பொருள் விரிவாக்கம்

உலக செவிப்புலன் தினத்தினை முன்னிட்டு, டயலொக் இரத்மலானை ஓடியோலொஜி சென்டரில் இலவச செவிப்புலன் பரிசோதனையை விரிவுபடுத்துகிறது

மார்ச் 02, 2022         கொழும்பு

 

Dialog Extends Free Hearing Tests

டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது, இரத்மலானை (செவிப்புலன் ) Audiology நிறுவனம் மற்றும் இரத்மலானை செவிப்புலனற்றோர் பாடசாலை ஆகியவற்றுடன் இணைந்து உலக செவிப்புலன் தினத்தை முன்னிட்டு மார்ச் 3 தொடக்கம் மார்ச் 16 வரை இலவச செவிப்புலன் சோதனைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. குறித்த தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரத்மலானை, பொருப்பன வீதி, இல.15 இல் அமைந்துள்ள செவிப்புலன் நிலைய வளாகத்தில் விரும்பிய அனைவரும் இந்த சேவையை பெற்றுக்கொள்ளமுடியும்.

செவிப்புலன் குறைபாடு உள்ளவர்கள் 0117307308 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமோ அல்லது 0768 050 600 என்ற எண்ணிற்கு வட்ஸ்அப் அனுப்புவதன் மூலமோ, மேற்படி இலவச செவிப்புலன் சோதனைக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

டயலொக் ஆசிஆட்டா மற்றும் இலங்கை விழிப்புலனற்றோர் மற்றும் செவிப்புலன் குறைபாடுடையோர் பாடசாலை ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாக 2007 ஆம் ஆண்டில் செவிப்புலன் மற்றும் பேச்சு குறைபாடுள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரத்மலானையில் செவிப்புலன் மற்றும் பேச்சு சிகிச்சைக்கான சிறப்பு நிலையமொன்று நிறுவப்பட்டது. மேற்படி திட்டத்திற்கான நிதி வசதிகளை டயலொக் நிறுவனம் வழங்கியது. மேலும், இதையிட்ட பராமரிப்பு மற்றும் இதர மூலதனச் செலவினங்களையும் டயலொக் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. அதிநவீன உபகரணங்களுடன் கூடிய இந்த சோதனை நிலையமானது பொதுமக்களுக்கு செவிப்புலன் சோதனைகள், பேச்சு மதிப்பீடுகள் மற்றும் செவிப்புலன் மற்றும் பேச்சு சிகிச்சை ஆகியவற்றை மலிவு விலையில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரத்மலானை செவிப்புலனற்றோருக்கான கல்லூரியால் நிர்வகிக்கப்படும் இந்த நிலையமானது, அதன் மாணவர்களுக்கு இலவச செவிப்புலன் மற்றும் பேச்சு சிகிச்சை சேவைகளையும் வழங்குகிறது. மேலும், இந்நிலையத்தின் பொறுப்புணர்வை கொண்ட சேவையின் அடிப்படையில், அரச காது - மூக்கு - தொண்டை (ENT) சிறப்பு மருத்துவர் அல்லது கிராம சேவகர் ஒருவரது பரிந்துரைக்கமைய, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இலவச செவிப்புலன் சோதனைகளை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இரத்மலானை செவிப்புலன் நிலையத்தினால் அரச மருத்துவமனைகளில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு 'நியோனாடல் ஸ்கிரீனிங்' சோதனைகளும் நடத்தப்படுகின்றன; குறிப்பாக, கொழும்பு தெற்கு (களுபோவிலை) போதனா வைத்தியசாலை மற்றும் பாணந்துறை கேதுமதி மகப்பேற்று மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் மேற்படி சேவைகள் வழங்கப்படுகின்றன. இவைமட்டுமன்றி, இந்த நிலையமானது நாடு முழுவதும் உள்ள ஏனைய செவிப்புலனற்ற கல்லூரிகளுக்கு உதவிகரமாகவும் இருந்துவருவதுடன், இரத்மலானை செவிப்புலனற்றோர் மற்றும் விழிப்புலனற்றோர் கல்லூரியின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுனர்கள் (ஆசிரியர்கள்) ஆகியோருக்கு இலவச பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இரத்மலானை செவிப்புலன் நிலையம் தொடர்பான மேலதிக விபரங்களை www.giftofsound.lk எனும் வலைத்தளத்தில் அறியமுடியும் .