தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குனராக டயலொக், மீண்டும் இலங்கை மக்களால் வாக்களிக்கப்பட்டுள்ளது

2018 மார்ச் 12ம் திகதி         கொழும்பு

 

news-1

ஸ்லிம் நீல்ஸ்சன் மக்கள் விருதுகள் 2018இல் இலங்கை நுகர்வோர் மீண்டும் ஆண்டின் மிகச் சிறந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குனருராகவும் மற்றும் இணைய சேவை வழங்குனராகவும் டயலொக்கிற்கு வாக்களித்துள்ளனர். இலங்கையரின் கருத்துக்களையும் வாக்குகளையும் அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் மக்கள் விருதிற்காக அனைவரினதும் விருப்பத்திற்கு அமைய டயலொக் 7வது ஆண்டாக சிறந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குனருக்காக அனைவராலும் வாக்களிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த இணைய சேவை வழங்குனராக டயலொக் தொடர்ந்து 6வது ஆண்டாக வாக்களிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு இலங்கையரினதும் அங்கீகாரத்துடன் முதற்தர மற்றும் அதிதுரித வலையமைப்பின் மூலம் அர்ப்பணிப்பான சேவையினை வழங்குகின்றது.

டயலொக் தனது சிறந்த பயணத்தின் மூலம் தொடர்ந்து பரவலான கவரேஜினையும்ää அதிதுரித வேகத்தினையும் வழங்குவதன் மூலம் பல புதிய கண்டு பிடிப்புக்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் திகழ்வதுடன் நாடளாவிய ரீதியிலும் மற்றும் பிராந்திய ரீதியிலும் மொபைல் தொலைபேசிகளை மேம்படுத்துவதற்கு முன்னோடியாக திகழ்கின்றது. டயலொக் தெற்காசியாவில் முதன் முறையாக 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதுடன், தொலைத்தொடர்பாடல் பிராந்திய மையமாக செயற்படுவதுடன் இலங்கையின் ஆதிக்கம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் முன்னிலையாளராகவும் உள்ளதுடன் (NB-IOT) LTE (VoLTE), VoLTE ரோமிங் மற்றும் 4.5G LTE Home Broadband ஆகியவற்றுக்கான குரல் அழைப்புக்களை வணிக ரீதியில் வெளியிட்டது.

இந்நிகழ்வின் போது டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாகி உரையாற்றுகையில், இலங்கையர் அனைவரும் மீண்டும் ஒரு முறை ஆண்டின் தொலைத்தொடர்பு சேவை வழங்குனராகவும் இணைய சேவை வழங்குனராகவும் வாக்களித்துள்ளமைக்கு பணிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என கூறினார் மேலும் அவர் கூறுகையில் இணைக்கப்பட்ட நாட்டை இயக்குவதில் ஒரு வினையூக்தியாக தொடர்ந்து செயற்படுவோம் எனவும் அதே சமயம் இலங்கை நாட்டை டிஜிட்டல் நோக்கி வேகப்படுத்துவோம் எனவும் கூறினார். நாங்கள் பெற்றுக்கொண்ட அங்கீகாரமானது இலங்கையர் எம் மீது கொண்டுள்ள மதிப்பினையும் ஆதரவினையும் பிரதிபலிக்கின்றது. மேலும் தொழில் நிறுவனங்களை வலுவூட்டுவதற்கும் வளப்படுத்தவதற்கும் எமது பார்வையினை செலுத்துவோம் என கூறினார்.

இந்த வருடமும் வழங்கப்படவுள்ள மக்கள் விருதானது இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் ஏற்பாட்டிலும் நீல்ஸ்சனின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் 12வது முறையாக விருதுகள் வழங்கப்படவுள்ளது. 9 மாகாணங்களிலிருந்தும் 15 முதல் 60 வயதிற்குட்பட்ட வயது பிரிவிலிருந்து பெறப்பட்ட மற்றும் கடந்த 6 மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் பல்வேறு பிரிவுகளாக நியமிக்கப்பட்டவர்கள் மூலம் வெற்றியாளர்கள் அடையாளம் காட்டப்படுகின்றார்கள். மக்கள் விருதுää நாட்டிலுள்ள மக்களுக்கு தனிப்பட்ட முறையில் வர்த்தக குறிகளையும் நபர்களையும் அங்கீகரிக்கின்றது.