பொருள் விரிவாக்கம்

டயலொக் நிறுவனம் Enterprise Risk Governance ஐ உலகளாவிய ISO 31000 தரநிலைகளுக்கு மேம்படுத்துகிறது

2026 ஜூன் 17         கொழும்பு

 

Quality Austria Central Asia இன் மூலோபாய வணிகப் பணிப்பாளர் நவநாத் எஸ். பெந்துர்கர்; Quality Austria Central Asia Pvt Ltd Sri Lanka இன் பணிப்பாளர் ரஜீவ தந்தநாராயண; Quality Austria Central Asia இன் சான்றளிப்பு மற்றும் பயிற்சிக்கான நாட்டுப் பிரதானி அமித் சிவாஜி படேல்; டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பணிப்பாளரும் குழும முதன்மை நிர்வாக அதிகாரியுமான சுபுன் வீரசிங்க; டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும முதன்மை கார்ப்பரேட் அதிகாரி அசங்க பிரியதர்ஷன மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் நிறுவன இடர், வணிகத் தொடர்ச்சி மற்றும் காப்புறுதி மேலாண்மைப் பிரிவின் மேலாளர் தருஷி ஏகநாயக்க ஆகியோர் புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.

இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது Enterprise Risk Management (ERM) ஆளுமையை (governance) Quality Austria Central Asia Private Limited நிறுவனத்தின் மூலமாக ISO 31000:2018 கோட்பாடுகளுக்கு அமைவாக சுயாதீன சரிபார்ப்பிற்கு (independent validation) உட்படுத்தி வலுப்படுத்தியுள்ளது. இந்த சாதனை, டயலொக் நிறுவனத்தின் விரிவடைந்து வரும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைத் தொகுப்பு முழுவதும் நிலையான வளர்ச்சி, பங்குதாரர்களின் நம்பிக்கை மற்றும் உலகளாவிய ரீதியில் ஒத்திசைந்த இடர் மேலாண்மையை ஆதரிக்கும் அதே வேளையில், நெகிழ்ச்சியான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

டயலொக் இன் risk management தரநிலையானது முறையானது, நிறுவனம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டது மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகிறது என்பதை இந்த சரிபார்ப்பு உறுதிப்படுத்துகிறது. இலங்கையில் ISO 31000 கோட்பாடுகளுக்கு அமைவாக சுயாதீன சரிபார்ப்பை பெற்ற முதல் தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற வகையில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றிற்கான வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய டயலொக் தனது ஆளுமை நடைமுறைகளை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த இடர் ஆளுமையானது, அபாயங்களை நிர்வகிக்கும் முறையை நிறுவனத்தின் உத்தி, திட்டமிடல், செயல்பாடுகள் மற்றும் ஆளுமை ஆகியவற்றில் ஆழமாகப் பதியச் செய்கிறது. மேலும், இணையப் பாதுகாப்பு (cybersecurity), தரவுத் தனியுரிமை, தொழில்நுட்பச் சான்றியிர்ப்பு, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் செயல்பாட்டு சவால்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து நிர்வகிக்க உதவுவதுடன்; 5G, cloud, நிதிநுட்பம் (fintech) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் பாதுகாப்பான மற்றும் விரிவுபடுத்தக்கூடிய புத்தாக்கங்களையும் இது ஆதரிக்கிறது.

இந்த சாதனை குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பணிப்பாளரும் குழும முதன்மை நிர்வாக அதிகாரியுமான சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “ISO 31000 கோட்பாடுகளுக்கு அமைவான இந்த சுயாதீன சரிபார்ப்பு, மீளெழுச்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வலுவான, உலகளாவிய ரீதியில் ஒத்திசைந்த இடர் மேலாண்மை வழிகாட்டுதல்களைப் பேணுவதற்கான டயலொக் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. நாங்கள் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கி முன்னேறும்போது, எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கும், முக்கியமான சேவைகளைப் பாதுகாப்பதற்கும், புத்தாக்கங்களைச் செயல்படுத்துவதற்கும் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் பயனுள்ள இடர் ஆளுமை மிக முக்கியமானது,” என்றார்.

இந்தச் சாதனையானது ஆளுமை, இடர் மேலாண்மை மற்றும் வணிக மீளெழுச்சித் திறன் ஆகியவற்றில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளை டயலொக் நிறுவனம் தொடர்ந்து பின்பற்றி வருவதன் ஒரு பகுதியாகும். நிறுவனம் தழுவிய இடர் மேலாண்மை மூலம், டயலொக் தனது வாடிக்கையாளர்களுக்கான சேவை நம்பகத்தன்மை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை வலுப்படுத்துகிறது; முதலீட்டாளர்களுக்கான ஆளுமை உத்தரவாதத்தை மேம்படுத்துகிறது மற்றும் பொறுப்பான நிறுவன நடைமுறைகள் மற்றும் நெகிழ்ச்சியான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

டயலொக் நிறுவனம் தனது தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைத் தொகுப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதால், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப தனது இடர் மேலாண்மைத் திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் இடர் ஆளுமையைப் பதிப்பதன் மூலமும், வளர்ந்து வரும் அபாயங்களை முன்கூட்டியே கையாள்வதன் மூலமும், டயலொக் நிறுவனம் எதிர்காலத்தில் புத்தாக்கங்களை ஆதரிக்கவும், பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் மற்றும் நெகிழ்ச்சியான, நிலையான வணிகச் செயல்பாட்டை வழங்குவதற்குத் தயாரான நிலையில் உள்ளது.