பொருள் விரிவாக்கம்

Dialog இன் உழவர் தோழன் பரிசுப்புதையல் 2021/22 தேசிய மட்டப்போட்டியில் அதன் சந்தாதாரர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டது

ஜூன் 09 2023         கொழும்பு

 

Innovative IoT Solution to Nurture Local Rubber Plantations

புரட்சிகரமான விவசாய ஆலோசனை சேவையான உழவர் தோழனை வழங்கும் இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலாக் ஆசிஆட்டா பிஎல்சி ஆனது உழவர் தோழன் பரிசுப்புதையல் போட்டியை 6வது முறையாக ஏற்பாடு செய்திருந்தது. இச்சேவையின் சந்தாதாரர்களுக்கு இதன்போது பாரிய பரிசுகள் வழங்கப்பட்டன.

சேவையை வழங்குவதோடு வருடம் முழுவதுமான loyalty திட்டம் மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இதன் குறிக்கோளாகும். போட்டியின் 2021/2022 ஆம் பருவத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள சந்தாதாரர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இதன்போது தங்க நாணயங்கள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க பரிசில்கள் வழங்கப்பட்டன.

இலங்கையின் முதன்மை கையடக்கத் தொலைபேசி அடிப்படையிலான விவசாயத் தகவல் சேவையான உழவர் தோழன், புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பையும் விளைச்சலையும் அதிகரிக்க உதவுகிறது. விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ், உழவர் தோழன் குரல் சேவையானது, GAP (நல்ல விவசாய நடைமுறைகள்) சான்றிதழ் தொடர்பான தகவல்கள், பயிர் விலை மற்றும் எதிர்கால பயிர் திட்டமிடலுக்கான பரிந்துரை போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய, இந்தத் துறையில் தொழில்முறை வழிகாட்டுதலை நேரடியாக அணுகுவதற்கு நாட்டிலுள்ள பயனர்களுக்கு இது உதவுகிறது.

மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு 30க்கும் மேற்பட்ட பயிர்கள், இயற்கை விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டம் பற்றிய ஆலோசனைகளை வழங்குவதன் மூலம், சாதாரண சிறு தொலைபேசியைப் பயன்படுத்தும் எவரும் இந்தச் சேவையை அணுக முடியும். உழவர் தோழன் மொபைல் App விவசாயிகளுக்கும் கிடைக்கப்பெறுகிறது, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த App ஐ கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து, டயலொக் மொபைல் பயனர்களுக்கு எந்த டேட்டா கட்டணமும் இல்லாமல் பயன்படுத்த முடியும், அங்கு சந்தாக் கட்டணம் நாளொன்றுக்கு ரூ.2 + வரி அறவிடப்படும். அனைத்து புதிய பயனர்களும் 90 நாட்களுக்கு எந்த சேவைக் கட்டணமும் இல்லாமல் உழவர் தோழன் app ஐ பயன்படுத்தலாம். டயலொக் அல்லது ஹட்ச் நெட்வொர்க்குகளில் 616ஐ டயல் செய்வதன் மூலம் குரல் சேவையை அணுகலாம். சந்தாக் கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.1 +வரி அறவிடப்படும்.