டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2026 ‘தக்ஷிண பிரபா’ தேசிய வெசாக் வலயத்தின் உத்தியோகபூர்வ டிஜிட்டல் பங்காளராக, இலங்கையின் பிரம்மாண்டமான டிஜிட்டல் வெசாக் அனுபவத்தை மாத்தறைக்குக் கொண்டுவருகிறது
2026 ஜூன் 02 கொழும்பு
இடமிருந்து வலம்: அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்கள், அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் மற்றும் லசந்த தெவரப்பெரும அவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள், VR அனுபவத்தில் இணைந்துகொண்ட போது.
இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் கைகோர்த்து, நாட்டின் வரலாற்றில் மிகப்பிரமாண்டமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட டிஜிட்டல் வெசாக் அனுபவத்தை 'தக்ஷிண பிரபா' தேசிய வெசாக் வலயத்தினூடாக இலங்கை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மாத்தறை நகரை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தக்ஷிண பிரபா வெசாக் விழாவின் 'உத்தியோகபூர்வ டிஜிட்டல் பங்காளராக' செயற்பட்ட டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இம்முறை வெசாக் பண்டிகையை ஆக்கப்பூர்வமாகவும், Dialog 5G Ultra வலையமைப்பினால் பலப்படுத்தப்பட்ட அதிநவீன டிஜிட்டல் பரிமாணங்களின் ஊடாகவும் கொண்டாடுவதற்கு, வெசாக் வலயத்தில் திரண்டிருந்த இலட்சக்கணக்கான இலங்கை மக்களுக்கு வாய்ப்பளித்தது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் மூன்று நாட்கள் இந்த தேசிய வெசாக் வலயம் மிக விமரிசையாக நடைபெற்றது.
இதற்கமைய, மாத்தறை 'தக்ஷிண பிரபா' தேசிய வெசாக் வலயத்தை இதுவரை இல்லாத வகையில் டிஜிட்டல் ஒளியால் ஒளிரச்செய்யும் நோக்கில், அதிவேக Dialog 5G Ultra வலையமைப்பின் மூலம் பலப்படுத்தப்பட்ட 'Dialog 5G Ultra டிஜிட்டல் வலயம்' ஊடாகப் பல புரட்சிகரமான டிஜிட்டல் அனுபவங்கள் மக்களுக்கு நெருக்கமாக்கப்பட்டன.
Dialog 5G Ultra டிஜிட்டல் வலயத்தினூடாக டிஜிட்டல் வெசாக் அனுபவத்துடன் இணைந்துகொண்ட 35,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற, அதிவேக Dialog 5G Ultra வலையமைப்பினால் பலப்படுத்தப்பட்ட விசேட Virtual Reality (VR) அத்தியாயத்தின் மூலம், தம்பதிவ புனித ஸ்தலங்கள், அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதி உட்பட அட்டமஸ்தானங்கள் மற்றும் ஏனைய புனித தளங்களுக்கு நேரில் சென்றது போன்றதொரு உன்னத வழிபாட்டு வாய்ப்பு பௌத்த மக்களுக்குக் கிட்டியது.
இம்முறை தேசிய வெசாக் திருவிழாவுடன் இணைந்த விசேட டிஜிட்டல் தொழில்நுட்பக் கூட்டமைப்பை வெளிப்படுத்தும் வகையில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தினால 'AI டிஜிட்டல் வெசாக் வாழ்த்து அட்டைப் போட்டியும்' நடத்தப்பட்டிருந்தது. 2026 மே 21 முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை தீவு முழுவதிலுமிருந்து பெருமளவிலான படைப்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தனித்துவமான படைப்புகளில் இருந்து, இறுதிச் சுற்றுக்குத் தெரிவான வாழ்த்து அட்டைகள் வெசாக் வலயம் மற்றும் மாத்தறை நகரம் முழுவதும் 20 LED திரைகள் ஊடாக மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அவற்றை மக்கள் தங்களது மொபைல் போன்களில் Download செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடி QR Reload முறையின் மூலம் பலப்படுத்தப்பட்ட 'Dialog Data தன்சல' (Data Dansala) ஊடாக, அவ்வளாகத்திலுள்ள QR குறியீடுகளை (QR Codes) Scan செய்து, இலவசமாக Data-வைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. உன்னத வெசாக் பௌர்ணமி தினத்துடன் தொடர்புடைய தானம் வழங்கும் நற்செயலை நினைவூட்டும் இந்த Data தன்சல்கள், மாத்தறை தேசிய வெசாக் வலயத்திற்கு மேலதிகமாக, கொழும்பு கங்காராம வெசாக் வலயத்திலும், பௌத்தாலோக வெசாக் வலயத்திலும் நடத்தப்பட்டன.
மேலும், இந்த வெசாக் வலயத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் தங்களின் புகைப்படங்களை வழங்கி, அவற்றை செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) பலப்படுத்தப்பட்ட வெசாக் கருப்பொருள் கொண்ட டிஜிட்டல் கார்டுகளாக மாற்றிக்கொள்ளக்கூடிய 'AI Portrait Booth' அனுபவமும் மக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு விசேட அம்சமாக அமைந்தது.
தேசிய வெசாக் வலயம் எங்கும் தனது டிஜிட்டல் தடயங்களைப் பதித்திருந்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டிஜிட்டல் காட்சிப் பலகைகள், அங்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைப் பெரிதும் ஈர்த்திருந்தன. குறிப்பாக, பௌத்த ஜாதகக் கதைகள் AI தொழில்நுட்பத்தின் ஊடாகத் தத்ரூபமாக உயிர்பெற்று விவரிக்கப்பட்டமையானது, நவீன தொழில்நுட்பத்தின் மகிமையுடன் மக்களின் ஆன்மீகப் பற்றையும் சமய பக்தியையும் மென்மேலும் உன்னத நிலைக்கு இட்டுச் சென்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பின்வருமாறு கூறினார்: "தேசிய வெசாக் திருவிழா ஒன்றிற்கு AI தொழில்நுட்பம் இவ்வாறானதொரு முறையில் பயன்படுத்தப்பட்டது இலங்கையில் இதுவே முதல் முறையாகும். இது இம்முறை தக்ஷிண பிரபா வெசாக் திருவிழாவிற்காகவே மேற்கொள்ளப்பட்டது. இது நம் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவம். எமது பழங்கால பௌத்த கதைகளில் உள்ள செய்திகளை AI தொழில்நுட்பத்தின் ஊடாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியமானது. இலங்கையின் டிஜிட்டல் எதிர்பார்ப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான எங்களது முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, மாத்தறை தேசிய வெசாக் வலயத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பலப்படுத்தும் பணியை மிகவும் வெற்றிகரமாகச் செய்வதற்குப் பங்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
Dialog 5G Ultra டிஜிட்டல் வலயத்தை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சார்பில், குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும அவர்களும் கலந்துகொண்டிருந்தார். இந்த தேசிய பணி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: "இலங்கை மக்களின் மிக முக்கியமான மத மற்றும் கலாசார விழாவான வெசாக் பண்டிகையை முன்னிட்டு, மாத்தறையில் நடைபெற்ற 2026 தக்ஷிண பிரபா தேசிய வெசாக் திருவிழாவை மிக விமரிசையாகவும் வெற்றிகரமாகவும் ஏற்பாடு செய்தமைக்காகவும், அதில் பங்களிப்பதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியமைக்காகவும் முதற்கண் இலங்கை அரசாங்கத்திற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இம்முறை 2026 தக்ஷிண பிரபா தேசிய வெசாக் வலயத்தின் உத்தியோகபூர்வ டிஜிட்டல் பங்காளராகச் செயற்படக் கிடைத்தமை எமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும். எங்களது அதிநவீன Dialog 5G Ultra மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாரம்பரிய மத அழகையும் டிஜிட்டல் புத்தாக்கங்களையும் ஒன்றிணைத்து மக்களுக்கு இன்னும் ஒரு சிறப்பான வெசாக் கொண்டாட்டத்தை வழங்க முடிந்ததையிட்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்."
இந்த டிஜிட்டல் யுகத்தில், இலங்கையின் மத மற்றும் கலாசார பாரம்பரியத்தை எதிர்காலத்திற்குக் கொண்டு செல்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம், மாத்தறை தேசிய வெசாக் வலயத்திற்கு மேலதிகமாக, பௌத்தாலோக மற்றும் கங்காராம வெசாக் வலயங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் பலப்படுத்தியிருந்தது. அதனுடன் இணைந்து, கிராமப்புற வழிபாட்டுத் தலங்களை சூரிய சக்தியால் (Solar Power) ஒளிரச் செய்யும் Dialog Sustainable Aloka Pooja திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும அவர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்கள் மற்றும் மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன அவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களை வரவேற்ற போது.
அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் AI வெசாக் வாழ்த்து அட்டை ஒன்றை Download செய்து கொள்ளும் போது.
பொதுமக்கள் AI Portrait அனுபவத்தில் இணைந்து கொண்ட போது.
QR குறியீட்டை Scan செய்து, Data தன்சலவிலிருந்து Data-வைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள்.
வெசாக் வலயத்தில் திரண்டிருந்த பொதுமக்கள், AI தொழில்நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்படடிருந்த ஜாதகக் கதைகளை ரசித்துப் பார்த்த போது.