டயலொக் அனுசரணையிலான 'வொரியர் றக்பி கிண்ணம்- 2021’
வெற்றி பெறப் போவது யார்?
November 1, 2021 Colombo
வொரியர் றக்பி கிண்ணம் - 2021 அணிகளின் தலைவர்கள் வொரியர் கிண்ணத்துடன் காட்சி தருவதை படத்தில் காண்கிறீர்கள்.
படத்தில் (இ - வ) : லஹிரு ஹேரத் – கடற்படை 'B', செனல் டீலக்க - ஹெவ்லொக் - சமத் பெர்னாண்டோ - இராணுவம்' B', இரோஷன் சில்வா- பொலிஸ் 'A', நிஸால் சமாடி- பொலிஸ்' B', அதீஷ வீரதுங்க - கடற்படை 'A' , அஷான் பண்டார - இராணுவம் 'A', சூரிய கிரிஷான் - விமானப்படை 'B', சுதர்ஷன முத்து தந்திரி - CH & FC , நுவன் பெரேரா- விமானப்படை 'A' .
டயலொக் அனுசரணையில் நடைபெறவுள்ள அணிக்கு 7 பேரைக் கொண்ட வொரியர் றக்பி கிண்ணம் - 2021 போட்டிகள் ஒக்டோபர் 30, 31 ஆகிய தினங்களில் கொழும்பு - 05, பொலிஸ் பார்க் மைதானத்தில் காலை 9 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம், 20 ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் (எமிரேட்ஸ்), டுபாய் நகரில் நடைபெறவுள்ள அணிக்கு 7 பேரைக் கொண்ட ஆசிய றக்பி கிண்ண போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இலங்கை றக்பி அணியை தெரிவு செய்வதற்கான ஒரு தேர்வுக் களமாகவும் மேற்படி 'வொரியர் றக்பி கிண்ணம்' போட்டிகள் இலங்கை தெரிவுக் குழுவிற்கு உதவிகரமாக அமையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வொரியர் றக்பி கிண்ணம் - 2021' போட்டிகள் கொவிட் - 19 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய ரசிகர்கள் எவரும் அனுமதிக்கப்படாதவாறு மூடப்பட்ட அரங்கிலேயே நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போட்டிகளை Supreme TV (Dialog TVயின் அலைவரிசை 20), ThePapare.com மற்றும் Dialog VIU மொபைல் App ஆகியவற்றினூடாக நேரடி ஒளிபரப்பாக ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இறுதிப்போட்டி இதே மைதானத்தில் ஒக்டோபர் 31 ஆம் திகதியன்று மாலை 4 மணிக்கு இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.