தொலைக்காட்சி, பொழுதுபோக்கு அனுபவத்தையே மாற்றியமைக்கவுள்ள டயலொக் டெலிவிஷன் அறிமுகப்படுத்தும் ViU Mini
2023 ஜூன் 15 கொழும்பு
ஒப்பற்ற பொழுதுபோக்கு அனுபவத்தை நேயர்களுக்கு வழங்கும் பொருட்டு Dialog Television ஆனது புத்தம்புதிய ViU Mini ஐ அறிமுகப்படுத்துகிறது. இலகுவாக plug செய்து பாவிக்கக்கூடிய இச்சாதனம், வாடிக்கையாளர்களுக்கு நேரலையான தொலைக்காட்சி, பார்க்கத்தவறியதை மீட்டி பார்க்க உதவும் rewind மற்றும் catchup வசதிகள், அதிநவீன Android TV வசதிகள், குரல்வழி (google voice) இயங்கும் remote மற்றும் ஏரளமான apps முதலிய அம்சங்களை கொண்டுள்ளது.
எந்த இடத்திற்கும் சிரமமின்றி எடுத்துச் செல்லக்கூடியமை, பயனருக்கு இலகுவான இயங்குதளம், இலகுவான இயக்கம் முதலிய வசதிகளை கொண்ட Dialog Television ViU Mini, 100 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரலை அலைவரிசைகளுடன் rewind மற்றும் catchup வசதிகளை இலங்கையில் முதன்முறையாக முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்காக வழங்குவதுடன் YouTube, Amazon Prime, 5,000+ Google Play Store apps, games, Chromecast support மற்றும் பல வசதிகளும் இதில் உள்ளன.
Dialog Television ViU Mini ஆனது வாடிக்கையாளர்களின் தேவை கருதி இரு கவர்ச்சிகரமான முற்கொடுப்பனவு planகளை வழங்குகிறது. புதிய முற்கொடுப்பனவு இணைப்புகள் ரூ.9,990/- இற்கு கிடைக்கப்பெறுகின்றன. ViU Mini Supersaver முற்கொடுப்பனவு plan ஐ ரூ.554 செலுத்தி செயற்படுத்திக்கொள்ளமுடியும். இந்த plan ஊடாக செய்தி, கல்வி, சிறுவருக்கான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இசை உள்ளிட்ட மற்றும் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய 55 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அலைவரிசைகளை கண்டுகளிக்க முடியும். தமிழ் அலைவரிசைகளை விசேடமாக உள்ளடக்கிய ViU ஆரம்பம் முற்கொடுப்பனவு plan ரூ.734 இற்கு 65 அலைவரிசைகளை வழங்குகிறது. இவற்றுடன் வாடிக்கையாளர்கள் தாம் விரும்பும் தனி அலைவரிசைகள் அல்லது அலைவரிசை packகளை தமது மாதாந்த planஇல் சேர்த்துக்கொள்ள முடியும். இந்த அனுகூலங்களுக்கு மேலதிகமாக பயனர்கள் live TV, Rewind, Catch up மற்றும் Video on Demand (VOD) வசதிகளை தமது Dialog Mobile மற்றும் Home Broadband வலையமைப்புகளில் மேலதிக data கட்டணமின்றி அணுகமுடியும்.
மேற்கூறப்பட்ட வசதிகளை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் செய்யவேண்டியதெல்லாம் ViU Mini சாதனத்தை யாதாயினும் HDMI இணைப்பை ஏற்கக்கூடிய தொலைக்காட்சியுடன் பொருத்துவது மாத்திரமே. இவற்றுடன் HBO, Sony, Discovery, மற்றும் Star முதலிய 100 இற்கும் மேற்பட்ட நேரலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அலைவரிசைகள், பலதரப்பட்ட HD அலைவரிசைகள், இவற்றுடன் விளையாட்டு, திரைப்படங்கள், செய்திகள் மற்றும் பல வகையான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட இலங்கையின் மாபெரும் வீடியோ தொகுப்பை இது வழங்குகிறது. Dialog Television ViU Mini ஆனது குரல் வழி இயங்கும் remote ஒன்றையும் கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் விரும்பியவற்றை Google Voice மூலம் search செய்து வீடியோ கண்டுகளித்தல், வானிலை நிலவரங்களை பார்த்தல், விளையாட்டுகளின் புள்ளிகளை பார்த்தல், Googleல் கேள்விகளை கேட்டு விடைகளை அறிந்துகொள்ளல் இன்னும் பல வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
Dialog Television ViU Mini சாதனத்தை வாடிக்கையாளர்கள் www.dialog.lk வழியாக order செய்து 48 மணிநேரத்திற்குள் எவ்விதமான விநியோக கட்டணமுமின்றி அவர்களின் வீட்டு வாசற்படிக்கே வரவழைத்துக்கொள்ள முடியும். அல்லது நாடாளாவிய ரீதியில் உள்ள யாதேனும் Dialog Experience Centre இல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவரிடம் கொள்வனவு செய்ய முடியும். Dialog Television ViU Mini பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் வசதிகளின் விபரங்களை அறிய https://dlg.dialog.lk/dtv-viu-mini தளத்தை பார்வையிடவும்.