பொருள் விரிவாக்கம்

Dialog Pay வர்த்தக அமைப்பில் ODEL இணைகிறது

2026 ஆகஸ்ட் 28         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: ஆகிப் ரியால் (தலைவர் - பிராண்ட்ஸ் - மூலோபாயம், சேவைகள் மற்றும் முதன்மை பிராண்ட், குழுமச் சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); ஷவிந்த நெல்சன் (சந்தைப்படுத்தல் முகாமையாளர், ODEL)

இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ODEL நிறுவனத்துடனான தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன்பாற்பட்டு, வாடிக்கையாளர்கள் 10 க்கும் மேற்பட்ட ODEL விற்பனை நிலையங்களைக் கொண்ட வலையமைப்பு முழுவதும் Dialog Pay ஊடாகப் பாதுகாப்பான LankaQR செலுத்துகைகளை மேற்கொள்ள முடியும். ODEL இன் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடை மற்றும் வாழ்வியல் தயாரிப்புகளுடன், பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண வசதியையும், தகுதியான ஒவ்வொரு LankaQR பரிவர்த்தனைக்கும் இலவச Dialog டேட்டாவையும் வழங்கி இக்கூட்டாண்மையானது வாடிக்கையாளர்களின் பிரீமியம் கொள்முதல் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது.

வாடிக்கையாளர்கள் இப்போது ODEL இன் பரந்த அளவிலான ஆடை வகைகள், காலணிகள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பரிசுகள் மற்றும் வாழ்வியல் பிராண்டுகளைக் கொள்முதல் செய்ய Dialog Pay ஐப் பயன்படுத்த முடியும். இக்கூட்டாண்மையானது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் கட்டணங்களைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், கூடுதல் நெகிழ்வுத்தன்மையுடனும் சலுகைகளுடனும் ஒட்டுமொத்த கொள்முதல் அனுபவத்தை உயர்த்துகிறது.

இக்கூட்டாண்மை குறித்து ODEL இன் சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு. ஷவிந்த நெல்சன் கருத்துத் தெரிவிக்கையில்: "ODEL இல், எங்களது வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தனித்துவமான பிராண்டுகள், தேர்வுகள் மற்றும் அனுபவங்களை ஒன்றுதிரட்டி சில்லறை விற்பனை அனுபவத்தை மேம்படுத்தவே நாங்கள் எப்போதும் முயன்று வருகிறோம். மக்களின் கொள்முதல் முறைகள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், டிஜிட்டல் வசதியானது அந்த அனுபவத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாறுகிறது. Dialog Pay உடனான எங்களது இக்கூட்டாண்மை, ODEL இன் ஆடை மற்றும் வாழ்வியல் தயாரிப்புகளுக்குப் பாதுகாப்பான மற்றும் நன்மை பயக்கும் கட்டண முறையைச் சேர்ப்பதுடன், வாடிக்கையாளர்களுடனான எங்கள் தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் அவர்களுக்கு கூடுதல் மதிப்பைக் கொண்டுவரவும் உதவுகிறது," எனக் குறிப்பிட்டார்.

Dialog Pay App மற்றும் MyDialog App ஆகியவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் Dialog Pay, தொடர்புச் சேவை, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே சேவை அமைப்பின்கீழ் கொண்டுவருகிறது. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் கட்டணங்களை எளிமையானதாகவும், இலகுவாக அணுகக்கூடியதாகவும், அதிக நன்மைகளைத் தருவதாகவும் மாற்றும் Dialog இன் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay ஐ எளிதாகச் செயல்படுத்த முடியும். இதன் மூலம் பாதுகாப்பான LankaQR கட்டணங்களைச் செலுத்தவும், பணப் பரிமாற்றம் செய்யவும், Digital wallet ஐ அணுகவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளைத் திறக்கவும், Dialog Finance மூலம் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

நாடு முழுவதும் 100,000 க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதியான QR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவை வழங்கிப் பயனர்களை ஊக்கப்படுத்துகிறது. இது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், ரொக்கப் பயன்பாடு குறைந்த, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கும் ஆதரவளிக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு https://dialog.lk/dialog-pay என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.